Pages

Showing posts with label வளைகாப்பு. Show all posts
Showing posts with label வளைகாப்பு. Show all posts

Thursday, November 27, 2014

சுகபிரசவத்துக்கு உதவும் வளைகாப்பு!

வளைகாப்பு கர்ப்பிணிக்கு உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் தரும். கர்ப்பிணியை தனித்துவமாகவும், சந்தோஷமாகவும், வைக்கும். கர்ப்பிணிகளுக்கு வளையல் போடுவதன் மூலம், எளிதாக பிரசவம் ஆகும் என, ஆரைய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்றும் அழைப்போம்.

கர்ப்பிணி வீட்டார் பலரையும் இவ்விழாவிற்கு அழைப்பார்கள். அவர்கள் பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்கள் போட்டு விடுவார்கள். கர்ப்பிணி எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் வேண்டுதலாக இருக்கும். இது போன்ற நமது சம்பிரதாயங்கள் எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகிறது. வளையல்களை கர்ப்பிணிகளுக்கு போடும் போது, அதன் சத்தம் வயிற்றில் இருக்கும் குழந்தையை சென்றடைகிறது. செவியை மட்டும் பயன்படுத்தி, வெளியுலகை உணரும் தன்மையை கொண்ட சிசு, இத்தகைய சத்தங்களை கேட்க ஏங்கிக்கொண்டிருக்கும். இது பிரசவத்தை எளிதாக்குகிறது.

பிரசவ இடம்:
வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புவதை போல், முதல் பிரசவத்தை தாய் வீட்டில் வைத்தால், அப்பெண்ணுக்கு பயன்கள் நீங்கி, பிரசவம் எளிதாக நடக்க உதவியாக இருக்கும்.

பயணம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். அது மட்டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின், கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வரமுடியும்.

இசையின் அற்புதங்கள்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் இதமான மெல்லிசையை கேட்டுக் கொண்டிருந்தால் மன அழுத்தத்திலிருந்து அற்புதமாக தப்பிக்கலாம். இது சிசுவின் கேட்கும் திறனை அதிகரிக்கும்.
மிகவும் அதிகமான மன அழுத்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந்த எடை பிறக்க வாய்ப்பு அதிகம்.

உணவு முறை: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். எளிய பிரசவத்துக்கு நல்ல சத்தான உணவும் உதவும். இதை கர்ப்பிணிகள் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப கால பெண்கள் கணவன் வீட்டிலிருந்து, தாய் வீட்டிற்கு செல்லும் போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள்.ஏனெனில் நெய் சாப்பிட்டால் தசைகளை தளர வைத்து, பிரசவத்தை சுலபமாக்கும் என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.

விழாக்கள்: ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்திலும், அவளது பெற்றோராலும் நண்பர்களாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக்கப்படுவாள். இவை அந்த பெண்ணை சந்தோஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக்கும். உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.