Pages

Thursday, November 27, 2014

சுகபிரசவத்துக்கு உதவும் வளைகாப்பு!

வளைகாப்பு கர்ப்பிணிக்கு உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் தரும். கர்ப்பிணியை தனித்துவமாகவும், சந்தோஷமாகவும், வைக்கும். கர்ப்பிணிகளுக்கு வளையல் போடுவதன் மூலம், எளிதாக பிரசவம் ஆகும் என, ஆரைய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்றும் அழைப்போம்.

கர்ப்பிணி வீட்டார் பலரையும் இவ்விழாவிற்கு அழைப்பார்கள். அவர்கள் பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்கள் போட்டு விடுவார்கள். கர்ப்பிணி எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் வேண்டுதலாக இருக்கும். இது போன்ற நமது சம்பிரதாயங்கள் எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகிறது. வளையல்களை கர்ப்பிணிகளுக்கு போடும் போது, அதன் சத்தம் வயிற்றில் இருக்கும் குழந்தையை சென்றடைகிறது. செவியை மட்டும் பயன்படுத்தி, வெளியுலகை உணரும் தன்மையை கொண்ட சிசு, இத்தகைய சத்தங்களை கேட்க ஏங்கிக்கொண்டிருக்கும். இது பிரசவத்தை எளிதாக்குகிறது.

பிரசவ இடம்:
வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புவதை போல், முதல் பிரசவத்தை தாய் வீட்டில் வைத்தால், அப்பெண்ணுக்கு பயன்கள் நீங்கி, பிரசவம் எளிதாக நடக்க உதவியாக இருக்கும்.

பயணம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். அது மட்டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின், கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வரமுடியும்.

இசையின் அற்புதங்கள்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் இதமான மெல்லிசையை கேட்டுக் கொண்டிருந்தால் மன அழுத்தத்திலிருந்து அற்புதமாக தப்பிக்கலாம். இது சிசுவின் கேட்கும் திறனை அதிகரிக்கும்.
மிகவும் அதிகமான மன அழுத்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந்த எடை பிறக்க வாய்ப்பு அதிகம்.

உணவு முறை: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். எளிய பிரசவத்துக்கு நல்ல சத்தான உணவும் உதவும். இதை கர்ப்பிணிகள் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப கால பெண்கள் கணவன் வீட்டிலிருந்து, தாய் வீட்டிற்கு செல்லும் போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள்.ஏனெனில் நெய் சாப்பிட்டால் தசைகளை தளர வைத்து, பிரசவத்தை சுலபமாக்கும் என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.

விழாக்கள்: ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்திலும், அவளது பெற்றோராலும் நண்பர்களாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக்கப்படுவாள். இவை அந்த பெண்ணை சந்தோஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக்கும். உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.


'ஸ்ட்ரோக்' வந்த 3 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.


'ஸ்ட்ரோக்' வந்த 3 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.  அலட்சியம் காட்டினால் ஆபத்து.

'பக்கவாதம் (ஸ்ட்ரோக்) வந்த மூன்று மணி நேரத்திற்குள், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். குறித்த நேரத்திற்குள் அடைப்பை சரிசெய்யும் மருந்தை செலுத்தினால், முற்றிலும் குணமாக்கலாம். தாமதமாக வந்தால் ஒன்றும் செய்ய முடியாது' என்கிறார் நரம்பியல் நிபுணர் கே.பானு.

உலக பக்கவாத நோய் தினம் (ஸ்ட்ரோக்) அக்டோபர்., 29 ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை அரசு பொது மருத்துவ மனையில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பங்கேற்று, பல்வேறு சந்தேகங்களுக்கு, மூளை நரம்பியல் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

பக்கவாத நோய் என்றால் என்ன?

கழுத்தின் இரு பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து, மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்கின்றன.பெரிதாக உள்ள ரத்தக்குழாய்கள், பல கிளைகளாக பிரிந்து, நுண்ணிய ரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லா திசுக்களுக்கும் தேவையான பிராண வாயு, ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.

மூளைக்கு செல்லும் பேரு, சிறு ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடும்போது, பிராணவாயு , ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு போன்று, இதை, மூளை அடைப்பு எனலாம்.

பக்கவாதத்தில் வகைகள் உண்டா? முற்றுப்பெறாத பக்கவாதம் என்றால் என்ன?

தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம். ரத்தக் கசிவால், தற்காலிக பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.

தொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உரைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்திநாளோ ஏற்படுவது. திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும். இடையில் பாதிப்பு அதிகரித்தோ, குறைந்தோ காணப்படும்.

முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது. இதிலும், இரண்டு வகைகள் உண்டு. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு கடுமையாக இருக்கும்.

பக்கவாத பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன? பாரம்பரிய நோயா?

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படித்தல், அதிக உடல் எடை, பருமன் கூடுதல், புகை, மது பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று நோயாலும், பக்கவாதம் வரலாம்.

பாரம்பரியமாகவும் இந்த பாதிப்பு வருகிறது. 80 சதவீத பக்கவாதம், மூளையில் ரத்தக்குலாஇகல் அடைப்பாலும், 20 சதவீஸ் பக்கவாதம், மூளையில் ரத்தம் கசிந்து தேங்குவதாலும் ஏற்படுகிறது.

பக்கவாதத்தை வரும் முன், உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்கள் மரத்துப் போகுதல், செயல் இழந்து போகுதல் போன்ற உணர்வு, திடீரென தலை சுற்றல், திடீர் குழப்பம், பேச்சு குழறுதல், பேரர் பேசுவதை புரிய முடியாமை, திடீரென கடும் தலைவலி, தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்போதே, உஷாராகி விடுவது நல்லது.

எந்த வயதினரை பாதிக்கும். இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதா?

உலகில், ஆறு நிமிடத்தில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது. நிமிடத்திற்கு, 10 இறக்கின்றனர். இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், 222 பேருக்கு, பக்கவாத பாதிப்பு உள்ளது. ஆண்டுக்கு, 16 லட்சம் பேர், இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 12 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. பக்கவாதம் வந்த, நான்கு வாரங்களில், 18 முதல் 41 சதவீதம் பேர் இறக்கின்றனர்.

அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? மூன்று மணிநேரம் 'பொன்னான நேரம் ' என்கிறார்களே ஏன்?

அறிகுறிகள் தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மொழி அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து (thrombolitic  therapy ) செலுத்தினால், முற்றிலும் குணப்படுத்த முடியும்.

தாமதமாக வந்தால், மருந்து  மருந்து போட்டாலும் பயனில்லை. பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை, 'பொன்னான நேரம்' என்கிறோம்.

எல்லோருக்கும் இந்த மருந்தை போட முடியுமா? வேறு சிகிச்சை முறைகள் என்ன?

பாதிப்புடன் வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும். தகுதியான் நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லோருக்கும் இந்த மருந்தை செலுத்த முடியாது.

பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு, நீண்ட கால சிகிச்சையாக மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைக்கு ஏற்ப, பேச்சு பயிற்சியாளர், உடல் இயக்க சிகிச்சையாளர், மன நல ஆலோசகர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவி, பாதிப்புக்கு தகுந்தாற்போல் தேவைப்படும்.

இவர்கள் அனைவரும் இணைந்து நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும்போது, வெகு விரைவில் குணமாக வாய்ப்புள்ளது.

பக்கவாதம் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்துதல் அவசியம்.

பழம்  கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை கொழுப்பு உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகி விடுவோம். அத்தகைய நிலை வராமல் பாதுகாப்பது நம் கையில் உள்ளது.

பல் சொத்தை கூச்சமா? ஆரம்பத்திலேயே கவனிங்க...!

பல் சொத்தை கூச்சமா? ஆரம்பத்திலேயே கவனிங்க...!
தினமும் இரண்டு முறை பல் துலக்குறது முக்கியம்.

'பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. பற்களின் முக்கியத்தை இதன் மூலம் உணரலாம். பேசும் சொற்கள் தெளிவாக இருக்கவும், வலிமையாக இருக்கவும் பற்கள் அவசியம். இது, உடல் நலன் சார்ந்தது என்பதால், பல் பராமரிப்பு முக்கியம். பல் கூச்சம், பல் சொத்தையை ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பாதிப்புகள் வரும் என்கிறார்., பல் சிகிச்சை நிபுணர் ஹரிஷ்நாத்.

1. பல் சொத்தை என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

சரியாக பல் துலக்காதது முக்கிய காரணம். இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிடுதல், இரவு சாப்பிட்டப்பின் பல் துலக்காமை, பால் கொடுத்தபின் வாயை சுத்தம் செய்யாமல், குழந்தைகளை தூங்க வைத்தல் போன்றவற்றால், கிருமிகள்  (ஸ்ரேப்டோ காகஸ் மியூட்டன்ஸ்) வாயின் பல் குழிக்குள் சென்று தாக்குவதால், பல் சொத்தை ஏற்படுகிறது. சாதரணமாக என்றால், கரும்புள்ளி தெரியும். பல்லில் சிறு ஓட்டை விழும். ஆரம்ப நிலையிலேயே, பல் டாக்டரின் ஆலோசனை பெற்றால், மற்ற பாதிப்புகளை தடுக்கலாம்.

2. வேறு என்ன பாதிப்புகள் வரும்? சிகிச்சை முறை என்ன?

ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், பல் சொத்தை பாதிப்பு ஆழமாகி, வேரையும் பாதிக்கும். பல் வலி ஏற்படும். நாளடைவில் பல்லை அகற்றும் நிலை உருவாகும். மேலோட்டமாக, எனாமல் பாதிப்பு இருந்தால், பாதிப்பு பகுதியை சுத்தம் செய்து விட்டு, நிரந்தரமாக பல் ஓட்டையை அடைக்கலாம்.

ஆழமாக ஓட்டை இருந்தால், தற்காலிக, அடைப்பு என்ற முறையில் 'Zஒஎ' எனப்படும், பரவாமல் தடுக்க முடியும்.

3. பற்களில் கரை படிவது ஏன்?  வேர் சிகிச்சை என்றால் என்ன?

பலருக்கு பல் வலி அதிகமாகி, பல்லை அகற்றும் நிலை வரலாம். பல்லை அகற்றாமல், பல்வேறு சிகிச்சை (ரூட் கனால்) முறையை செய்து குணப்படுதுதலாம். பல் ஈறுகளில் கரை படித்தல், சுண்ணாம்பு போன்று கிருமிகள் தங்குவதால், ஈறுகள் வீக்கம் அடைந்து பல் வலி ஏற்படும்.

சில, நேரங்களில் ரத்தக்கசிவால் சீல் வரலாம். இதற்கு சரியான சிகிச்சை எடுக்காவிட்டால், பல்லை தாங்கி நிற்கும் எலும்பைத் தாக்கி, கரைந்து விடும்.

இதனால், பல் ஆட்டம் கொண்டு விழ வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க    
' ஸ்கேலிங்' என்ற நடைமுறையில் காரை, சுண்ணாம்பு போன்ற படியும் கிருமியும் அகற்றப்படுகிறது.

ஈறு நோய் பாதிப்பு அதிகமாகி, பல் ஈறு கீழே இறங்கிவிட்டால், ;பெரியடண்டல் பிளாப் எனும் அறுவை சிகிச்சை மூலம், (எப்.எல்.ஏ.பி., ) சரி செய்ய முடியும். எலும்பு கரைந்து விட்டால் செயற்கை ச்ளும்பு துகள்கள் கொண்டு சரிபடுத்த முடியும்.

4. பல் அகற்றினாலோ, விபத்தில் விழுந்து விட்டாலோ பல் கட்டுவது அவசியமா?

பல் விழுந்து விட்டாலோ, அகற்றினாலோ கண்டிப்பாக பல் கட்ட வேண்டும். இல்லாவிட்டால், அருகே உள்ள பற்கள், காலியாக் உள்ள இடத்திற்கு, பக்கவாட்டில் நகரும். மேலே உள்ள பல் கீழே இறங்கும்.. பல்லின் ஸ்திரத்தன்மை குறைந்து, திடமான பொருட்களை கடித்து சாப்பிட முடியாது. தாடை பக்கவாட்டு எலும்பில், வலி ஏற்படும்.

5. பல் கட்டு முறையில் நவீனத்துவம் வந்துவிட்டதா?

பல்லை கழற்றி மாட்டிக்கொள்வது பழையமுறை. அருகில் உள்ள இரு பற்களின் துணையுடன்,  'பிக்ஸ்டு பிரிட்ஜ்' முறையில் பல் கட்டுவது, இன்னொரு நடைமுறை.

பல்லின் கலரிலேயே, 'செராமிக்' பற்களை கட்டிக் கொள்ளலாம்.  பல் இல்லாத பகுதியில், எலும்பில் துளை போட்டு, 'டைடானிய இன்பிலான்ட்' முறையில், பல் கட்ட முடியும். இது, தற்போதுள்ள அதி நவீன முறை.

6. அடிபட்டு, பல் கீழே விழுந்துவிட்டால் என்ன செய்வது? அதே பல்லை மீண்டும் பொறுத்த முடியுமா?

நிச்சியமாக முடியும். பல் விழுந்த அரை மணி நேரத்திற்குள், எச்சிலில் வைத்தோ, பாலில் போட்டோ, அருகில் உள்ள பல் டாக்டரிடம் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால், அதே பல்லைப் பொருத்தலாம். இது பற்றிய விவரம் பலருக்கு தெரிவதில்லை. பற்கள் முன் பின் வளைந்து சரியான வரிசையில் இல்லாமல் இருப்பது உண்டு. இவர்கள், 'கிளிப்' போடுவதன் மூலம், பல் சீரமைப்பு செய்து அழகாக்க முடியும்.

7. பல் கூச்சம் போக்க என்ன செய்ய வேண்டும்?

பற்களின் நரம்புகளில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ சாப்பிடும்போது, அது நரம்பில் பட்டு 'ஷாக்' அடித்தது போன்று வலி ஏற்படும். டாக்டரை ஆலோசித்து, அதற்கான பற்பசைகளை பயன்படுத்தினால், பல் கூச்சம் போய்விடும். பொதுவாக, அதிக சூடான, குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

8. பிறவியிலேயே குழந்தைகளுக்கு பல் சார்ந்த பிரச்சனை வருமா?

பிறக்கும் குழந்தைகளின் சிலருக்கு, மேல் அன்னத்தில் ஓட்டை இருப்பது உண்டு. பால் கொடுக்கும் போது வயிற்றுககுப் போகாமல், ஓட்டை வழியாக நுரையீரலுக்கு சென்று சிக்கலாகும். உயிருக்கு ஆபத்தாக அமையும்.

இவர்களுக்காக, 'பீடிங் பிளேட்' உள்ளது. இதை பயன்படுத்துவதால், மேல் ஓட்டை மூடப்பட்டு, பால் குழந்தையின் வயிற்றுக்குச் செல்லும். ஒன்றரை ஆண்டுகாலம் முடிந்ததும், குழந்தை நிபுணரை ஆலோசித்து, அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.

9. வாய் புற்றுநோய்க்கும், பல் நோய்க்கும் சம்பந்தம் உண்டா? 

பல் உடைந்து, கூர்மையான பற்கள் சதைகளில் குத்தி ஏற்படும் காயத்தை, நீண்ட காலம் பொருட்படுத்தாமல் விட்டால், புற்றுநோயாக வாய்ப்புள்ளது. புகையிலை, குட்கா, பழக்கத்தால், வாய் புற்றுநோய், வந்து, பல் மற்றும் தாடைகளை அறுவை சிகிச்சை செய்து, அகற்றும் குழல் ஏற்படலாம். உயிருக்கு ஆபத்து என்பதால் புகை குட்கா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

10. பல் பாதிப்பில் இருந்து தப்ப என்ன செய்ய வேண்டும்?


தினமும் இரண்டு வேளைகளில், (கால, இரவு) பல் துலக்க வேண்டும். இரவு சாப்பிட்டதும், பல் துலக்கிவிட்டு படுக்கும் பழக்கம் பலரிடம் இல்லை. பல் துலக்கிவிட்டு படுப்பது அவசியம். சாப்பிட்டவுடன், வாயை நன்கு தண்ணீரில் நன்றாக கொப்பளித்து,ம் துப்ப வேண்டும். பல் துலக்கியதும், விரல்களால் ஈறுகளை மசாஜ் செய்ய வேண்டும்.

உணவில் கீரை, பழங்களை சரிவிகிதமாக சேர்த்துக் கொண்டால், பல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து பெருமளவு தப்பலாம்.

Wednesday, November 26, 2014

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்


 முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்துகு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்யவேண்டும்.  

முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்யுங்கள். பஞ்சில் கிலென்சிஸ் மிக் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள். பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் (Brand) நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. உங்களுக்கு பொருந்தும் க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக்கொள்ளுங்கள். கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். மசாஜ் செய்து முடித்ததும் ஒரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். (சதை மேல் நோக்கி அழுத்துபடி தட்ட வேண்டும்.) பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள்.


நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பதால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும். எல்லாம் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும்.

பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். அதற்கு அழகுக் கலை நிபுணரைத்தான் அணுக வேண்டும்.

மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது. எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். 

பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். சருமம் மினுமினுப்பதைக் கண்டு பூரித்துப் போவீர்கள்.  


கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை

கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை
சாதாரண கூந்தலுக்கு...
இந்த வகைக் கூந்தலுக்கு அதிக மெனக்கெடல் தேவையிருக்காது. தினசரி கவனிப்பே போதுமானது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் தலா 2 டீஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பாக்கவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் பால் விடவும். உடனே திரிந்த மாதிரி வரும். இந்தக் கலவையை மண்டைப் பகுதியில் வேர்க்கால்களில் படும்படி தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். தண்ணீரில் 10 மருதாணி இலைகளைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் சுத்தமான டவலை நனைத்துப் பிழிந்து, தலையைச் சுற்றிக் கட்டிக் கொள்ளவும். மருதாணி இலை, கூந்தலை கண்டிஷன் செய்யும். நான்கைந்து முறை இப்படி டவல் கட்டி எடுத்து, பிறகு வழக்கமாக உபயோகிக்கிற ஷாம்பு அல்லது சீயக்காய் உபயோகித்து கூந்தலை அலசவும். முதல் நாள் இரவே 1 கைப்பிடி அளவு சீயக்காய், 2 பூந்திக் கொட்டை, 1 டீஸ்பூன் வெந்தயம் மூன்றையும் சிறிது தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரை மட்டும் தலையை அலச ஷாம்பு மாதிரிப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் பசையான கூந்தலுக்கு...
நெல்லிக்காய் எண்ணெய் (ஆம்லா ஆயில்) 2 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன், பாதாம் ஆயில் 1 டீஸ்பூன் மூன்றையும் ஒன்றாகக் கலந்து வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி மிதமான மசாஜ் கொடுக்கவும். 2 டேபிள்ஸ்பூன் மருதாணி விழுது, 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, அரை டீஸ்பூன் துளசி விழுது சேர்த்துக் குழைத்து தலையில் பேக் மாதிரிப் போட்டு, அதே விழுதை முடிக் கற்றைகளில் படும்படி நுனி வரை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து அலசலாம்.

வறண்ட கூந்தலுக்கு...

 பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன், ஹென்னா ஆயில் (மருதாணி எண்ணெய்) 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் சேர்த்து வெதுவெதுப்பாக சூடாக்கவும். வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு எவ்வளவு எண்ணெய் வைத்தாலும் உறிஞ்சிக் கொள்ளும். சிறிது எண்ணெயை முடிக் கற்றைகளிலும் நுனி வரை தடவி, பின்னல் போட்டு, ஒரு ரிப்பன் வைத்து மடித்துக் கட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கூந்தலைப் பிரித்து, அதே எண்ணெய் கலவையை மறுபடி விரல்களால் தொட்டு, கோதிவிட்டு, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவல் கட்டி, ஸ்டீம் கொடுக்கவும்.  சிறிது வேப்பிலை, 1 டீஸ்பூன் வெந்தயம், 1 டேபிள்ஸ்பூன் தயிர் கலந்து தலைக்கு பேக் போட்டு, ஊற வைத்துக் குளிக்கவும். விருப்பமுள்ளோர் முட்டையின் வெள்ளைக் கருவை இதில் கலந்து கொள்ளலாம்.

Friday, October 24, 2014

வேலைக்கு போகும் பெண்களுக்கான எளிதான அழகு சாதனப்பொருட்கள்

வேலைக்கு போகும் பெண்களுக்கான எளிதான அழகு சாதனப்பொருட்கள்

பொதுவாக வேலைக்குபோகும் பெண்கள் வீடு திரும்பும்பொழுது கலைந்த தலைமுடியுடனும், எண்ணெய் வழியும் முகத்துடன் வருவதை பார்க்கிறோம். சில எளிதான அழகு சாதனப்பெருட்களை உபயோகிக்கும் பொழுது அவை காலை முதல் மாலை வரை நம் தோற்றத்தை பொலிவுடன் வைத்துகொள்ள உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.  


ஃபௌண்டேஷன் பௌடர் மற்றும் க்ரீம் :

* நம்தோல் நிறத்தை விட லைட் கலரில் இருக்கும் ஃபௌண்டேஷன் க்ரீம் அல்லது பௌடரை உபயோகிப்பது சிறந்தது.

* முகத்தை நன்கு கழுவி நன்றாக காய்ந்த பிறகே இவற்றை முகத்தில் தடவ வேண்டும்.

* இந்த க்ரீமை உள்ளங்கையில் எடுத்துகொண்டு முகத்தில்பொட்டு வைப்பது போல் வைத்து முகம் கழுத்து போன்ற இடங்களில் பரவலாக தடவ வேண்டும்.

* இது உலர்ந்த பிறகு நாம் உபயோகிக்கும் பௌடரை முகத்தில் போட வேண்டும்.

* முகம், கழுத்து, கழுத்தின் பின்புறம் என எல்லா இடமும் சீராக இருப்பது போல் தடவும் பொழுது முகம், கழுத்து எல்லாமே ஒரே நிறத்தில் வித்தியாசம் இல்லாமல் இருக்கும்.

* அலுவலக உணவு இடைவெளியில் கூட இவற்றை போட்டு கொள்வது நல்லது.

ஹேர் சீரம் :

நாம் வெளியில் செல்லும் பொழுது நம் தேசத்தில் நிறைய தூசுகள் சேர்ந்து விடுகின்றன. அதிலும் வண்டியில் செல்லும் பொழுது நம்முடைய கூந்தல் கலைந்து நம் மயிர்க்கால்களில் நேரிடையாகவே அழுக்குகள் படிந்து விடுகின்றன.

இதனால் கூந்தல் உதிர்வு, பொடுகு, மண்டையில் மேற்புறத்தோல் வறண்டுவிடுவது என பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைத் தடவும் பொழுது தலை வறண்டு போகாமல், கூந்தலை பளபளப்பாகவும், பிசுக்கில்லாமலும் வைத்துக்கொள்கிறது. தலைமுடி டேமேஜகாமலும் காப்பாற்றப்படுகிறது. ஆரோக்கியமான தலைமுடியை பெற ஹேர் சீரம் உபயோகிப்பது சிறந்தது.

காஜல் :

இப்போது வரும் காஜல்கள் பல மணி நேரங்கள் வரை கண்களில் இருந்து அழியாமல் இருக்கின்றன. அழகிய பென்டைப்களில், சிறிய பென்சில்கள் போன்றும் வெளியில் செல்லும் பொழுது எடுத்துச்செல்வதற்கு வசதியாக வந்து விட்டன. மை கைகளில் ஒட்டிக்கொள்ளும் என்ற கவலையே இல்லை.

Sunday, October 19, 2014

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை வைத்தியம்

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை வைத்தியம்
தாங்க முடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு `கிடார்' வாசிப்பவர்களுக்கும், கூந்தல் பிசுபிசுப்பால் தலையில், `குப்'பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கு `தலை மேல் பலன்' கொடுக்கிற பேக் இது...

வேப்பிலை தூள்- அரை டீஸ்பூன்,
கடுக்காய்த்தூள்- அரை டீஸ்பூன்,
வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன்,
பயத்தமாவு-2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1டீஸ்பூன்...


இவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த `பேக்' போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு, வியர்வை து
ர்நாற்றத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையாகி விடுவீர்கள். சீயக்காயுடன் வேப்பம்பட்டையை உலர்த்தி அரைத்தும் பயன்படுத்தலாம். தலை அரிப்பு ஓடியே போய்விடும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த பேன் தொல்லைக்கு ஒரேயடியாக முடிவு கட்டுகிறது. இந்த ட்ரீட்மெண்ட்...

வேப்பிலை-1 பிடி,
சீயக்காய்-5,
தோல் நீக்கிய கடுக்காய்-1,
கொட்டை எடுத்த புங்கங்கொட்டை-3,
செம்பருத்தி இலை-1 பிடி...


இவற்றை இரவே தண்ணீரில் ஊறவிடுங்கள். காலையில் அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்துக் குளியுங்கள். இந்த வாசனைக்கே பேன் தப்பித்து ஓடுவதுடன், உங்கள் தலை பக்கம் இனிமேல் எட்டிப் பார்க்கக்கூடப் பயப்படும்.