Pages

Thursday, May 7, 2015

உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

* பயிற்சியாளரின் உதவியுடன் முறையாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலத்தைச் சேர்க்குமே தவிர, பாதிப்பைத் தராது. தொடைப் பகுதிக்காகச் செய்யப்படும் பயிற்சிகள் கடினமானவை. அதனால், சிலர் கடினமான தசைப்பயிற்சிகளை விரும்ப மாட்டார்கள். அது தவறு.

* சிலர் இடுப்புக்கு மேல்பகுதி பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டு, தொடைப்பயிற்சியை வேண்டாம் என்பார்கள். இதன் மூலம் வலுவான தசைகளைக் கொண்ட, இடுப்புக்கு மேல்பகுதியை தாங்கும் சக்தி கால்களுக்கும், தொடைகளுக்கும் இல்லாமல்போகும். குச்சி போன்ற தோற்றத்தை அளிக்கும். இதுவும் முற்றிலும் தவறானது.

* சிலர் ஆர்ம்ஸ் மட்டும் வலுவாக இருந்தால்போதும் என நினைத்து, அதற்கான பயிற்சிகளை மட்டுமே செய்வார்கள். இந்த அணுகுமுறையும் தவறானது. ஆர்ம்ஸ்க்கு மட்டும் பயிற்சிகள் செய்து மற்ற தசைகளுக்குப் பயிற்சிகளைச் செய்யாமல்விட்டால் அது சீரற்ற உடல் தோற்றத்தைத் தரும். எனவே எல்லாத் தசைகளுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டியது அவசியம்.

* பாடிபில்டர்களுக்கான பயிற்சிகள் இது என எதுவுமே இல்லை. எல்லாப் பயிற்சிகளையும் ஆண், பெண் இருபாலரும் செய்யலாம்.   ஒரு பாலினத்தினருக்கு மட்டும் எனத் தனியாக எந்தப் பயிற்சியும் இல்லை.

* உடலின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொழுப்பு இருக்கிறது என்று அதற்குரிய பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டாலும், கொழுப்பைக் குறைத்துவிட முடியாது. மொத்த உடலுக்குமான பயிற்சிகள் செய்யும்போதுதான், உடலில் உள்ள மொத்த கொழுப்பும் கரையும்.

* ஜிம்முக்கு செல்லும் முன்பு சுத்தமாகச் சாப்பிடாமல் இருக்கவும் கூடாது. வயிறுமுட்ட சாப்பிடவும் கூடாது. நாம் எந்தப் பயிற்சிகளைச் செய்யப்போகிறோம், அதற்கு எந்த அளவுக்கு எரிபொருள் தேவை என்பதை அறிந்துகொண்டு, எடையைக் குறைக்கப்போகிறோமா, அதிகரிக்கப்போகிறோமா என்பதையும் கருத்தில்கொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொண்டுவிட்டு, ஜிம்முக்குச் செல்ல வேண்டும்.

* இந்த நேரத்தில்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த நேரமும் பயிற்சிகள் செய்யலாம்.

* பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன்னர் சாப்பிடுவதைபோல பயிற்சி முடிந்த பிறகும், நீங்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகளின் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு உணவுகளை உட்கொள்ளலாம். அவை புரதச் சத்து நிறைந்த உணவாக இருத்தல் சிறப்பு.

பெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்வது எப்படி?


 gold jewellery designs க்கான பட முடிவு

தங்க ஆபரணங்களை தனித்தனி பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரே பெட்டியில் ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால் நகைகளில் கீறல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் பெறுமதி குறைவதோடு நிறமும் மங்கி விடும்.

நீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து, காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.

பொதுவாகவே ஒல்லியும், உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும். அகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள். குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.

குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன் இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும். மெல்லிய சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும்.

மெல்லிய, நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால் இன்னும் அழகாக இருக்கும். கழுத்தைச் சுற்றி செயின் படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள் பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும்.

அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்.சிவப்பு நிறம் உள்ளவர்கள்: ரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.

கறுப்பு நிறம் உள்ளவர்கள்: வைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்! முத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும். அதிகப்படியான நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு, மெலிதான செயினில்

பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல் மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும். முத்து செட்டும் அம்சமாக இருக்கும். தங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள். ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள்.

பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும். சிம்பிள் புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம்.  இது எல்லோருக்குமே பொருந்தும். 

டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங், அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை வண்ணங்கள்.

கேசர் பாதாம் குல்ஃபி



kesar padam kulpi க்கான பட முடிவு

தேவையானவை:

  • பால் - ஒரு லிட்டர்

  • க்ரீம் (Fresh Cream) - 4 தேக்கரண்டி

  • பாதாம் - 5

  • பிஸ்தா - 5

  • முந்திரி - 4

  • குங்குமம் பூ - ஒரு தேக்கரண்டி

  • சர்க்கரை - ஒரு கப்
செய்முறை:

பாதாம், பிஸ்தா, முந்திரி மூன்றையும் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ச்சிய பாலிலிருந்து 5 தேக்கரண்டி அளவு பாலை எடுத்து அதனுடம் ஒரு தேக்கரண்டி குங்குமப்பூவை கலந்து தனியாக எடுத்து வைக்கவும். பாலை அடிபிடிக்க விடாமல் நன்கு கிளறிக் கொண்டேயிருக்கவும்.

சிறு தீயில் வைத்துக் காய்ச்சவும். பாலில் 4 தேக்கரண்டி க்ரீம்மை கலக்கவும். பால் கெட்டியாகி பாதி அளவு வந்தவுடன், பொடி செய்து வைத்துள்ள ஏலக்காய், பொடி செய்த பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். அதன் பின்னர் தனியாக கலந்து வைத்துள்ள குங்குமப்பூ பாலை சேர்த்து நன்கு கிளறி கலவை சற்று திக்கானதும் அடுப்பை அணைக்கவும்.

கேசர் பாதாம் கலவையை தனியாக வைத்து நன்கு ஆற விடவும். ஆறியதும் குல்ஃபி மோடில் ஊற்றவும். இந்த கலவையை சிறிய பானையில் ஊற்றி மேலே பாயில் பேப்பர் சுற்றி இரண்டையும் 4 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். குல்ஃபி நன்கு கெட்டியாகி செட்டானதும் எடுத்து பரிமாறவும். சுவையான கேசர் பாதாம் குல்ஃபி ரெடி.

Wednesday, May 6, 2015

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?


 இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?
உங்கள் தோலுக்கு பொருத்தமாக இந்த இரவு கிரீமை தேர்வு செய்தல் மிக முக்கியமானது ஆகும். கீழே ஒரு சில குறிப்புகள் உள்ளன: நீங்கள் ஒரு இரவு கிரீம் தேர்ந்தெடுக்கும் போது, கிரீம் மிகவும் அடர்த்தியாக இல்லாமால் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

ஒரு தடித்த இரவு கிரீம் உங்கள் தோலின் துளைகளை திணற வைக்கிறது. இதனால் உங்கள் தோல் மூச்சு விடுவதற்கு கடினமாகிறது. நீங்கள் ஒரு இரவு கிரீம் தேர்வு செய்யும் போதெல்லாம், அது அதிக‌ வாசனை இல்லாமலும் மற்றும் ஒவ்வாமை குறைவானதாக இருப்பதையும் உறுதி செய்யுங்கள். எப்படி இதை உபயோகப்படுத்துவது? நீங்கள் விரும்பும் வழியில் உங்கள் இரவு கிரீமை அப்பிளை செய்ய வேண்டாம்.

அது ஒரு பயனுள்ள தாக்கம் இல்லாமல் இருக்கலாம். கீழே உங்கள் முகத்தில் இரவு கிரீமை அப்பிளை செய்வதற்கான செயல்முறை எப்படி என்பதை பார்ப்போம்.

1. நீங்கள் உங்கள் இரவு கிரீமை அப்பிளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.

2. கிரீமை ஒரு நாணயத்தின் அளவு எடுத்து. உங்கள் முகம் மீது அதை துடைக்கவும்.

3. உங்கள் தோலில் கிரீமை மேல்நோக்கி, வட்ட திசையில் மசாஜ் செய்யவும்.

4. உங்கள் கண் இமைகளுக்கு இரவு கிரீமை போட வேண்டாம்.

நீங்கள் வீட்டிலேயே உங்கள் இரவு கிரீமை செய்ய முடியும். நீங்கள் அரை ஆப்பிள் எடுத்து. அதன் தண்டை நீக்கி மசித்து கொள்ளவும். பின்னர் ஆலிவ் எண்ணெய் 1 கப்பில் எடுத்துக் கொண்டு இந்த கலவையை நன்றாக கலக்கவும். ஒரு கிண்ணத்தில் இந்த கலவையை ஊற்றி. ஒரு இரட்டை கொதிகலனில் அதை வைத்து அது சூடாக மாறும் வரை கலவையை வெப்பத்தில் வைத்து, கலவை சூடான பிறகு, கொதிகலனில் இருந்து எடுத்து அதை குளுமையாக்க வேண்டும்.

இது பசை போல ஒட்டும், அதனால் தண்ணீர் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். உங்கள் இரவு கிரீம் இப்போது தயாராக இருக்கிறது! இதை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து பயன்படுத்த‌ முடியும். 

பப்பாளி செய்யும் மாயம் என்ன?




பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பப்பாளி க்கான பட முடிவு
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.  

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும்.

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.

பெண்களுக்கு வசீகர முகத்தை தரும் பத்மாசனம்


 பெண்களுக்கு வசீகர முகத்தை தரும் பத்மாசனம்

தாமரை மலர் போன்று எப்பொழுதும் மலர்ந்த முகமாய் காட்சியளிக்க இந்த ஆசனம் உதவுகிறது. தண்ணீரின் அழுத்தத்தை தாண்டி தாமரை மலர் கம்பீரமாய் தனது இதழ்களை விரித்து காட்சியளிப்பது போல் முகமானது மிகவும் கம்பீரமாக காட்சியளிக்க பத்மாசனம் ஒரு கருவியாக இருக்கிறது.

தாமரை மலர் தனது தண்டை நிமிர்த்தி தண்ணீரிலிருந்து நிற்பது போல், பத்து விரல்களையும் விரித்து முத்திரை பதித்து மலர்ந்த முகத்துடன் அமரும் முறையே பத்மாசனம். பத்மாசனம் செய்வதற்கு தளர்ந்த, மென்மையான, ஆடைகளை அணிய வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட தரைவிரிப்பு நல்லது. இந்த விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும்.  


முதலில் வலது காலை மடித்து, வலது பாதத்தை இடது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இடது காலை மடித்து இடது பாதத்தைத வலது தொடை மீது வயிற்றை ஒட்டியவாறு வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கை மற்றும் நீட்டிய விரல்கள் வெளியில் தெரியுமாறு புறங்கையை வலது முழங்கால் மற்றும் இடது புறங்கையை இடது முழங்காலின் மீது கைகளின் பெருவிரல் நுனி மற்றும் ஆட்காட்டி விரல் நுனியை வட்டமாக தொட்டு, இரண்டு கைகளிலும் சின் முத்திரை பதிக்கவும்.

நெஞ்சு மற்றும் முதுகுத்தண்டை நிமிர்த்தி, கண் இமைகளை மூடி, சீரான சுவாசத்தில் மனதை அலைபாயவிடாமல் வேறு எந்த சிந்தனை குறுக்கீடும் இன்றி இருக்கவும். சின் முத்திரை பிடித்து கைகளை மடிக்காது நேராக வைக்கவும்.

ஒரு நிமிடம் வரை இந்தப் பயிற்சியை செய்து பின் கண் இமைகளை திறந்து மெதுவாக கைவிரல்களை விடுவித்து அதன்பின் இடது காலை முதலிலும், வலது காலை அடுத்தும் பிரித்து கால்களை நீட்டி பத்மாசனத்திலிருந்து விடுபட வேண்டும். இது போல் 15 முதல் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்யுங்கள். 

பலன்கள் :

பத்மாசனம் அனைத்து ஆசனங்களுக்கும் அடிப்படையான ஒரு ஆசனமாக இருக்கிறது. இந்த பயிற்சியால் பெண்களின் இடுப்பு பகுதி மற்றும் முழங்கால்கள் வலுவடைகிறது. மனம் அமைதி பெறுகிறது. தொடை, இடுப்பு மற்றும் உடலின் தேவையில்லாத கொழுப்பு கரைகிறது. கூன் முதுகு வராமல் தடுக்கிறது. பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் கூட எளிதாக செய்து அதிக பலன்களை பெறக்கூடிய ஆசனம் இது.

கண்களில் சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் சமையலறைப் பொருட்கள்


 கண்களில் சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் சமையலறைப் பொருட்கள்

சமையலறையில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டே கருவளையங்களைப் போக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

• தக்காளியை அரைத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் மறைந்துவிடும்.

• உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது வட்டமாக வெட்டியோ கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வர கருவளையம் காணாமல் போகும்.

• க்ரீன் டீ பேக்கை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த டீ பேக்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கருவளையம் மறைவதோடு, கண்களும் புத்துணர்ச்சி பெறும்.