Pages

Showing posts with label தொடையை உறுதியாக்கும் லையிங் ஸ்குவாட் பயிற்சி. Show all posts
Showing posts with label தொடையை உறுதியாக்கும் லையிங் ஸ்குவாட் பயிற்சி. Show all posts

Saturday, March 12, 2016

தொடையை உறுதியாக்கும் லையிங் ஸ்குவாட் பயிற்சி

தொடையை உறுதியாக்கும் லையிங் ஸ்குவாட் பயிற்சி

தொடர்ந்து வீட்டில் உடற்பயிற்சி செய்தவர்கள், உடலை மேலும் ஃபிட்டாக வைத்திருக்க, சில மெஷின் பயிற்சிகள் செய்வது நல்லது. இந்த வகையில் லையிங் ஸ்குவாட் பயிற்சி தொடைக்கு உறுதியை தரும் பயிற்சியாகும். இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் அழகான கவர்ச்சியான தொடையை பெறலாம். 


இந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். முதலில் ஸ்குவாட் கருவியில் அமர வேண்டும். இந்த நிலையில் மேடையில் எடை எதுவும் இருக்காது. பின்னர், கால்களில் எடையைத் தாங்கிக்கொள்ளும் வகையில் லாக்கை அகற்ற வேண்டும். 



இப்போது மேடையின் முழு எடையும் கால்களில் இருக்கும். மூச்சை வெளியே விட்டபடி கால் முட்டியை மடக்கி, மேடையைக் கீழே கொண்டுவர வேண்டும். சில நொடிகளுக்குப் பிறகு, மூச்சை நன்கு இழுத்து, மேடையை மேலே உயர்த்த வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை 15 முதல் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். 



பலன்கள்: தொடைகள் உறுதியாகும். அழகான தோற்றம் கிடைக்கும்.