Pages

Tuesday, June 28, 2016

குழந்தை ஏன்அழுகிறது?


குழந்தை
பள்ளி செல்லும் குழந்தைகளை கவனிக்க, இப்போதெல்லாம் பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை. பச்சிளங்குழந்தைகள் அழுவதற்கான காரணங்களை புரிந்து கொள்வது சிரமம். குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம். அதை எப்படி கண்டுபிடிப்பது? பசியால்தான்  பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டுப்பிடித்து விடலாம்.

குழந்தைகள் பால் குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பது போல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தைப் பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின் வெளிப்படும்.
பசி  தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரன்று அழுதால் சிறுநீர் கழிந்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்க தொடங்கிவிடும்.

வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்னநிலை மாற்றமோ ஏற்ப்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தைப்  பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும்,. குளிப்பாட்டி, பசியை தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், துங்கமுடியாமல் குழந்தை தவிக்கும். சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை துக்கி கொஞ்ச வேண்டும் என்பதற்க்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுப்பும், அரவணைப்பும் வருடலும் குழந்தைக்கு எப்போதும் தேவைப்படுகிறது. 

குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு.  பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3,4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில்   போட்டு தட்டி கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும். பால் புகட்டியதும் குழந்தை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்ப்படாது. குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும்.

குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்கவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும். குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்து விடும். குளிர்ந்த நீரிலும் சுடு நீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக் கூடாது. குளிப்பட்டும் நீரில் டெட்டொல் போன்ற எதயும் கலக்கவும் கூடாது. பேபி சோப், பேபி லோசன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். பல் முளைக்கும் பொது சில குழந்தைகள் வழியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது இரை தடவிப் பார்த்தால் உணர முடியும்.

பாதாம் பருப்பில் புரதம் இருக்கிறது

பாதாம் பருப்பு பாதாம் பருப்பு சாப்பிடுவதால், உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஜீரண சக்தியும் அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். பாதம் பருப்பை வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கி சாப்பிட முடியும் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. பாதாம் பருப்பை கிலோ கணக்கில் வீட்டில் வாங்கி வைத்து, சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, 10 ரூபாய்க்கு, வறுத்த பாதாம் பருப்பு, பாக்கெட் போட்டு பேக்கரிகளிலும், பெட்டிக்கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. டீ சாப்பிடும் போது அதை வாங்கி ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பாதாமுக்கு உண்டு. குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட கொடுத்து வந்தால், அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும். ரத்தத்துக்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும், கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும், 25 கிராம் பாதாம் பருப்பு சாப்பிடுதல் தவறில்லை. ஆனால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வழக்கமாக இருப்பது அவசியம்.

நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு, நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுத்தபடி சிகிச்சை பெற்றவர்கள், உடல் மெலிந்தவர்கள், பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ரத்தத்தில் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பை அதிகரித்து விடும் என பயப்பட வேண்டாம். தைரியமாக பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

Wednesday, June 22, 2016

நரை பரவுவதை தடுக்க...



நெல்லிக்காய் மற்றும் சீயக்காயை காய
வைத்து, பொடி செய்து, தலைக்கு
தேய்த்துக் குளித்து வந்தால், நாளாக
நாளாக நரை பரவுவது நீங்கும்.
நெல்லிக்காய்

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்!


வெந்தயம்

வெந்தயத்தை, அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவ காத்திருக்கிற அற்புத மருந்து வெந்தயம். வெந்தயம் நீரிழிவுக்காரர்களுக்கு மிக நல்லது என்பது தெரியும். ஏன் நல்லது எனத் தெரியுமா? சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, 80 - 110 வரை இருக்கலாம். நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து, இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும். அதிக கலோரியுள்ள உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது.

அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற, வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது. தினமும் இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும், வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதே போல புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கும். வெந்தயத்தில் உள்ள பிசின், குடலுக்குள் போய், தண்ணீரை எடுத்துக் கொண்டு, ஒரு ஸ்பான்ஜ் போல விரிவடையும்.

அது உணவுக்குழாயில் உள்ள நச்சுப்பொருள்களை எல்லாம் வெளியேற்றிவிடும். எனவே, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. வெந்தயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். அது அசிடிட்டி எனப்படும் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும். உணவின் மூலம் உடலுக்குள் சேரும், அமில,- காரத் தன்மைகளை பேலன்ஸ் செய்து, சரியான அளவில் வைக்கக்கூடியது வெந்தயம். வெந்தயம் கலந்த மோர் குடித்தால், அமிலத் தன்மை சரியாகி, செரிமானம் சீராகும்.

வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி இருந்தால், 10 கிராம் வெந்தயத்தை, மோரில் கலந்து சாப்பிட்டால், உடனே குணம் தெரியும். வெந்தயம் வயிற்றுக்குள் போய் ஊறி, கெட்ட கிருமிகளை உறிஞ்சி, இன்பெக்ஷனை சரியாக்கும். உடல் சூட்டினால் உண்டாகும் வலியையும் விரட்டும். வயிற்றில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருந்தாலும், வெந்தயம் வெளியேற்றி விடும். அமீபியாசிஸ் போன்ற நோய்களுக்கு வெந்தயம் பிரமாதமான மருந்து. தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும். சிறுநீரகங்கள் சீராக இயங்கும்.

வாயுத் தொந்தரவு நீங்கும். எலும்புகள் பலமாகும், சருமம் அழகு பெறும். வெந்தயத்தை வறுத்துப் பொடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, பால் சுரப்பு அதிகமாகும். மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் கோளாறுகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்து. உடல் சூட்டைத் தணித்து கர்ப்பப்பையைப் பலப்படுத்தும், மூலநோய்க்கும் நிவாரணம் தரும்.

உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கும் சீரகம்!

 jeerakam க்கான பட முடிவு

உடலை சீராக வைக்க பயன்பட்டதால், சீரகத்துக்கு சீரகம் என பெயர் வந்தது என பெரியவர்கள் கூறுகின்றனர். சீரகத்தின் மருத்துவ குணத்தை அறிந்தவர்கள், குடிநீரில் சீரகத்தை ஊற வைத்து சீரகத் தண்ணீரை பருகுவது வழக்கம்.

சிலர் அதில் எலுமிச்சம் பழத்தை அறுக்காமல் முழுதாக போட்டு, அந்த தண்ணீரை பருகுவார்கள். தொடர்ந்து சீரகத்தை உணவில் சேர்த்து கொள்வதன் வாயிலாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல் நீங்கும். திராட்சை ஜூசுடன் சீரகம் கலந்து பருகினால், ரத்த அழுத்தம் கட்டுப்படும். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மனநோய் குணமாகும்.

நல்ல ஜீரண சக்தி கொண்டது சீரகம். இதனால் அடிக்கடி இதனை உணவில் சேர்த்து கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு உலர்த்தி, தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை தினமும் ஒரு ஸ்பூன் வீதம் மோரில் கலந்து, குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத்தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்து, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்தம் நீங்கும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேக பளபளப்பும் கிடைக்கும்.
சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு, கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்துப் பருகி வந்தால், கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடிகள் தயாரிப்பில், சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயு தொல்லைக்கு மாமருந்து. சீரகம், நல்ல மிளகு பொடித்து, எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நிற்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். மெலிந்து போனவர்கள், சீரகத்தை தூள் செய்து லேகியமாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

Wednesday, April 27, 2016

யோகாசனத்தின் அனைத்து பலன்களும் கிடைக்கும் தோப்புக்கரணம்

யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது மனதையும்
கட்டுப்படுத்தக் கூடியது. யோகாசனம் செய்வதால் உடல் தசைகள் வலுப்பெறுகின்றன. உடலில் உள்ள மூட்டுகளின் இறுக்கம் தளர்ந்து நெகிழ்கின்றன. நாளமில்லாச் சுரப்பிகள் ஹார்மோன்களைக் கூடுதலாகவோ, குறைவாகவோ சுரக்காமல், சரியான அளவு சுரக்கும். குறிப்பாக தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகள் சரியாக வேலை செய்யும்.


சாதாரணமாக ஒவ்வொருவரும் நிமிடத்துக்கு 16 – 18 தடவை மூச்சுவிடுவோம். யோகாசனம் செய்தால் அது 12 -14 தடவைகளாகzககுறைந்துவிடும். அதாவது, அதிக நேரம் காற்றை உள்ளிழுத்து, வெளிவிடுவோம். இதனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.


மனதை ஒருநிலைப்படுத்த யோகாசனம் உதவும்.  மூச்சு மனதையும், உடலையும் இணைக்கும். மனம் சமநிலையில் இருக்கும் கோபப்படும்போது அட்ரீனல் சுரப்பி அதிகமாகச் சுரக்கும். இதனால் உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும்.  வியர்க்கும். பதட்டமாக இருக்கும். யோகாசனம் செய்தால் அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு ஒழுங்குபடும்.


இவ்வளவு பயன் தரக்கூடிய யோகாசனத்தைக் கண்டு பலர் பயப்படுகிறார்கள். எடுத்தவுடனே உடலை நன்றாக வளைக்கக் கூடிய யோகாசனங்களைச் செய்யக் கூடாது. செய்யவும் முடியாது. தசைகளையும், மூட்டுகளையும் நெகிழச் செய்யக் கூடிய எளிய யோகாசனப் பயிற்சிகளில் ஆரம்பித்து, படிப்படியாக வேறு கடினமான யோகாசனங்களைச் செய்ய வேண்டும்.


சிலர் யோகாசனம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள். யோகாசனமோ, வேறு எந்த உடற்பயிற்சியையோ செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் சொல்கிற சாக்குப் போக்கு இது. நேரமில்லை என்று சொல்பவர்கள், ஒரு மூன்று நிமிடங்கள் ஒதுக்கி


தோப்புக்கரணம் போட்டாலே போதும்! யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது  காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும்


இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.  உடல் இயக்கம் சீர்படுகிறது. தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு


தோப்புக்கரணம் போட வேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.


உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க  வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -  சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை.  இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம்  சீராகும்.


மூன்றுநிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.


ஸ்பைசி ஓட்ஸ் மோர்


தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - அரை கப் (வறுத்து கொள்ளவும்)

ஸ்பைசி ஓட்ஸ் மோர்

தயிர் - அரை கப்

ப.மிளகாய் - 2

இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்

புதினா இலை - 1 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை பழம் - பாதி

தண்ணீர் - 1 கப்

செய்முறை :

•  ஓட்சில் தயிர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• மிக்சியில் புதினா இலை, ப.மிளகாய், இஞ்சி போட்டு நன்றாக அரைக்கவும்.

• அடுத்து அதில் ஊறவைத்த ஓட்ஸ், தயிர் கலவையை ஊற்றி நன்றாக மென்மையாக அரைக்கவும்.

• அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலக்கவும்.

• இதை பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.