ஆயுர்வேத மருத்துவமுறையில் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் மருந்துகளும், மருத்துவமுறைகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆயுர்வேத மசாஜ் ஆகும்.
இந்த முறையால் கேரளாவின் புராதன மருத்துவமனைகள் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றன. சாதாரண மசாஜ் செய்யும் முறைக்கு ஆயுர்வேதத்தில் ‘அப்யங்கா’ என்று பெயர்.
அப்யங்காவில் உடல் முழுவதும் மூலிகை எண்ணெய்யை தடவி, மெதுவாகப்பிடித்துவிடுவார்கள். இதனால், ஆழ்ந்த தூக்கம் வரும். உடல், மனம், மூளை இம்மூன்றும் நல்ல சுறுசுறுப்பை அடையும்.
இந்த சிகிச்சையை உரிய நேரங்களில் செய்து வரும்போது தனியாக எதுவும் க்ரீம்கள் அழகு சாதன பொருட்கள் உபயோகிக்க வேண்டிய தேவையில்லை. தானாகவே முகம் பொலிவு பெறும்.
‘பிழிச்சல்’என்றொரு முறை உண்டு. இதில் இளம் சூடான மூலிகை எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி, தாள கதியில் உடலை அழுத்தித் தேய்ப்பார்கள்.
மசாஜீக்கு வந்திருப்பவரின் உடல் உபாதையைப் பொறுத்து, மசாஜ் செய்பவர்கள் முதுகு, இடுப்பு போன்ற பகுதிகளை காலால் மிதித்து மசாஜ் செய்வர்.
ஒருநாளுக்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வீதம் குறைந்தது ஒரு வாரம் அதிகபட்சம் 3 வாரங்களுக்கு இப்படிப்பட்ட மசாஜ் செய்ய வேண்டியிருக்கும்.
இதனால், ஆர்த்திரிடிஸ், பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி நீங்கிவிடும். இதனால் செயலில் சுறுசுறுப்பு பிறக்கும். உடல் தளர்வடையாது. முகம் தெய்வீக அம்சத்துடன் களையாக இருக்கும்.
சிரோதாரா என்ற ஆயுர்வேத சிகிச்சையானது டென்ஷனோடு வாழ்ந்துவருபவர்களுக்கு மிக அவசியமானது.
தொழிற்சங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்கள், உளவுத்துறையில் இருப்பவர்கள், அரசாங்கத்தின் நிழல் சக்தியாக செயல்படுபவர்கள் மற்றும் டென்ஷனோடு வாழ்பவர்களுக்கு சிரோதாரா மிகச்சிறந்த சிகிச்சையாகும்.
மூலிகை எண்ணெய், மூலிகை சேர்க்கப்பட்ட பால், மோர் அல்லது மூலிகைச்சாற்றினை சிறிய குழல் வழியாக நெற்றியில் தொடர்ந்து விழும்படி செய்வதுதான் ‘சிரோதாரா மூலிகை சிகிச்சை முறையாகும்.
இந்த ஆயுர்வேத சிகிச்சைகளைச் செய்வதற்கு ஏற்ற காலம் கேரளாவின் மழைக்காலம்தான். அப்போது இந்த சிகிச்சை அதிக பலன் தரும். தூசிகள் இராது.
இதன் மூலம் தோலில் இருக்கும் துவாரங்கள் விரிந்து பெரிதாகும். இதனால், மூலிகை எண்ணெய் உடலினுள் இழுக்கப்பட்டு உடல் வனப்பு பெறும் உடல் உறுப்புகள் அழகு பெறும்.
மேற்கண்ட மூலிகை சிகிச்சை முறைகளை பெண்கள், மற்றும் ஆண்கள் இருவருமே செய்து கொள்ளலாம். இதன் மூலம் அனைவரையும் கவரும் தோற்றத்துடன் இயற்கை அழகுடன் இருக்கலாம்.
No comments:
Post a Comment