Pages

Saturday, March 19, 2016

மணம் வீசும் கூந்தல்

மணம் வீசும் கூந்தல் அழகான நீண்ட கூந்தல் மட்டும் இருந்தால் போதாது. அது நன்கு நறுமணத்துடனும் இருக்க வேண்டும். அப்படி கூந்தலை நறுமணத்துடன் வைப்பது அவ்வளவு எளிதல்ல.

பொதுவாக கூந்தலை சரியாக அலாசாவிட்டால் கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசும். ஏனெனில் வியர்வையானது நீண்ட நாட்கள் தலையில் தங்கினால் அவை துர்நாற்றத்தை ஏற்படுத்தி, கூந்தல் நுனியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். 
அதுமட்டுமல்ல கூந்தலில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு ஹேர் பேக்குகள் கூட காரணமாக இருக்கலாம். உதாரணமாக முட்டை கூந்தலுக்கு நல்லது என்று பயன்படுத்தியபிறகு கூந்தலில் இருந்து முட்டையின் துர்நாற்றமானது வீசும்.
ஆகவே இந்த மாதிரி ஹேர் பேக்குகளை போட்ட பிறகு கூந்தலின் நறுமணத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அதிலும் இயற்கை பொருட்களை கொண்டு கூந்தலின் நறுமணத்தை அதிகரிப்பதுதான் நல்லது.

  • செம்பருத்தி எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. அதனை தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் கருமையடைவதுடன், மயிர்க்கால்களும் நன்கு வலிமையாகும். மேலும் செம்பருத்தி எண்ணையில் நல்ல நறுமணம் இருப்பதால், கூந்தலின் மனம் அதிகரிக்கும்.
  • ஹென்னா பொடியை பயன்படுத்தினால் நரை முடியானது நிறம் மாறுவதுடன், கூந்தலும் நல்ல நறுமணத்துடன் இருக்கம்.
  • கொதிக்கும் நீரில் தேயிலையை போட்டு கொதிக்கவிட்டு, பின் அதனை வடிகட்டி, அந்த நீரை கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
  • எலுமிச்சையை கூந்தலுக்கு பயன்படுத்தினால், நறுமணமாக இருப்பதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும்.எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலில் தடவி ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.
  • ரோஸ் வாட்டர் கூந்தலுக்கு பெரிய நன்மையை அளிக்கவிட்டாலும், இதை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் நறுமணத்துடன் இருக்கும். அதோடு ரோஸ் வாட்டர் சருமத்திற்கு சிறந்தது.
  • நறுமணமிக்க எண்ணையை பயன்படுத்தினால் கூந்தல் வாசனையை அதிகரிக்கலாம். அதிலும் மல்லிகை எண்ணையை கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால் கூந்தல் நறுமணத்துடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
  • வெப்பத்தை தவிர்த்து, குளிர்ச்சியான இடங்களில் இருப்பதும் கூந்தல் நறுமணத்திற்கு வழிவகுக்கும்.

No comments: