பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்சனையை தீர்க சில டிப்ஸ் கற்றாழை சாற்றை தலையில் மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
பச்சை பயிறுமாவு மற்றும் தயிர் கலந்து தலையில்தேய்த்து பின்புகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
மருதாணி மற்றும் தயிரையும் கலந்து தலையில் தேய்த்து பின்பு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
வால் மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.