Pages

Showing posts with label பெண்களின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் இயற்கை பொருட்கள். Show all posts
Showing posts with label பெண்களின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் இயற்கை பொருட்கள். Show all posts

Thursday, March 17, 2016

பெண்களின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும் இயற்கை பொருட்கள்

valaipoo க்கான பட முடிவு
பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்கவும் ஸ்லிம்மாக இருக்கவும், இயற்கையாக கிடைக்கும் கீழ்க்கண்ட பொருட்களை உணவாக அடிக்கடியோ, தினமுமோ சேர்த்து வரலாம்.

வெந்தயக்கீரை சப்பாத்தி

வெந்தயக்கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்தில் பிசையவும். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை சேர்த்துப் பிசையவும். இதனை வழக்கமான சப்பாத்தி போல போட்டு எடுக்கலாம். வித்தியாசமான நிறத்தில் இருக்கும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

வாழைப்பூ குழம்பு

வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து பொடியாக நறுக்கி வைக்கவும். அத்துடன் உப்பு தண்ணீர் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்புக்குத் தேவையான அளவு புளிக்கரைசல் தயாரிக்கவும். சீரகத்தை தனியாக நல்லெண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டு, வறமிளகாய் ஆகியவற்றையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை புளிக் கரைசலில் போட்டு வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.இதன் மூலம் கொழுப்பு குறைந்து தேவையற்ற சதைகளை குறைத்து ஸ்லிம்மாக மாற்றும்.

அன்னாசி பழ பச்சடி

அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி கொத்தமல்லித் இலை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இதுவும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.