Pages

Friday, April 17, 2015

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா


 kathirikai murungakkai masala க்கான பட முடிவு
தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் 
முருங்கைக்காய்
குடைமிளகாய்
மிளகு தூள்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
தனியா தூள்
தேங்காய் பேஸ்ட் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய்
புளி கரைசல்
வெங்காயம் - 1 கைப்பிடி
தக்காளி இஞ்சி பூண்டு விழுது
கடுகு காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி

செய்முறை :

* காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

* அடுத்து இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* தக்காளியை சேர்த்து நன்கு கிளரவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும் கத்தரிக்காய், முருங்கைக்காய், குடை மிளகாய், போட்டு கிளரி மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பு கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.     

* சிறிது  தண்ணீர் சேர்த்து கிளறவும்.

* புளி கரைசல் சேர்க்கவும்.

* காய்கறிகள் நன்கு வெந்தவுடன் தேங்காய விழுதை சேர்க்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். 

சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் ஸ்கரப்கள்


 
சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் இருந்தால், அவை சருமத்தை கருமையாக வெளிக்காட்டும். நீங்கள் பளிச்சென காட்சியளிக்க

தினமும் ஃபேஷியல் செய்ய வேண்டும். அதிலும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே அன்றாடம் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். இதனால் முகம் பொலிவடைவதுடன் செலவும் மிச்சமாகும்.

காபி தூளில் சிறிது ஆலிவ் ஆயில், தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பளிச்சென மாறும்.

பப்பாளியை மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, விரலால் மென்மையாக முகத்தை ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

தக்காளியை மசித்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு தினமும் முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை குளிர வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு, முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பளிச்சென்று மாறும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.

பாதாமை ஒன்றி
ண்டாக அரைத்து அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும். 

Wednesday, April 15, 2015

உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்


 lips க்கான பட முடிவு

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு  உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி  அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இப்போது மேட் பினிஷ்  லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். தினமும் நெய் அல்லது வெண்ணெயை  உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம்  பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும்,  மென்மையாகவும் மாறும். கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

பழஞ்சோறு (பழைய சோறு / பழைய சாதம்)

 pazhaya satham க்கான பட முடிவு

பலர் நேற்றைய சாதம் அதிகமாகிவிட்டால் அதை வீண் எனவும் உடலுக்கு கெடுதல் எனவும்  கருதுகிறார்கள். ஆனால் பழைய சோறு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் அபாரமான நோய் எதிர்ப்பு (B6, B12) சக்தி உள்ளது. 
கிராமப்புறங்களில் இன்றும் நேற்றைய சோற்றை வீணாக்குவதில்லை. 

எப்படி பழைய சோற்றை சாப்பிடுவது?
இரவு சோறு அதிகமாகி மீதம் வந்துவிட்டால் கவலைப்படாமல் அச்சோறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக கிளறி மூடி வைத்துவிடவும். (வெந்நீர் வேண்டாம். பச்சைத்தண்ணீர் போதும்)அடுத்த நாள் காலையில் இதை தாராளமாக உண்ணலாம். தேவைக்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இச்சோற்றில் குடலுக்கு ஆரோய்க்கியம் தரும் நிறைய உயிர் சத்துகள் உள்ளன. அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. இச்சோற்றுடன் தொட்டுக்க நாம் சாதாரணமாக பயன்படுத்தும் எந்த கூட்டும் சாப்பிடலாம் என்றாலும் கிராமப்புறங்களில் கூட்டு இல்லை என்றால் பச்சை மிளகாயையோ, சின்ன உள்ளியை உப்புடன் சேர்த்தோ, மோர் சேர்த்தோ, அல்லது உப்பும் புளியும் கலவை செய்தோ சாப்பிடுவார்கள்.


கரித்துணி சுத்தம் ரொம்ப முக்கியம்!

kitchen cleaning cloth க்கான பட முடிவு

சமையலறை என்றதுமே, தீர்ந்துபோன காஸ் சிலிண்டருக்கு, முன்கூட்டியே புக் செய்வதும், விலைவாசி உயர்வால் வாங்க மறுக்கும் காய்கறிகள் குறித்தும்தான், எல்லோருக்கும் நினைவிற்கு வரும். நாள் முழுவதும் பெண்கள் கையிடுக்கில் பற்றிக்கொண்டேயிருக்கும் டவல்களை பற்றி, யாரும் பெரிதாக கவலைப்படுவதாய் தெரியவில்லை.

சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களில் மிகவும் முக்கியமானதும், எளிதில் அசுத்தமடைந்து, கெட்ட நாற்றத்தை அடைவதும் இந்த கரித்துணிதான். இவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காவிடில், பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். எப்படியெல்லாம் சமையலறை டவல்களை, சுத்தமாக பராமரிப்பது என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. டவலை சுத்தப்படுத்துவதற்கு, நல்ல தரமான சலவைத் தூளை உபயோகிக்க வேண்டும் என்பதை, நினைவில் கொள்ள வேண்டும். நுண்ணுயிரிகளை கொல்லும் திறன் உள்ள டிடர்ஜன்ட்களை உபயோகிக்க வேண்டும்.

இவை பூஞ்சைகளின் உருவாக்கத்தை தடை செய்து, டவலில் உள்ள கெட்ட நாற்றத்தையும் வெளியேற்றுகிறது. டவலை துவைத்த பின், நன்கு உலர வைக்க வேண்டும். அப்படியே நீரோடு விட்டு விடக் கூடாது. இதனால், கிருமிகள் மீண்டும் அவற்றில் பெருகி விட வாய்ப்புள்ளது. பொதுவாக வெண்ணிற காட்டன் டவல்களை உபயோகிப்பது நல்லது. சிலர் அவை விரைவில் அழுக்காகி விடும் என நினைப்பர். அதில் உள்ள கறை, தெளிவாக தெரியும். கலர் துணிகளில் அழுக்கு எளிதில் தெரியாது. வெண்மையை எளிதில் வெளுத்து பளீச்சென்று ஆக்கி விடலாம். ஆனால் வண்ணத் துணிகள் கடுமையான சலவைக்கு பின், சாயம் போய் விடுகிறது.

சமையலறையில் பயன்படுத்தும் துண்டை, சுடு தண்ணீரால் சுத்தம் செய்வது கட்டாயமான ஒன்று. இதற்கு பிறகு ப்ளீச்சை உபயோகப்படுத்தலாம்.

இதிலிருந்து வரும் கெட்ட நாற்றத்தை போக்கி, புதிய வாசனையை அது உங்களுக்கு தரும். வினிகர் அல்லது பேக்கிங் சோடா போன்றவற்றை, இதற்கு மாற்றாக உபயோகிக்கலாம். இதை சேர்த்து உபயோகிக்கக் கூடாது. சமையலறையில் பயன்படுத்தும் துண்டை துவைப்பதற்கு, நல்ல ஸ்பாட் அல்லது கறை தூய்மையாக்கியை உபயோகிக்கலாம். சோடியம் பை கார்பனேட்டில் இரவு முழுவதும் துணியை ஊற வைக்கவும்.

இந்த சேர்க்கை மணம், சுற்றி இருக்கும் காற்றோட்ட பகுதியில், கெட்ட வாசனையை ஏற்படுத்துகிறது. பிறகு இதை இயந்திரத்தில் துவைத்து, காயும் வரை தொங்க விட வேண்டும். இதற்கு பிறகு, சமையலறை துண்டு, நறுமணத்துடன் காணப்படும். சமையலறை துண்டை தினமும் துவைக்க வேண்டும். இரவு முழுவதும் காய வைக்க வேண்டும். இது கண்டிப்பாக நுண்ணிய உயிரினங்கள் மற்றும் வைரஸ்களை தூர தள்ளிவைக்க உதவுகிறது. இதன் மூலம், கரித்துணியை ஆரோக்கியமானதாகவும் சுத்தமானதாகவும் வைக்கலாம். 

உடல் எடையை குறைக்க இயற்கை முறைகள்

உடல் எடையை குறைக்க இயற்கை முறைகள்

உடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம்.

* வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.

* ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளை கரைக்கிறது.

* மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இதை தவிர்ப்பது நல்லது.

* ஒரு நாளைக்கு 10 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

* எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க வேண்டாம், அவ்வாறு தவிர்ப்பதால் நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேளைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.

* பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டு பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

* பாதாம் பருப்பு நாளொன்றுக்கு 7 முதல் 10 வரை எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்க உதவுகிறது.

* கீரைகளில் அதிகப்படியான வைட்டமின், மினரல்ஸ் மற்றும் பைபர் சத்துக்கள் உள்ளதால் தினம் ஒரு கீரை எடுத்து கொள்ளலாம்.

* கீரின் டீ உடல் எடையை குறைக்கும்.

* பெரும்பாலான மக்கள் பொரித்த உணவு பொருட்களை அதிகம் விரும்புவார்கள். எனவே அதை குறைத்து கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பை தவிர்க்கலாம்.

* தானியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.

* காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* அரிசி மற்றும் கிழங்கு பொருட்களில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை, ஓட்ஸ், பாஸ்தா, ராகி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

* சாப்பிட்ட பின் உறங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதியாக குறைந்து விடும்.
 

கொள்ளு பொடி


 kollu podi க்கான பட முடிவு

தேவையான பொருட்கள் :

கொள்ளு - 1 கப்

துவரம் பருப்பு - கால் கப்

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• கொள்ளுவை பத்து நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு வறுத்திடுங்கள். பின் துவரம் பருப்பை வறுக்க வேண்டும்.

• மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போன்றவைகளையும் வறுத்து கொள்ளவும்.

 ஆறிய பிறகு மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

•  இதை ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் கலந்து இட்லி, தோசையுடன் சேர்த்து சுவையுங்கள். சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெயுடன் இந்த பொடியையும் கலந்து சாப்பிடலாம்.