Pages

Showing posts with label சகஜ யோகா. Show all posts
Showing posts with label சகஜ யோகா. Show all posts

Sunday, September 18, 2016

சகஜ யோகா தியானத்தினால் என்ன நன்மைகள்

 சகஜ யோகா

மனித வாழ்வு உடல், உள்ளம், உணர்வு, ஆன்மா ஆகியவற்றின் இயக்கமாக உள்ளது. இவற்றின் ஒருங்கிணைந்த இயக்கம் சமநிலையான, அமைதியான வாழ்வுக்கு அவசியமாகிறது. தியானத்தில் குண்டலினி விழிப்படைந்து சாதகன் கடந்த கால அல்லது எதிர் கால எண்ணங்களின் தொந்தரவு இல்லாத எண்ணங்களற்ற அமைதியான நிலையை அடைய வழிசெய்கிறது.

இதற்காக நம்முள் படைக்கப்பட்டிருக்கும் ஆன்மீகக் கருவி (சூட்சும மண்டலம்) முள்ளந்தண்டில் 3 நாடிகள், 7 சக்கரங்கள் கொண்டது. அத்துடன் குண்டலினி சக்தி முள்ளந்தண்டில் உள்ள முக்கோண வடிவ எலும்பில் மூன்றரை சுற்று வடிவிலும், ஆன்மா இருதயத்திலும் உள்ளது. இக் குண்டலினி சக்தி எமக்குள் விழிப்படைந்து ஆன்மாவில் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்த காத்திருக்கிறது.

சகஜ யோகா தியானத்தின் போது குண்டலினி சக்தி விழிப்படைந்து சக்கரங்களுக்கு ஊடக மேலெழும்பி தலையுச்சி வழியாக வெளிப்படுகிறது. இது ஓர் அனுபவம். குண்டலினி சக்தியின் வெளிப்பாட்டை குளிர்ந்த காற்றாக வெளிப்படும் நுண்ணதிர்வுகளாக உள்ளம் கைகளிலும், தலையுச்சியிலும் உணரலாம். ஆன்மா விழிப்படைந்த நிலையில், குண்டலினி எங்கும் நிறைந்திருக்கும் சக்தியோடு இணைகிறது.

இதுவே தியான (யோக) நிலையாகும். இந்நிலையில் உடலில் லேசானது போன்ற உணர்வும், மனதில் எண்ணங்களற்ற அமைதிநிலையும் ஏற்படுகிறது. இந்த அமைதிநிலையே அமைதியான தூய வாழ்வின் ஆரம்பமாகும்.