Pages

Showing posts with label ஹேர் டை உண்டாக்கும் அலர்ஜி. Show all posts
Showing posts with label ஹேர் டை உண்டாக்கும் அலர்ஜி. Show all posts

Saturday, March 12, 2016

ஹேர் டை உண்டாக்கும் அலர்ஜி

 ஹேர் டை உண்டாக்கும் அலர்ஜி

‘ஹேர் டை’ எல்லாருக்குமே சரிப்பட்டு வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். கண்ணுக்கு மையிடுவது மட்டுமல்ல, கூந்தலுக்குச் சாயம் பூசுவதும், காப்பிய காலத்திலேயே இருந்திருக்கிறது. அப்போது, வீட்டில் தயாரித்த இயற்கையான சாயங்களையே உபயோகித்து இருக்கிறார்கள்.

ஆனால், இப்போது யாருக்கும் அப்படி சாயம் தயாரிக்க தெரிவதில்லை. அதற்கு நேரமும் இல்லை. இயற்கை, கெமிக்கல், அக்ரிலிக் என்று மூன்று வகையான ஹேர் டை’கள் கடைகளில் கிடைக்கின்றன. மருதாணி முதல் வகையைச் சேர்ந்தது. அலர்ஜி போன்ற தொல்லைகள் தராதது. ஆனால், இதைப் பயன்படுத்தினால் தலைமுடி சிவப்பாக மாறிவிடுவதால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.

கெமிக்கல் மற்றும் அக்ரிலிக் ‘ஹேர் டை’களில் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. சிலருக்கு டை அடித்துக் கொண்டு வெயிலில் போனால், முகம், கண், புருவம், எல்லாம் வீங்கிப் போய்விடும். தலை அரிக்கும். கொப்புளம் வரும். இப்படி அலர்ஜி ஏற்பட்டால், ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பை தவிர்த்து மாற்று ‘ஹேர்டை’யை பயன்படுத்த வேண்டியதுதான்.

அலர்ஜி மாற்ற வேண்டுமே தவிர விளம்பரங்களில் மயங்கி அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. மேலும் ஹெர்பல் ‘ஹேர் டை’கள் கெமிக்கலைவிட கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் இவையும் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். ஏனெனில், நிறத்துக்காகச் சில கம்பெனிகள் கெமிக்கல் கலக்கின்றன. அதற்காக ‘ஹேர் டை’ உபயோகிக்கவே கூடாது என்றில்லை.

ஆனால் அளவாக உபயோகிக்க வேண்டும். ‘ஹேர் டை’ போடுவதற்கான கால இடைவெளியை முடிந்த அளவுக்கு தள்ளிப் போடலாம். எந்த ஒரு ‘ஹேர் டை’ வாங்கினாலும் அதில் இருந்து ஒரு துளி எடுத்து, காதின் பின்புறம் வைத்து இரண்டு மணி நேரம் விட்டு, ஏதேனும் அரிப்பு, கொப்புளம், தடிப்பு வருகிறதா? என்று பார்த்து ஒரு பிரச்சினையும் இல்லையெனில் உபயோகிக்கலாம்.