Pages

Showing posts with label பால். Show all posts
Showing posts with label பால். Show all posts

Tuesday, April 5, 2016

எலும்பு பாதிப்பா? உணவில் கவனம்

எலும்பு முறிவு, தசைகளில் பாதிப்பு ஏற்பட்டு, குணமாகும் கால கட்டத்தில், உணவு முறைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

கால்சியம் சத்து மிகுந்த பால் சார்ந்த உணவுகள், பச்சை இலை காய்கறிகள், கொட்டை வகைகள், பயிறு வகைகள் போன்றவை, நல்ல எலும்பை உருவாக்க உதவும்.


தவிர எலும்பு பாதிப்பு உள்ளவர்கள், சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவைகளை தவிர்த்து விட வேண்டும். வைட்டமின் 'டி' சத்து இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம். மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள், முட்டை போன்றவை, இதற்கு பேருதவியாக இருக்கும்.

மிகச் சூடான சூரிய ஒளி, கெடுதலை தரும். புரதச் சத்து உணவுகள், நல்ல சதையை உருவாகும். கொழுப்பு நீக்கிய அசைவ உணவுகளான சோயா உணவு வகைகள் நல்லது.

உறக்கத்தை தரும் உணவு பொருள்


நம்மில் பலர் தூக்கத்தை மறந்து இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருகின்றனர். உண்ணும் உணவும், வாழும் சூழ்நிலையும் ஒருவனின் நிம்மதியான தூக்கத்தை தொலைத்த துரதிர்ஷ்டசாலிகளாய் உள்ளனர்.

உறக்கம் வருவதில் பிரச்சனை இருப்பவர்கள், முதலில் உணவு கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், சரியான உணவினை உட் கொள்ளுவதன், மூலம் நல்ல உறக்கத்தைப் பெறலாம், என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தேநீர் : உறங்கச் செல்வதற்கு முன் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியானைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைபழம் தான். இது அதிக தசை இறுக்கத்தை தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும்  உள்ளது. ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும். 

ஓட்ஸ் : ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம், உறக்கம் வருவதற்கு உதவி செய்கிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைகின்றன . ஆனால் ஒட்சில் அதிக சீனி சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை  சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

 

பால்: பால், யோகர்ட், பாலாடைக்கட்டி போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியள்ள கால்சியம், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன், நரம்பிழைகளின் உறுதி தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே உறங்க செல்வதற்கு முன்னர் யோகர்ட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

 

பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்கும் போது, ரத்தத்தில் சர்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

செர்ரிபழம்: படுத்தவுடன் உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப் பழரசம் ஜூஸ் அருந்திவிட்டு படுக்கைக்கு செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Wednesday, November 26, 2014

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்


 முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்துகு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்யவேண்டும்.  

முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்யுங்கள். பஞ்சில் கிலென்சிஸ் மிக் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள். பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் (Brand) நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. உங்களுக்கு பொருந்தும் க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக்கொள்ளுங்கள். கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். மசாஜ் செய்து முடித்ததும் ஒரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். (சதை மேல் நோக்கி அழுத்துபடி தட்ட வேண்டும்.) பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள்.


நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பதால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும். எல்லாம் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும்.

பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். அதற்கு அழகுக் கலை நிபுணரைத்தான் அணுக வேண்டும்.

மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது. எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள். 

பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். சருமம் மினுமினுப்பதைக் கண்டு பூரித்துப் போவீர்கள்.  


Saturday, May 31, 2014

எலும்புகளுக்கு உறுதியளிக்கும் பால்

பால்
ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுப் பொருட்களில் பால் முக்கிய இடம் பெறுகிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுப் பொருளாக பால் மற்றும் பால்பொருட்கள் விளங்குகின்றன. இதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்...

* பால் மற்றும் பால்பொருட்கள் குறைந்த ஆற்றல் வழங்குபவை. ஒரு 'கப்' பாலில் 80 முதல் 120 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. எனவே உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புபவர்களும், குண்டு உடலை குறைக்க விரும்புபவர்களும் பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்க்கலாம்.

* பால் உடலுக்குத் தேவையான 100 சதவீத கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும். 75 சதவீதம் வைட்டமின்-டி மற்றும் வைட்டமின் பி-12 கிடைக்கச் செய்யும்.

* 250 கிராம் எடை கொண்ட ஒரு கோப்பை பாலில் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 478 கிராம் வைட்டமின்-ஏ, 32 சதவீதம் வைட்டமின்-டி காணப்படுகிறது. மேலும் வைட்டமின்-கே, பி-குழும வைட்டமின்களான தயாமின், ரிபோபிளேவின், நியாசின், வைட்டமின் பி-6, வைட்டமின் பி-12 ஆகியவையும் குறைந்த அளவில் உள்ளன.

* பாலில் கொழுப்புச் சத்து குறைந்த அளவில் காணப்படுகிறது. 250 கிராம் பாலில் 2.4 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது.

* உடம்புக்கு வலுச்சேர்க்கும் அத்தியாவசிய தாதுஉப்புகளான கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்றவை சராசரியாக காணப்படுகிறது.

* பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரதப்பொருட்கள் மிகுந்துள்ளன. இவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு உதவும். சிறுவயது முதலே பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு பலவீனம், எலும்பு உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

* பாலில் உள்ள கால்சியமும், பாஸ்பரசும் பற்களுக்கு நன்மை பயக்கும். இதிலுள்ள கேசின் என்ற பொருள் பற்களின் எனாமலை பாதுகாக்கும்.

* பால் உணவுகளை, பழங்களுடன் குறைந்த உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* 'கார்டியோவாஸ்குலார்' எனும் இதயபாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் பால் மற்றும் பால் பொருட்களுக்கு உண்டு. கால்சியம் தாதுவானது ரத்தத்தில் கெட்ட கொழுப்பு பொருட்கள் அதிகமாவதை தடுக்கிறது. இதனால் இதயபாதிப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

* சமீபத்தில் 37 ஆயிரம் நடுத்தர வயது பெண்மணிகளுக்கு பால் உணவுகளை கொடுத்து ஆராய்ச்சி செய்ததில் டைப்-2 நீரிழிவு கட்டுப்படுத்தப்பட்டது தெரியவந்தது.