Healthy Tips, Natural Beauty, Beauty Tips, Beauty care Skin Care, Hair Beauty, Vegetable Recipes, Natural Food, Indian Recipes, New Recipes, Easy Recipes, Healthy Recipe, Cookery, Healthy Food, Breakfast Recipes, Top Secret Recipes --Visit this blog to know more!
Tuesday, April 5, 2016
உடல் குண்டானவர்கள் மெலிய வேண்டும்
* உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க, உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.
* எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
செம்பட்டை முடியை கருமையாக்க!
*வறட்சியான, செம்பட்டை முடியை உடையவர்கள், ஆமணக்கு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* தலையில் தினமும் தேங்காய்ப் பால் தடவி குளித்து வந்தால், நாளடைவில் செம்பட்டை சரியாகும்.
* நிலா ஆவாரை, மரிக்கொழுந்து இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, குளித்து வந்தால் செம்பட்டை முடி மாறி கூந்தல் கருமை ஆகும்.
* தலைக்கு குளிப்பதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன், ஆமணக்கு எண்ணெய் தடவி குளித்தாலும் செம்பட்டை முடி மாறும்.
* ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
எலும்பு பாதிப்பா? உணவில் கவனம்
எலும்பு முறிவு, தசைகளில் பாதிப்பு ஏற்பட்டு, குணமாகும் கால கட்டத்தில், உணவு முறைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
கால்சியம் சத்து மிகுந்த பால் சார்ந்த உணவுகள், பச்சை இலை காய்கறிகள், கொட்டை வகைகள், பயிறு வகைகள் போன்றவை, நல்ல எலும்பை உருவாக்க உதவும்.
தவிர எலும்பு பாதிப்பு உள்ளவர்கள், சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவைகளை தவிர்த்து விட வேண்டும். வைட்டமின் 'டி' சத்து இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம். மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள், முட்டை போன்றவை, இதற்கு பேருதவியாக இருக்கும்.
மிகச் சூடான சூரிய ஒளி, கெடுதலை தரும். புரதச் சத்து உணவுகள், நல்ல சதையை உருவாகும். கொழுப்பு நீக்கிய அசைவ உணவுகளான சோயா உணவு வகைகள் நல்லது.
இதய பரிசோதனையில் இத்தனை வகைய...!
இதயத்தின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிய இன்று பல நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டதால், பலரை காப்பாற்றி விட முடிகிறது.
ஈ. சி. ஜி. (இதய மின் வரைபடம்): இதயம் சுருங்கும் போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுதும் பரவுகின்றன. இந்த மின் அலைகள் கருவி மூலம் பதிவு செய்வதே ஈ.சி.ஜி. யில் மாறுபாடுகள் இல்லாமல் கூட இருக்கும்.
மார்பு எக்ஸ்ரே: இதயம் விரிந்துள்ளதா என்பதையும், நுரையீரலின் ரத்த ஓட்டம் மற்றும் செயலாற்றும் தன்மையும் கண்டறியலாம்.
ரத்த பரிசோதனைகள்: அடிப்படையான ரத்த பரிசோதனைகள் செய்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, ரத்த அணுக்களின் அளவு, ஹீமோகுளோபின் அளவு, யூரியா, கிரியாட்டின் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இவை மூலம் இதய நோய்களை உருவாக்கும் குறைபாடுகளையும் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
சிறப்பு ரத்த பரிசோதனைகள்: ரத்தத்தில் ஏற்படும் மாறுதல்களை கண்டறிய 'சி. பி. கே - எம். பி. (cpk -mv -creatine phoshokinase myocardial band) என்ற பரிசோதனை செய்யப்படும். கிரியாட்டின் பச்ச்போகைநேஸ் என்ற என்சைம் அளவு பரிசோதிக்கப்படும். மாரடைப்பு இருந்தால் இதன் அளவு ரத்தத்தில் அதிகரித்திருக்கும். ட்ரோ போனின் 'டி பரிசோதனையும், மாரடைப்பு நோய்க்கான மாறுதல்களை உள்ளனவா என்பதை கண்டறிய உதவும்.
எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை : இதயத்தின் அமைப்பு, அதன் செயல்திறன், இதன் வாயிலாக கண்டு பிடிக்கப்படும். பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றை கண்டுப்பிடித்துவிடலாம்.
டிரட்மில் பரிசோதனை: சில நோயாளிகள் இதயத்தில் உள்ள அடைப்புகளை, அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் போதுதான் கண்டறிய முடியும். டிரட்மில் இயந்திரத்தில் நோயாளியை நோயாளியை செயற்கையாக நடக்க வைத்து, இதயத் துடிப்பு மாறுதல்களை நுணுக்கமாக ஈ.சி.ஜி. மூலம் கண்டறியும் பரிசோதனை.
எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை : இதயத்தின் அமைப்பு, அதன் செயல்திறன், இதன் வாயிலாக கண்டு பிடிக்கப்படும். பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றை கண்டுப்பிடித்துவிடலாம்.
டிரட்மில் பரிசோதனை: சில நோயாளிகள் இதயத்தில் உள்ள அடைப்புகளை, அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் போதுதான் கண்டறிய முடியும். டிரட்மில் இயந்திரத்தில் நோயாளியை நோயாளியை செயற்கையாக நடக்க வைத்து, இதயத் துடிப்பு மாறுதல்களை நுணுக்கமாக ஈ.சி.ஜி. மூலம் கண்டறியும் பரிசோதனை.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை: ரத்த குழாயில் ஏற்ப்பட்டுள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனை இது. கை அல்லது தொடை பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனை குழாயை செலுத்தி, இதயத்துக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்கள் எக்ஸ்ரே உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. குறைந்த செலவில் பின்விளைவுகள் இல்லாத வகையில் செய்யப்படுகின்றது.
கதிர் இயக்கப் பரிசோதனை (நியூக்ளியர் ஸ்கேன் ):
இதய நோயாளிகளுக்கு கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களை கொடுத்து பரிசோதனை செய்யப்படும். இதன் மூலம் இதய தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும் முடியும். ரத்த குழாய் அடைப்பால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்து விடலாம்.
கதிர் இயக்கப் பரிசோதனை (நியூக்ளியர் ஸ்கேன் ):
இதய நோயாளிகளுக்கு கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களை கொடுத்து பரிசோதனை செய்யப்படும். இதன் மூலம் இதய தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும் முடியும். ரத்த குழாய் அடைப்பால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்து விடலாம்.
நினைவாற்றலை மேம்படுத்த பயிற்சி
கவனமான பார்வை, ஆர்வம், அக்கறை, புதிய சிந்தனை இவைகள் தான் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணிகள். இம்மூன்றுக்குமே சிறப்பான பயிற்சிகள் தேவை.
எளிய பயிற்சி முறைகள்:
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,,4,,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலை கீழாக, 100, 98, 96 என்று இரண்டு இரண்டாக குறைத்து எண்ணுங்கள். பின்பு நான்கு நான்காக குறையுங்கள். இப்படியே 5, 6, 7 வரை தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி எழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால்,உங்களுடைய நினைவு திறன் நல்ல அளவில் வளர்ந்து இருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் 'எஸ் என்ற எழுத்தையெல்லாம் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால்எதனை 'எஸ்' அல்லது 'ஏ' எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை தெரிந்து கொள்ளலாம்.புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
'டிவி' யில் வரும் விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதை விட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள். இதே இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை நீகளே ஆறு அறைகளாகப் பிரிததுக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப்போடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையை திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்து நான்கு அறைகளிலும் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்தும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆறு புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அப்பியாசங்கள் செய்வது இதனால்லெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவு திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம். உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஒய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஒய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய் விடும். எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்து நினைவாற்றலை மேம்படுத்துங்கள்.
உறக்கத்தை தரும் உணவு பொருள்
நம்மில் பலர் தூக்கத்தை மறந்து இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருகின்றனர். உண்ணும் உணவும், வாழும் சூழ்நிலையும் ஒருவனின் நிம்மதியான தூக்கத்தை தொலைத்த துரதிர்ஷ்டசாலிகளாய் உள்ளனர்.
உறக்கம் வருவதில் பிரச்சனை இருப்பவர்கள், முதலில் உணவு கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், சரியான உணவினை உட் கொள்ளுவதன், மூலம் நல்ல உறக்கத்தைப் பெறலாம், என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தேநீர் : உறங்கச் செல்வதற்கு முன் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியானைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைபழம் தான். இது அதிக தசை இறுக்கத்தை தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது. ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.
ஓட்ஸ் : ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம், உறக்கம் வருவதற்கு உதவி செய்கிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கான் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைகின்றன . ஆனால் ஒட்சில் அதிக சீனி சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக் கொள்ளப் பாருங்கள். பால்: பால், யோகர்ட், பாலாடைக்கட்டி போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியள்ள கால்சியம், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன், நரம்பிழைகளின் உறுதி தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே உறங்க செல்வதற்கு முன்னர் யோகர்ட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்கும் போது, ரத்தத்தில் சர்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
செர்ரிபழம்: படுத்தவுடன் உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப் பழரசம் ஜூஸ் அருந்திவிட்டு படுக்கைக்கு செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கைகளை நன்கு கழுவி நோயை 'கை கழுவலாம்'
நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடை பிடித்தாலே, ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில், மிக முக்கியமானது, நம் கைகளை சுத்தப்படுத்துவது. கைகளை கழுவுவதாலேயே, பெரும்பாலான நோய்கள் வருவதை தடுக்கலாம். காரணம், காற்றின் மூலமும் நீரின் மூலமும், மற்றப் பொருட்களை தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.
கை கழுவும் முறையை சரியாகப் பின்பற்றாமல், பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது, வளரும் நாடுகள் தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும் போதும், கை கால்களில் பக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன.
இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே, அழிக்க முடியும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு, அடிப்படை காரணம், அவர்கள் கைகளை ஒழுங்காகக் சுத்தம் செய்யாமல் இருப்பதே. தவிர ஸ்டேபை 'லோகாக்கஸ் ஆரியஸ்' என்ற கிருமி, நகங்களில் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு, உணவருந்தும் சமயம் உட்சென்று, குடலில் பல்கிப் பெருகி நோயை தோற்றுவிக்கிறது.
கைகழுவும் முறை:
* காலையில் படுக்கையில் எழுந்தவுடன், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.
* மலம் கழித்தபின், சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.
* எந்த வேலை செய்தாலும், உடனே கை கழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட, பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.
* வாகனம் ஒட்டி வந்தபின் கைகளை கழுவுவது நல்லது.
* குழந்தைகளுக்கு எந்த உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களின் கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே, கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை, அவர்கள் சீராக கடைபிடிக்கும்படி, செய்ய வேண்டும்.
* கைகளை அவசர அவசரமாக, 2-3 வினாடிகளில் கழுவக்கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு, எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை, பயன்படுத்தக்கூடாது.
* கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே நோய்கள் நெருங்காமல் தடுக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)