Healthy Tips, Natural Beauty, Beauty Tips, Beauty care Skin Care, Hair Beauty, Vegetable Recipes, Natural Food, Indian Recipes, New Recipes, Easy Recipes, Healthy Recipe, Cookery, Healthy Food, Breakfast Recipes, Top Secret Recipes --Visit this blog to know more!
Showing posts with label குழந்தை ஏன்அழுகிறது?. Show all posts
Showing posts with label குழந்தை ஏன்அழுகிறது?. Show all posts
Tuesday, June 28, 2016
குழந்தை ஏன்அழுகிறது?
பள்ளி செல்லும் குழந்தைகளை கவனிக்க, இப்போதெல்லாம் பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை. பச்சிளங்குழந்தைகள் அழுவதற்கான காரணங்களை புரிந்து கொள்வது சிரமம். குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம். அதை எப்படி கண்டுபிடிப்பது? பசியால்தான் பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டுப்பிடித்து விடலாம்.
குழந்தைகள் பால் குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பது போல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தைப் பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின் வெளிப்படும்.
பசி தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரன்று அழுதால் சிறுநீர் கழிந்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்க தொடங்கிவிடும்.
வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்னநிலை மாற்றமோ ஏற்ப்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தைப் பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும்,. குளிப்பாட்டி, பசியை தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், துங்கமுடியாமல் குழந்தை தவிக்கும். சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை துக்கி கொஞ்ச வேண்டும் என்பதற்க்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுப்பும், அரவணைப்பும் வருடலும் குழந்தைக்கு எப்போதும் தேவைப்படுகிறது.
குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு. பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3,4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில் போட்டு தட்டி கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும். பால் புகட்டியதும் குழந்தை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்ப்படாது. குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும்.
குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்கவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும். குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்து விடும். குளிர்ந்த நீரிலும் சுடு நீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக் கூடாது. குளிப்பட்டும் நீரில் டெட்டொல் போன்ற எதயும் கலக்கவும் கூடாது. பேபி சோப், பேபி லோசன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். பல் முளைக்கும் பொது சில குழந்தைகள் வழியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது இரை தடவிப் பார்த்தால் உணர முடியும்.
Subscribe to:
Posts (Atom)