Pages

Sunday, September 18, 2016

சகஜ யோகா தியானத்தினால் என்ன நன்மைகள்

 சகஜ யோகா

மனித வாழ்வு உடல், உள்ளம், உணர்வு, ஆன்மா ஆகியவற்றின் இயக்கமாக உள்ளது. இவற்றின் ஒருங்கிணைந்த இயக்கம் சமநிலையான, அமைதியான வாழ்வுக்கு அவசியமாகிறது. தியானத்தில் குண்டலினி விழிப்படைந்து சாதகன் கடந்த கால அல்லது எதிர் கால எண்ணங்களின் தொந்தரவு இல்லாத எண்ணங்களற்ற அமைதியான நிலையை அடைய வழிசெய்கிறது.

இதற்காக நம்முள் படைக்கப்பட்டிருக்கும் ஆன்மீகக் கருவி (சூட்சும மண்டலம்) முள்ளந்தண்டில் 3 நாடிகள், 7 சக்கரங்கள் கொண்டது. அத்துடன் குண்டலினி சக்தி முள்ளந்தண்டில் உள்ள முக்கோண வடிவ எலும்பில் மூன்றரை சுற்று வடிவிலும், ஆன்மா இருதயத்திலும் உள்ளது. இக் குண்டலினி சக்தி எமக்குள் விழிப்படைந்து ஆன்மாவில் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்த காத்திருக்கிறது.

சகஜ யோகா தியானத்தின் போது குண்டலினி சக்தி விழிப்படைந்து சக்கரங்களுக்கு ஊடக மேலெழும்பி தலையுச்சி வழியாக வெளிப்படுகிறது. இது ஓர் அனுபவம். குண்டலினி சக்தியின் வெளிப்பாட்டை குளிர்ந்த காற்றாக வெளிப்படும் நுண்ணதிர்வுகளாக உள்ளம் கைகளிலும், தலையுச்சியிலும் உணரலாம். ஆன்மா விழிப்படைந்த நிலையில், குண்டலினி எங்கும் நிறைந்திருக்கும் சக்தியோடு இணைகிறது.

இதுவே தியான (யோக) நிலையாகும். இந்நிலையில் உடலில் லேசானது போன்ற உணர்வும், மனதில் எண்ணங்களற்ற அமைதிநிலையும் ஏற்படுகிறது. இந்த அமைதிநிலையே அமைதியான தூய வாழ்வின் ஆரம்பமாகும். 

Sunday, September 11, 2016

வரகு அரிசி காளான் பிரியாணி செய்வது எப்படி?

தேவையானவை:
 

வரகு அரிசி காளான் பிரியாணி
வரகு அரிசி 1/4 கிலோ
காளான் 50 கிராம்
வெங்காயம் 1 பெரியது
தக்காளி 1 பெரியது
எண்ணெய் தேவையான அளவு
நெய் சிறிதளவு
தயிர் 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
ஏலக்காய் 3
மிளகாய்பொடி 1 தேக்கரண்
மல்லிபொடி 1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி
இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, இலவங்கம், புதினா, கொத்தமல்லி, மஞ்சள் - சிறிதளவு
 
செய்முறை:
வரகு அரிசி மற்றும் காளானை கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், சோம்பு. இலவங்கம் 

போட்டு தாளிக்க வேண்டும். பின், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.அதோடு, காளான் மற்றும் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, தயிர் சேர்த்து வதக்க வேண்டும். பின், கழுவி வைத்துள்ள, வரகு அரிசியுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில், இரண்டு விசில் வரும் வரை, வைத்து இறக்கினால், கமகமக்கும் வரகு அரிசி காளான் பிரியாணி தயார்.

பயன்கள்:
அரிசி, கோதுமையை விட, வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம். மாவுச்சத்து குறைவாக காணப்படுவதால், உடலுக்கு நல்லது. இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் 'பி' கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன.

Thursday, September 8, 2016

நீர் மோர்


neer moru க்கான பட முடிவு
தேவையானவை
புளித்த தயிர் - 1 கப்,
தண்ணீர் - 3 கப், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தேவைக்கேற்ப.


செய்முறை 
புளித்த தயிரை கடைந்து இத்துடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, கடுகை, எண்ணெய் ஊற்றி  தாளித்து பொடித்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை கிள்ளி போட்டு கலக்கவும்.    

நீர் மோர்


neer moru க்கான பட முடிவு
தேவையானவை
புளித்த தயிர் - 1 கப்,
தண்ணீர் - 3 கப், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தேவைக்கேற்ப.


செய்முறை 
புளித்த தயிரை கடைந்து இத்துடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, கடுகை, எண்ணெய் ஊற்றி  தாளித்து பொடித்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை கிள்ளி போட்டு கலக்கவும்.    

Tuesday, July 19, 2016

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...


 garlic and onion க்கான பட முடிவு

பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும்.

ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும்.

நல்லெண்ணெய், 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று நீங்கும்.

கிராம்பு, கொட்டைப்பாக்கையும், சம அளவில் பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.

கொய்யா இலை, கரு வேலம்பட்டை, உப்பு மூன்றையும், சம அளவில் எடுத்து, பொடி செய்து, பல் துலக்கி வந்தால், பல் வலி விலகும்.

Friday, July 15, 2016

வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சி: அதிக கலோரியை எரிக்கலாம்


என்னதான் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தும் நம்மால் போதுமான அளவு கலோரிகளை எரிக்க முடிவது இல்லை. வீட்டில், நாம் செய்யும் அன்றாட வேலைகளை அதிகக் கவனத்துடன் செய்வதாலும் அல்லது வாழ்வில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலமும் கூடுதலாகச் சில கலோரிகளை எரிக்க முடியும். 

வீட்டில் பாத்திரம் கழுவுவது, தரை துடைப்பதன் மூலம் எவ்வளவு கலோரி

வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சி
செலவிடப்படுகிறது என்பது அவரவர் உடல் எடையைப் பொருத்தது. ஒருவரின் எடை 45 கிலோவாக இருந்து, 15 நிமிடங்கள் பாத்திரம் கழுவினால் 38 கலோரிகள் வரை எரிக்கப்படும். தரையை சுத்தம் செய்தால் 65 கலோரிகள் வரை எரிக்கலாம். 

வீட்டுச் சுவற்றில் பந்து வீசிப் பிடிப்பதன் மூலம், அரை மணி நேரத்தில் 105 முதல் 285 கலோரி வரை எரிக்கலாம்.  வீட்டில் தினமும் 50 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் விளையாடினால், 500 கலோரிகளை எரிக்கலாம்.  ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு போன் பேசுவதற்குப் பதில், பாதுகாப்பாக நடந்தபடியே பேசுங்கள். அவ்வப்போது எழுந்து உட்காருங்கள்.

இதனால், கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும்.  வீட்டில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு, சில நிமிடங்கள் நடனம் ஆடலாம்.  மணிக்கணக்கில் உட்கார்ந்த நிலையில் இல்லாமல், ஃபைல், பேப்பர் படிக்கும்போதுகூட எழுந்து நின்று படிக்கலாம். காலாற ஓய்வு அறைக்கு நடந்து ஐந்து நிமிடங்கள் புஷ் அப்ஸ் அல்லது ஜம்ப் செய்யலாம்.

இதனால், உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதுடன் 50 கலோரிகள் வரை எரிக்க முடியும்.  துடிப்பான வேகத்துடன் அதாவது மணிக்கு 4 மைல் வேகத்தில் 90 நிமிடங்கள் நடந்தால், 500 கலோரிகளை எரிக்கலாம்.  அலுவலகத்தைச் சுற்றிலும் ஒரு 10 நிமிடத்துக்கு நடந்தாலே, குறைந்தது 80 முதல் 100 கலோரிகளை எரிக்க முடியும். 

இளைஞர்கள், மூட்டுப் பிரச்சனை இல்லாதவர்கள் மணிக்கு 6 மைல் வேகத்தில் ஓடலாம். இதன் மூலம் 42 நிமிடங்களில் 500 கலோரிகளை எரித்துவிடலாம்.  குழந்தைகளுடன் விளையாடுங்கள். குழந்தைகளுடன் ஒரு ஒன்றரை மணி நேரத்தை செலவிடுவதன் மூலம் 500 கலோரிகளை எரிக்கலாம்.

இதனால், மன அழுத்தமும் குறையும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.  தினசரி 65 நிமிடங்கள் நீச்சல் செய்யலாம். நீச்சல் செய்யும் திறன், என்ன மாதிரியான நீச்சல் பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து, ஒரு மணி நேரத்தில் 450 முதல் 950 கலோரிகள் வரை எரிக்க முடியும். 

சைக்கிளிங் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பெடல் மிதிப்பதைப் பொருத்து 75 முதல் 670 கலோரிகளை வெறும் அரை மணி நேரத்திலேயே கூடுதலாக எரிக்க முடியும் 

கொத்தமல்லி சாண்ட்விச்


 coriander sandwich

என்னென்ன தேவை?

பிரெட் - 4 ஸ்லைஸ்,
வெண்ணெய் - தேவைக் கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி - 2,
உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க...

கொத்தமல்லி - 3/4 கப்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - 1/2 இஞ்சி துண்டு.

எப்படிச் செய்வது?  

அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியுடன், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவே தேவையான அளவு இந்த விழுதை வைத்து நன்கு மூடவும். தவாவில் வெண்ணெய் சேர்த்து, பிரெட்டை இரண்டு பக்கமும் நன்கு டோஸ்டு செய்து எடுக்கவும். சாஸுடன் பரிமாறவும்.