Pages

Friday, March 11, 2016

ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி


ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி

உடற்பயிற்சியைப் பொறுத்தவரையில், யாரும் சுயமாக செய்யக் கூடாது. உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளை முதலில் கற்ற பிறகுதான், தனியாகச் செய்ய வேண்டும். கார்டியோ பயிற்சிகளில் தொடங்கி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகள் வரை எந்த உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். 


வார்ம் அப் பயிற்சிகள் தசைகளை நன்றாக இறுக்கி, உடலின் உள் வெப்பத்தை அதிகரித்து, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றவாறு உடலினை மாற்றும். இந்தப் பயிற்சிகள் செய்யாமல், நேரடியாக உடற்பயிற்சி செய்தால், தசைகளில் வலி ஏற்படும். ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி உடலுக்கு வார்ம் அப் பயிற்சியே. இதை மட்டும் தனியாகவும் செய்யலாம். 



ரன் ஆன் ப்ளேஸ் பயிற்சி என்பது வேறு ஒன்றும் இல்லை. நின்று கொண்டே ஜாக்கிங் செய்வது போன்றது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நிற்க வேண்டும். நின்ற இடத்திலேயே மெதுவாக ஜாக்கிங் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மிகவும் வேகமாகச் செய்ய வேண்டாம், மிதமான வேகத்தில் 5 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். 



பின்னர் படிப்படியாக நிமிடங்களின் அளவை அதிகரித்து கொள்ளலாம். வார்ம் அப் பயிற்சியாக செய்வதாக இருந்தால் 10 விநாடிகள் மட்டும் செய்தால் போதுமானது. பயிற்சியாக செய்வதாக இருந்தால் தினமும் 20 நிமிடங்கள் செய்யலாம். இந்த பயிற்சி உடல் முழுவதிற்கும் பலன் தரக்கூடியது. 



பலன்கள்: உடல் முழுவதும் உள்ள தசைகள், உடற்பயிற்சிக்கு உறுதுணை புரிய, இந்தப் பயிற்சியைச் செய்வது அவசியம்.

மாரடைப்பை தடுக்கும் அபான வாயு முத்திரை

மாரடைப்பை தடுக்கும் அபான வாயு முத்திரை


அபான வாயு முத்திரைமாரடைப்பை தடுக்க தினம் 10 நிமிடம் செலவு செய்யுங்கள். நண்பர்களே, இது அபான வாயு முத்திரை. தினமும் ஒரு 10 நிமிடங்கள் இந்த முத்திரை பயிற்சி செய்தால் மாரடைப்பு நம்மை விட்டு ஓடிவிடும்.


ஆட்காட்டி விரலை மடக்கி வைத்துக்கொள்ளுங்கள், பின்பு கட்டை விரலையும், நடு விரலையும், மோதிர விரலையும் இணையுங்கள், சுண்டு விரலை மேலே நீட்டுங்கள், அவ்வளவுதான், இதுதான் அபானவாயு முத்திரை. முயலுங்கள், தொடருங்கள், இதயம் பலப்படும், ஆயுள் நீடிக்கும்.

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்


ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்


சிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். 


வறுத்த உளுத்தம் பருப்பு - 100 கிராம், 
கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை - 10, 
கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் - 5. 



இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். 2 வாரத்தில் மாற்றம் தெரிவதை காணலாம்.

Tuesday, March 8, 2016

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

உடல் மேம்பட பெண்களின் முகத்தில் மெல்லிய முடிகள் இருக்கும். இது இயற்கையான இன்றுதான். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மேல் தாடையிலும் கீழ் தாடையிலும் கன்னத்திலும் முடி வளர்ந்திருக்கும். உண்மையில் இது உடலில் உள்ளே ஏற்பட்டிருக்கும் நோய் அறிகுறி.

”ஆண்கள்போல் பெண்களுக்கு இப்படி மேல் தாடையிலும் கீழ் தாடையிலும் கன்னத்திலும் முடி வளர்வதை ஹிருசிட்டிசம் என்போம். இந்த பிரச்சனைக்கான காரணங்கள் ஆண்களுக்குரிய ஆன்ட்ரஜன் பெண்களின் உடலில் அதிகமாக இருந்தால் இந்தப் பிரச்சனை வருகிறது. சில பெண்களுக்கு சினைப்பையில் கட்டிகள் வரும்போது ஆண்களுக்குரிய ஹார்மோனான ஆன்ட்ரஜன் கூடுதலாக சுரக்கும். இதுவே பெண்களுக்கு ஆண்களைப்போல் முடி வளர்வதற்கு காரணமாகிறது. 

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் உடலில் ஹார்மோன் அளவை கண்டுபிடித்து அதை சரிசெய்ய வேண்டும்.  சினைப் பையில் கட்டிகள் இருந்தால் அதற்குரிய மருத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்  முகத்தில் அடர்த்தியாக வளர்ந்த முடிகளை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். லேசர் சிகிச்சையில் டையோடு லேசர் மற்றும் ஐ.பி.எல் லேசர் என இருவகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் டையோடு முறைதான் சிறந்தது.  லேசர் சிகிச்சையை மாதம் ஒருமுறை என 5 மாதம் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு வருடம் ஒருமுறை செய்ய வேண்டும். லேசர் சிகிச்சையால் முடியின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஆனால் நூறு சதவீதம் அகற்ற முடியாது.

உங்கள் உடற்கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்ள

Plie Squats க்கான பட முடிவு

Plie Squats க்கான பட முடிவு
உங்கள் உடற்கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற்பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.

• குந்து பயிற்சி (Squats)  : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.

• ஸ்டேப்-அப்ஸ் (Step Ups)  : வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்டவடிவாக உதவும்.

• லாஞ்சஸ் (Lunges) : லாஞ்சஸ் என்பது எடையை கைகளில் தாங்கி ஒரு காலை முன்வைத்து மற்றொரு காலை மட்டும் மண்டியிட வேண்டும். இதன் மூலம் உங்கள் கால்கள் ஸ்ட்ரெச்சிங் ஆகும். இது போல இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்வதனால் உங்கள் பின்னபக்கம் இருக்கும் கொழுப்பு விரைவில் குறையும்.

• குவியல் குந்து பயிற்சி (Plie Squats) : உங்கள் கால்களை கொஞ்சம் அகலமாக அகட்டி, உங்கள் இரண்டு தொடைகளும் நேர் கோடாக வரும் அளவு அமர்ந்து எழுந்திரிக்கும் பயற்சி தான் குவியல் குந்து பயிற்சி (Plie Squats). இந்த பயிற்சியின் மூலம் உங்கள் இடை, தொடை மற்றும் பின்பாகம் பகுதிகள் வலுவாகும் மற்றும் கவர்ச்சியான தோற்றம் பெறும்.

• கிக்-பேக் : ஒரு முனையில் எடையுடன் கட்டப்பட்ட கம்பி இருக்கும். மற்றொரு முனை உங்கள் காலோடு இணைக்கப்பட்டிருக்கும். இப்போது உங்கள் காலை பின்னோக்கி உதைப்பதை போல இழுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால், தொடை, பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதி வலிமைடையும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் முட்டி பகுதி மடங்காது செய்ய வேண்டும்.

Monday, February 15, 2016

உடல் அழகை மேம்படுத்தும் ஆயுர்வேதிக் மலையாள மசாஜ் சிகிச்சை

உடல் அழகை மேம்படுத்தும் ஆயுர்வேதிக் மலையாள மசாஜ் சிகிச்சை


ஆயுர்வேத மருத்துவமுறையில் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் மருந்துகளும், மருத்துவமுறைகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆயுர்வேத மசாஜ் ஆகும்.


இந்த முறையால் கேரளாவின் புராதன மருத்துவமனைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றன. சாதாரண மசாஜ் செய்யும் முறைக்கு ஆயுர்வேதத்தில் ‘அப்யங்கா’ என்று பெயர்.



அப்யங்காவில் உடல் முழுவதும் மூலிகை எண்ணெய்யை தடவி, மெதுவாகப்பிடித்துவிடுவார்கள். இதனால், ஆழ்ந்த தூக்கம் வரும். உடல், மனம், மூளை இம்மூன்றும் நல்ல சுறுசுறுப்பை அடையும்.



இந்த சிகிச்சையை உரிய நேரங்களில் செய்து வரும்போது தனியாக எதுவும் க்ரீம்கள் அழகு சாதன பொருட்கள் உபயோகிக்க வேண்டிய தேவையில்லை. தானாகவே முகம் பொலிவு பெறும்.



‘பிழிச்சல்’என்றொரு முறை உண்டு. இதில் இளம் சூடான மூலிகை எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி, தாள கதியில் உடலை அழுத்தித் தேய்ப்பார்கள்.



மசாஜீக்கு வந்திருப்பவரின் உடல் உபாதையைப் பொறுத்து, மசாஜ் செய்பவர்கள் முதுகு, இடுப்பு போன்ற பகுதிகளை காலால் மிதித்து மசாஜ் செய்வர்.



ஒருநாளுக்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வீதம் குறைந்தது ஒரு வாரம் அதிகபட்சம் 3 வாரங்களுக்கு இப்படிப்பட்ட மசாஜ் செய்ய வேண்டியிருக்கும்.



இதனால், ஆர்த்திரிடிஸ், பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி நீங்கிவிடும். இதனால் செயலில் சுறுசுறுப்பு பிறக்கும். உடல் தளர்வடையாது. முகம் தெய்வீக அம்சத்துடன் களையாக இருக்கும்.



சிரோதாரா என்ற ஆயுர்வேத சிகிச்சையானது டென்ஷனோடு வாழ்ந்துவருபவர்களுக்கு மிக அவசியமானது.



தொழிற்சங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்கள், உளவுத்துறையில் இருப்பவர்கள், அரசாங்கத்தின் நிழல் சக்தியாக செயல்படுபவர்கள் மற்றும் டென்ஷனோடு வாழ்பவர்களுக்கு சிரோதாரா மிகச்சிறந்த சிகிச்சையாகும்.



மூலிகை எண்ணெய், மூலிகை சேர்க்கப்பட்ட பால், மோர் அல்லது மூலிகைச்சாற்றினை சிறிய குழல் வழியாக நெற்றியில் தொடர்ந்து விழும்படி செய்வதுதான் ‘சிரோதாரா மூலிகை சிகிச்சை முறையாகும்.



இந்த ஆயுர்வேத சிகிச்சைகளைச் செய்வதற்கு ஏற்ற காலம் கேரளாவின் மழைக்காலம்தான். அப்போது இந்த சிகிச்சை அதிக பலன் தரும். தூசிகள் இராது.



இதன் மூலம் தோலில் இருக்கும் துவாரங்கள் விரிந்து பெரிதாகும். இதனால், மூலிகை எண்ணெய் உடலினுள் இழுக்கப்பட்டு உடல் வனப்பு பெறும் உடல் உறுப்புகள் அழகு பெறும்.



மேற்கண்ட மூலிகை சிகிச்சை முறைகளை பெண்கள், மற்றும் ஆண்கள் இருவருமே செய்து கொள்ளலாம். இதன் மூலம் அனைவரையும் கவரும் தோற்றத்துடன் இயற்கை அழகுடன் இருக்கலாம்.

Sunday, February 14, 2016

அன்பு செய்ய கற்றுக்கொடுங்கள்


 

அவருக்கு அன்பை வெளிப்படுத்த தெரியாது. அன்பு செய்ய கற்றுக்கொடுக்க
வேண்டும். அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் அறிவுரைகளும், போதனைகளும் சொல்லப்படுகின்றன. அன்பு, இயல்பானது; உணரக்கூடியது. இல்லாத, தெரியாத, அறியாத, சாத்தியமில்லாத ஒன்றை வெளிப்படுத்தத்தான், கற்றுத்தர வேண்டும்.

நாம் சமூகமாக வாழ்கிறோம். பழகுதல் என்பது சமூகத்தின் முக்கியமான அம்சம். கலாசாரம், சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவை, பழகுவதற்கு வரைமுறைகளையும், நெறிமுறைகளையும் ஏற்படுத்தி உள்ளன.

வெளிப்படையாக, யதார்த்தமாக உணர்வுகளை காட்டுவது, அறிவீனமாக கருதப்படுகிறது. நாசூக்காக, நாகரிகமாக உணர்வுகளை காட்டும் போது இனிமையானவர், பண்பானவர் என்ற பாராட்டுகள் கிடைக்கின்றன. அந்த குணங்கள், சாத்தியமாகின்றன; சாமர்த்தியத்தின் அடையாளமாகவும் நம்பப்படுகின்றன.

அன்பை இயல்பாகவே வெளிப்படுத்துவது லகுவானதாகும். அன்பு என்றுமே சிரமப்படுத்தாது. எனவே, அதை வெளிப்படுத்த கற்றுத் தருவதை விட, அன்பை எப்படி பெறுவது, உணர்வது என்று கற்றுக்கொள்வது பயனுள்ளது. அன்பை இனங்கண்டு கொண்டாலே, அது நம்மை வந்தடையும்.

சமூகத்தில் வாழும்போது, இயல்பாக இருப்பதை விட சாமர்த்தியமாக இருப்பது, அவசியமாகிறது. இல்லாத ஒன்றை கூட, இருப்பதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறோம். எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் மலிந்து போய்விட்டன. எனவே, இந்த சமுதாயத்தில் வெற்றிபெற, இல்லாத அன்பை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்; கற்றுக் கொடுங்கள்.