Pages

Wednesday, March 11, 2015

ஆரோக்கியம் காக்கும் ஆறுவகை கீரைகள்

 greens க்கான பட முடிவு

காய்கறி வகை உணவுகளில் சகல நலங்களையும், தரும் உணவு எதுவென்றால் அவை கீரைகள்தான். கீரைகளில் உயிர்சத்துக்கள், தாது உப்புகள், கால்சியம், இரும்புச் சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன. மாமிச உணவில் கிடைக்கும் சக்தி கீரையிலும் கிடைக்கிறது. கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதோ ஆரோக்கியம் தரும் ஆறுவகை கீரைகள்.

சிறுகீரை: சிறுகீரையை பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும் உடையது. குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், இருதய வியாதிகள் போகும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுகீரையை வெறும் மிளகுடன் சேர்த்து, கஷாயம் செய்து சாப்பிட்டால், விஷத்தின் வீரியம் தணிந்து வந்த வியாதியும் குணமடையும்.

மிளகு தக்காளி கீரை: உடலில் வீக்கம் இருந்தால் அதை வாடச்செய்யும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும், சொறி, சிரங்குகளை குணப்படுத்தும். பாண்டுரோகம் குணமாகும். வெள்ளை வெட்டை குணமாகும். தேகத்தில் உள்ள புண்களை ஆற்றும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், குடல் தொடர்புடைய எந்த வியாதிகளும் வராது.

முளைக்கீரை; முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியும், மாலைக்கண் பார்வை குறைவும் நீங்கும். வாரத்திற்கு இருமுறையாவது, முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல், நீரடைப்பு, மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோய்கள் குணமாகும். சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தினசரி முளைக்கீரை கொடுத்தால், உடல் வலிமையுடன் வளர்வார்கள்.

இலட்கெட்டை கீரை: இக்கீரையை சாப்பிட்டு வர, வாதம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும், வாயு தொடர்புடைய நோய்கள் தீரும். இவை சாம்பிள்தான்.
காய்கறி கடைகளில் கிடைக்கும் அனைத்து வகை கீரைகளும், சத்து நிறைந்தவைதான். எந்த சீசனில் என்ன கீரை கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி உட்கொண்டால் ஆரோக்யமாக வாழலாம்.

பாற்சொறிக்கீரை: பாற்சொறிக்கீரையுடன் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிடுவார்கள். சீதபேதியுடன் கஷ்டப்படுபவர்கள், இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, சீதபேதி குணமாகும். குடலில் ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றும். உடலில் தேஜஸ் உண்டாகும்.

அரைக்கீரை; பித்தம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி, இயற்கை அளவுடன் இறங்கச் செய்யும். ரத்த பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்தும்.


புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள்


vegetables க்கான பட முடிவு

புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும் சக்தி காய்கறிகளுக்கு உண்டு. அத்தகைய சக்தி வாய்ந்த காய்கறிகள் பற்றிய குறிப்புகள்:

உருளைக்கிழங்கு: புற்றுநோயை எதிர்க்கும் பொருள், தோலின் உட்பாகத்தில் இருப்பதால், உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட வேண்டும். அதிலும், பேபி பொட்டேட்டோ என்று அழைக்கப்படும், உருண்டையான சிறிய ரக உருளைக்கிழங்கு சிறந்தது.

பாகற்காய்: விஞ்ஞானிகள் பாகற்காய்சாறு, மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமின்றி, புற்றுநோய் செல்களைப் பெருக்கமடையாமல் தடுக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், கருவுற்ற பெண்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் பாகற்காய் உண்பதை தவிர்க்க வேண்டும்.

வெங்காயம்: வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் அதிகம் பயன்படுத்தினால், வயிற்றுப்புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது.

தக்காளி: ஆண்கள் வாரம் பத்துமுறை, தக்காளி சாப்பிட்டால், புராஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து 45% குறைவு என்றும், வாரம் 7 முறை சமைக்காமல் சாப்பிட்டால், குடல் மற்றும் வயிற்றுப்புற்று நோய் வரும் ஆபத்து, 60% குறைவு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் உள்ள லைகோபீனின் சக்தியானது, கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு சமைத்தால் அதிகரிக்கிறது. புராஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. செல்களைக் கொல்லவும் செய்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி நுரையீரல், வயிறு, வாய், குடல், மலக்குடல் புராஸ்டேட் புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.

முட்டைகோஸ்: கணையப்புற்று, மார்பகப்புற்று, வயிற்றுப்புற்று, குடல்புற்று வராமல் தடுக்கிறது. கீமோதெரபியுடன் முட்டைகோஸ் சாற்றை, புரோகோலி மற்றும் காலிஃபிளவர் சாற்றுடன் கொடுத்து வந்தால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். முட்டைக்கோஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, கணையப் புற்றுநோய் வராது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கந்தகமும், ஹிஸ்டிடின் அமினோ அமிலமும், நோயை தடுப்பதாகச் சொல்கிறது மற்றொரு ஆராய்ச்சி.

சாலட்: வெங்காயம், காரட், வெள்ளரி, தக்காளி சாலட் சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு உணவு ஆகும். அத்துடன் இவ்வகை உணவுகளைக் குழந்தைகள் சிறுவயதில் விரும்பிச் சாப்பிடுவார்கள். காரணம், அவர்களுடைய ஜீன்களில் அவை பதிவாகி விடுவதால் அந்த வகை உணவுகளை அவர்கள் விரும்புவார்கள். பரம்பரை புற்றுநோய்கள் என்று சொல்லப்படுகின்ற தைராய்டு புற்று, கணையப் புற்று, குடல் புற்று, சிறுநீர்ப்பை புற்று போன்றவற்றை நிச்சயம் வராமல் தடுக்கலாம்.

Saturday, March 7, 2015

கம்பங்கூழ்



கம்பங்கூழ்
தேவையானவை:
நொய்யரிசி - ஒரு கைப்பிடி அளவு
கம்பு
உப்பு
தயிர்
செய்முறை:

  • கம்பை அரை மணி நேரம் ஊற வைத்து, நிழலில் காய வைக்கவும். 
  • காய்ந்ததும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து (பச்சரிசி மாவு பொடிப்பது போல்) சலித்து வைக்கவும். 
  • அத்துடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். (ஒரு இரவு ஒரு பகல் அப்படியே வைக்கவும்). 
  • அத்துடன் கம்பு மாவுக் கலவையை சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். 
  • மறுநாள் இத்துடன் தேவையான அளவிற்கு தயிர் கலந்தால் கம்பங்கூழ் தயார்.
  • சின்ன வெங்காயம் அல்லது வறுத்த மோர் மிளகாயுடன் பரிமாறலாம். மாங்காயுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அம்மியில் இடித்தெடுத்து, இந்தக் கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
  • கம்பில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், இந்த கூழ் உடம்புக்கு மிகவும் நல்லது.

கேப்பை கூழ்


தேவையானவை
கேப்பை கூழ்

  • கேப்பை மாவு (ராகி / குரக்கன் / கேழ்வரகு) - ஒரு கப்

  • உப்பு - தேவையான அளவு

  • அரிசி நொய் - கால் (அ) அரை கப்

  • தயிர்

  • சின்ன வெங்காயம் (அ) மாங்காய்
செய்முறை:
கேப்பை மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரவு, ஒரு பகல் புளிக்கவிடவும்.

அரிசி நொய்யை வேக வைத்து (பொங்கி) வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும், புளித்த கேப்பை மாவை ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும். 

பாதியளவு வெந்ததும், பொங்கிய அரிசி நொய்யைச் சேர்த்துக் கிளறி வேக வைக்கவும். அரிசி நொய்யைப் போட்டதும் நிறம் மாறும், வெந்துவிட்டது என நினைக்க வேண்டாம்.

கையில் தண்ணீர் தொட்டு, கூழை தொட்டு பார்க்கவும். கையில் ஒட்டாத பதத்திற்கு வெந்ததும் இறக்கிவிடவும்.

கூழை ஆற வைத்து பானை (அ) பிரிட்ஜில் வைத்து மறு நாள், இதில் தயிர், உப்பு, சேர்த்து கரைத்து பரிமாறவும். ருசியான கேப்பை கூழ் தயார்.


Thursday, March 5, 2015

முகப் பொலிவுக்கான சூட்சமம்

அழகு நிலையத்தில் போய் அழகு படுத்திக் கொள்ள பணம் இல்லை, நேரம் இல்லை என நினைப்பவர்களுக்கு சமயலறையிலேயே அழகுக்கான அத்தனை பொருட்களும் குவிந்து கிடப்பது தெரியுமா உங்களுக்கு?
   

  1. வெள்ளரிச்சாரு-பன்னீருடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். தேன் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தடவி வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

2. மஞ்சள்,எலுமிச்சை சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் அழுந்தத் தேய்த்து சற்று பொறுத்து கழுவினால் முகம் முழுக்க பிரகாசிக்கும்.

3. மோரில் ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவினால் அழுக்கு நீங்கி முகம் பளிச்சென்று ஆகும்.

4. தேங்காய்த் தண்ணீரில் முகத்தைக் கழுவினால் முகம் மென்மையாகும்.

5. அதிக வெயிலால் முகம் கருத்து விட்டதா? பால் பவுடர், எலுமிச்சைசாறு, பாதம் எண்ணெய், தேன் கலந்து முகத்தில் பூசி பூசினால் கருமை நீங்கும்.
எழுமிச்சைசாருடன் சர்க்கரை கலந்து முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் முகம் பொலிவு பெறும்.

சமயலறையிலேயே பொலிவுக்கான சூட்சமம் இருக்குது.அதை பயன்படுத்தினாலே உங்களுக்கு இயற்கை அழகு கிடைக்கும்.

தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் பரமபிதா ஆசனம்



தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் பரமபிதா ஆசனம் 
பிரார்த்தனைக்கு உறுதுணையாக அமைவதே பரமபிதா ஆசனமாகும்.  

செய்முறை :

முழங்காலிட்டு அமர்ந்து மெதுவாக (வஜ்ராசனம்) எழுந்து இரு கைகளையும் இருபக்கங்களிலும் நீட்டி விரித்து தலையை பின்னார் சாய்த்து வானத்தைப் பார்க்கவும். இரு உள்ளங்கைகளும் வானத்தைப் பார்க்கும்படி வைத்துக் கொள்ளவும்.

இதனால் வானத்தில் உள்ள லட்சக் கணக்கான நட்சத்திரங்களின் கதிர்கள் நமது உள்ளங்கையை அடைந்து அங்கிருந்து நமது மூளைச் செல்களை விருத்தி அடையச் செய்யும். மிகக் குறுகிய நேரத்தில் மன அமைதியை அளிக்க வல்லதே பரமபிதா ஆசனமாகும். வானத்தைப் பார்க்க முடியாதாவர்கள் தங்கள் அறையிலிருந்தும் இந்த ஆசனத்தைப் பயிலலாம்.

உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடியது பரமபிதா ஆசனமாகும்.