Pages

Showing posts with label உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கும் சீரகம். Show all posts
Showing posts with label உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கும் சீரகம். Show all posts

Wednesday, June 22, 2016

உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்கும் சீரகம்!

 jeerakam க்கான பட முடிவு

உடலை சீராக வைக்க பயன்பட்டதால், சீரகத்துக்கு சீரகம் என பெயர் வந்தது என பெரியவர்கள் கூறுகின்றனர். சீரகத்தின் மருத்துவ குணத்தை அறிந்தவர்கள், குடிநீரில் சீரகத்தை ஊற வைத்து சீரகத் தண்ணீரை பருகுவது வழக்கம்.

சிலர் அதில் எலுமிச்சம் பழத்தை அறுக்காமல் முழுதாக போட்டு, அந்த தண்ணீரை பருகுவார்கள். தொடர்ந்து சீரகத்தை உணவில் சேர்த்து கொள்வதன் வாயிலாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல் நீங்கும். திராட்சை ஜூசுடன் சீரகம் கலந்து பருகினால், ரத்த அழுத்தம் கட்டுப்படும். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மனநோய் குணமாகும்.

நல்ல ஜீரண சக்தி கொண்டது சீரகம். இதனால் அடிக்கடி இதனை உணவில் சேர்த்து கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு உலர்த்தி, தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை தினமும் ஒரு ஸ்பூன் வீதம் மோரில் கலந்து, குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத்தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்து, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்தம் நீங்கும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேக பளபளப்பும் கிடைக்கும்.
சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு, கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும். சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்துப் பருகி வந்தால், கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடிகள் தயாரிப்பில், சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயு தொல்லைக்கு மாமருந்து. சீரகம், நல்ல மிளகு பொடித்து, எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நிற்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். மெலிந்து போனவர்கள், சீரகத்தை தூள் செய்து லேகியமாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.