Pages

Showing posts with label சோடியம் பை கார்பனேட். Show all posts
Showing posts with label சோடியம் பை கார்பனேட். Show all posts

Wednesday, April 15, 2015

கரித்துணி சுத்தம் ரொம்ப முக்கியம்!

kitchen cleaning cloth க்கான பட முடிவு

சமையலறை என்றதுமே, தீர்ந்துபோன காஸ் சிலிண்டருக்கு, முன்கூட்டியே புக் செய்வதும், விலைவாசி உயர்வால் வாங்க மறுக்கும் காய்கறிகள் குறித்தும்தான், எல்லோருக்கும் நினைவிற்கு வரும். நாள் முழுவதும் பெண்கள் கையிடுக்கில் பற்றிக்கொண்டேயிருக்கும் டவல்களை பற்றி, யாரும் பெரிதாக கவலைப்படுவதாய் தெரியவில்லை.

சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களில் மிகவும் முக்கியமானதும், எளிதில் அசுத்தமடைந்து, கெட்ட நாற்றத்தை அடைவதும் இந்த கரித்துணிதான். இவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்காவிடில், பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். எப்படியெல்லாம் சமையலறை டவல்களை, சுத்தமாக பராமரிப்பது என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. டவலை சுத்தப்படுத்துவதற்கு, நல்ல தரமான சலவைத் தூளை உபயோகிக்க வேண்டும் என்பதை, நினைவில் கொள்ள வேண்டும். நுண்ணுயிரிகளை கொல்லும் திறன் உள்ள டிடர்ஜன்ட்களை உபயோகிக்க வேண்டும்.

இவை பூஞ்சைகளின் உருவாக்கத்தை தடை செய்து, டவலில் உள்ள கெட்ட நாற்றத்தையும் வெளியேற்றுகிறது. டவலை துவைத்த பின், நன்கு உலர வைக்க வேண்டும். அப்படியே நீரோடு விட்டு விடக் கூடாது. இதனால், கிருமிகள் மீண்டும் அவற்றில் பெருகி விட வாய்ப்புள்ளது. பொதுவாக வெண்ணிற காட்டன் டவல்களை உபயோகிப்பது நல்லது. சிலர் அவை விரைவில் அழுக்காகி விடும் என நினைப்பர். அதில் உள்ள கறை, தெளிவாக தெரியும். கலர் துணிகளில் அழுக்கு எளிதில் தெரியாது. வெண்மையை எளிதில் வெளுத்து பளீச்சென்று ஆக்கி விடலாம். ஆனால் வண்ணத் துணிகள் கடுமையான சலவைக்கு பின், சாயம் போய் விடுகிறது.

சமையலறையில் பயன்படுத்தும் துண்டை, சுடு தண்ணீரால் சுத்தம் செய்வது கட்டாயமான ஒன்று. இதற்கு பிறகு ப்ளீச்சை உபயோகப்படுத்தலாம்.

இதிலிருந்து வரும் கெட்ட நாற்றத்தை போக்கி, புதிய வாசனையை அது உங்களுக்கு தரும். வினிகர் அல்லது பேக்கிங் சோடா போன்றவற்றை, இதற்கு மாற்றாக உபயோகிக்கலாம். இதை சேர்த்து உபயோகிக்கக் கூடாது. சமையலறையில் பயன்படுத்தும் துண்டை துவைப்பதற்கு, நல்ல ஸ்பாட் அல்லது கறை தூய்மையாக்கியை உபயோகிக்கலாம். சோடியம் பை கார்பனேட்டில் இரவு முழுவதும் துணியை ஊற வைக்கவும்.

இந்த சேர்க்கை மணம், சுற்றி இருக்கும் காற்றோட்ட பகுதியில், கெட்ட வாசனையை ஏற்படுத்துகிறது. பிறகு இதை இயந்திரத்தில் துவைத்து, காயும் வரை தொங்க விட வேண்டும். இதற்கு பிறகு, சமையலறை துண்டு, நறுமணத்துடன் காணப்படும். சமையலறை துண்டை தினமும் துவைக்க வேண்டும். இரவு முழுவதும் காய வைக்க வேண்டும். இது கண்டிப்பாக நுண்ணிய உயிரினங்கள் மற்றும் வைரஸ்களை தூர தள்ளிவைக்க உதவுகிறது. இதன் மூலம், கரித்துணியை ஆரோக்கியமானதாகவும் சுத்தமானதாகவும் வைக்கலாம்.