Pages

Showing posts with label அன்பு செய்ய கற்றுக்கொடுங்கள். Show all posts
Showing posts with label அன்பு செய்ய கற்றுக்கொடுங்கள். Show all posts

Sunday, February 14, 2016

அன்பு செய்ய கற்றுக்கொடுங்கள்


 

அவருக்கு அன்பை வெளிப்படுத்த தெரியாது. அன்பு செய்ய கற்றுக்கொடுக்க
வேண்டும். அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் அறிவுரைகளும், போதனைகளும் சொல்லப்படுகின்றன. அன்பு, இயல்பானது; உணரக்கூடியது. இல்லாத, தெரியாத, அறியாத, சாத்தியமில்லாத ஒன்றை வெளிப்படுத்தத்தான், கற்றுத்தர வேண்டும்.

நாம் சமூகமாக வாழ்கிறோம். பழகுதல் என்பது சமூகத்தின் முக்கியமான அம்சம். கலாசாரம், சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவை, பழகுவதற்கு வரைமுறைகளையும், நெறிமுறைகளையும் ஏற்படுத்தி உள்ளன.

வெளிப்படையாக, யதார்த்தமாக உணர்வுகளை காட்டுவது, அறிவீனமாக கருதப்படுகிறது. நாசூக்காக, நாகரிகமாக உணர்வுகளை காட்டும் போது இனிமையானவர், பண்பானவர் என்ற பாராட்டுகள் கிடைக்கின்றன. அந்த குணங்கள், சாத்தியமாகின்றன; சாமர்த்தியத்தின் அடையாளமாகவும் நம்பப்படுகின்றன.

அன்பை இயல்பாகவே வெளிப்படுத்துவது லகுவானதாகும். அன்பு என்றுமே சிரமப்படுத்தாது. எனவே, அதை வெளிப்படுத்த கற்றுத் தருவதை விட, அன்பை எப்படி பெறுவது, உணர்வது என்று கற்றுக்கொள்வது பயனுள்ளது. அன்பை இனங்கண்டு கொண்டாலே, அது நம்மை வந்தடையும்.

சமூகத்தில் வாழும்போது, இயல்பாக இருப்பதை விட சாமர்த்தியமாக இருப்பது, அவசியமாகிறது. இல்லாத ஒன்றை கூட, இருப்பதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறோம். எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் மலிந்து போய்விட்டன. எனவே, இந்த சமுதாயத்தில் வெற்றிபெற, இல்லாத அன்பை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்; கற்றுக் கொடுங்கள்.