Pages

Showing posts with label நினைவாற்றல் அதிகரிக்க. Show all posts
Showing posts with label நினைவாற்றல் அதிகரிக்க. Show all posts

Tuesday, June 28, 2016

பாதாம் பருப்பில் புரதம் இருக்கிறது

பாதாம் பருப்பு பாதாம் பருப்பு சாப்பிடுவதால், உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி, ஜீரண சக்தியும் அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். பாதம் பருப்பை வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கி சாப்பிட முடியும் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. பாதாம் பருப்பை கிலோ கணக்கில் வீட்டில் வாங்கி வைத்து, சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, 10 ரூபாய்க்கு, வறுத்த பாதாம் பருப்பு, பாக்கெட் போட்டு பேக்கரிகளிலும், பெட்டிக்கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. டீ சாப்பிடும் போது அதை வாங்கி ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பாதாமுக்கு உண்டு. குழந்தைகளுக்கு தொடர்ந்து பாதாம் சாப்பிட கொடுத்து வந்தால், அவர்களது நினைவாற்றல் அதிகரிக்கும். ரத்தத்துக்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும், கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும், 25 கிராம் பாதாம் பருப்பு சாப்பிடுதல் தவறில்லை. ஆனால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வழக்கமாக இருப்பது அவசியம்.

நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு, நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுத்தபடி சிகிச்சை பெற்றவர்கள், உடல் மெலிந்தவர்கள், பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ரத்தத்தில் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பை அதிகரித்து விடும் என பயப்பட வேண்டாம். தைரியமாக பாதாம் பருப்பு சாப்பிடலாம்.