Pages

Showing posts with label கேசர் பாதாம் குல்ஃபி. Show all posts
Showing posts with label கேசர் பாதாம் குல்ஃபி. Show all posts

Thursday, May 7, 2015

கேசர் பாதாம் குல்ஃபி



kesar padam kulpi க்கான பட முடிவு

தேவையானவை:

  • பால் - ஒரு லிட்டர்

  • க்ரீம் (Fresh Cream) - 4 தேக்கரண்டி

  • பாதாம் - 5

  • பிஸ்தா - 5

  • முந்திரி - 4

  • குங்குமம் பூ - ஒரு தேக்கரண்டி

  • சர்க்கரை - ஒரு கப்
செய்முறை:

பாதாம், பிஸ்தா, முந்திரி மூன்றையும் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ச்சிய பாலிலிருந்து 5 தேக்கரண்டி அளவு பாலை எடுத்து அதனுடம் ஒரு தேக்கரண்டி குங்குமப்பூவை கலந்து தனியாக எடுத்து வைக்கவும். பாலை அடிபிடிக்க விடாமல் நன்கு கிளறிக் கொண்டேயிருக்கவும்.

சிறு தீயில் வைத்துக் காய்ச்சவும். பாலில் 4 தேக்கரண்டி க்ரீம்மை கலக்கவும். பால் கெட்டியாகி பாதி அளவு வந்தவுடன், பொடி செய்து வைத்துள்ள ஏலக்காய், பொடி செய்த பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். அதன் பின்னர் தனியாக கலந்து வைத்துள்ள குங்குமப்பூ பாலை சேர்த்து நன்கு கிளறி கலவை சற்று திக்கானதும் அடுப்பை அணைக்கவும்.

கேசர் பாதாம் கலவையை தனியாக வைத்து நன்கு ஆற விடவும். ஆறியதும் குல்ஃபி மோடில் ஊற்றவும். இந்த கலவையை சிறிய பானையில் ஊற்றி மேலே பாயில் பேப்பர் சுற்றி இரண்டையும் 4 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். குல்ஃபி நன்கு கெட்டியாகி செட்டானதும் எடுத்து பரிமாறவும். சுவையான கேசர் பாதாம் குல்ஃபி ரெடி.