Pages

Sunday, February 14, 2016

நரை முடியை மறைக்கும் ஹேர் பேக்குகள்


நரை முடியை மறைக்கும் ஹேர் பேக்குகள்

நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்து மனதை ரிலாக்ஸாக வைத்து, ஒருசில ஹேர் பேக்குகளை முடிக்கு வாரம் ஒருமுறை போட்டு வந்தால், நரை முடியை மறைக்கலாம். 


• ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/4 கப் செம்பருத்தி பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து, தலையை நீரில் ஒருமுறை அலசி, பின் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் நரை முடி மறையும். 



• ஒரு வாணலியில் கடுகு எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் கறிவேப்பிலை கொஞ்சம் போட்டு தாளித்து இறக்கி குளிர வைத்து, ஈரமான தலையில் தடவி 2 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வந்தால், நரை முடி மறையும். 



• அருகம்புல் பொடியை தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஈரமான ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். 



• ஒரு பௌலில் 1 கப் ஹென்னா பொடியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வரவேண்டும். கோடைக்காலத்தில் இந்த ஹென்னா ஹேர் பேக் உடல் சூட்டை குறைக்கும்.

கழுத்தில் வரும் சுருக்கத்தை போக்க வழிகள்

கழுத்தில் வரும் சுருக்கத்தை போக்க வழிகள்

பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு மட்டும் கொடுப்பதில்லை. சில பெண்களுக்கு முகம் 20 வயது போல் தோற்றமளித்தால், கழுத்து 35 வயது போல் காட்சியளிக்கும். நிறைய ஆபரணங்களைப் போட்டு கழுத்து கறுத்து போயிருக்கும். 


இல்லாவிட்டால் வியர்வையால் சுருங்கி காட்சியளிக்கும். முகத்தின் பளபளப்புக்காக பிளிச்சிங், பேஷியல் என்று செய்துகொள்பவர்கள் கழுத்தை மட்டும் கண்டுகொள்ளாமலே விட்டுவிடக்கூடாது. கழுத்து பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இப்பகுதி சட்டென்று தளர்ந்து போய்விடும். 



இதனால் தான் முகம் இளவயது போல் தோற்றமளித்தாலும், கழுத்து முதுமையை காட்டுகிறது. கழுத்துக்கென்றே வகைவகையான ஸ்பெஷல் பிளீச்ங் இருக்கிறது. சிலரின் கழுத்து வறண்டு போயிருக்கும். அதற்கு முதலில் தயிரை கழுத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவேண்டும். பின்னர், மிதமான சுடுதண்ணீரால் சற்று அழுத்தித் தேய்த்துக் கழுவினால், கழுத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். வெயில் தொடர்ந்து கழுத்தில் விழுந்தால் கழுத்துப்பகுதி கறுத்துவிடும். 



தலைமுடியில் இருக்கும் எண்ணெய் பசைகூட கழுத்தில்பட்டு கறுத்து விடும். இதற்கு வெள்ளரிச்சாறு சிறந்த நிவாரணம். வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கழுத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போல் காட்சியளிப்பவர்கள் குளிப்பதற்கு முன்னால், எலுமிச்சை சாறில் கஸ்தூரி மஞ்சளை அரைத்துக் குழைத்துக் கழுத்தில் நன்றாக பூசி, பத்து நிமிடம் ஊற விட வேண்டும். 



பின்பு மிதமான சுடுநீரில் கழுத்தைக்கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும். கழுத்து மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் பளபளப்பாக தோன்றும். சில பெண்களுக்கு கழுத்தில் வரிவரியாக காணப்படும். இவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவுடன், இரண்டு சொட்டு கிளிசரின், ஒரு சொட்டு பன்னீர் சேர்த்து கழுத்தில் பூச வேண்டும். 



இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்திலுள்ள வரிகள் மறைந்து, சங்கு கழுத்து போல் காட்சிதரும். சிலர் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் கழுத்து மட்டும் நிறம் கம்மியாகி கருத்துப்போயிருக்கும். கழுத்து நிறைய செயின் போடுவதால் கழுத்தில் முடிச்சு முடிச்சாக காணப்படும். 



அதே போல் கவரிங் செயின் போடும் பெண்களுக்கும் கழுத்து கறுப்பாகிவிடும். இவர்கள் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து தொடர்ந்து கழுத்தில் தேய்த்து வரவேண்டும். முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும். இதனால் கறுத்து போன கழுத்து பளிச்சென்று மாறிவிடும்.

என்றும் இளமையாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை

என்றும் இளமையாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை


இன்றைய காலகட்டத்தில் அனைவரும் இளமையோடு இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான முயற்சியை எடுக்காமல் புலம்புகிறார்கள். நம்மை இளமையோடு வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. தினமும் கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் அழகு ராணியாக திகழலாம். 


• வைட்டமின் A, வைட்டமின் C அதிகளவு உள்ள காய்கறிகளை தினமும் அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இவை உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து காக்கிறது. மேலும் கருவளையம், தோல் சுருக்கம் வருவதையும் தடுத்து இளமையோடு வைத்திருக்க உதவுகிறது. 



• முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முளைகட்டிய பயிறு வகைகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ளுங்கள் இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 



• ஒரு பப்பாளி துண்டை எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் நன்றாக தேய்த்து கழுவுங்கள். இதனால் உங்கள் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும். தினமும் இதை செய்யலாம். 



• வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கலத்து முகம், கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இது சருமத்தை மென்மையாக்கும். • தேன் சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான சரும நோய்களையும் போக்க வல்லது. இதற்கு தேனை முகம், கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்த பின் கழுவி விடவும். இது உங்கள் ஒளிரும் பளபளப்பான சருமத்தை தரும். 



• வெண்ணெய் உடன் பால் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நன்கு காய்ந்த உடன் கழுவி விடவும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும். 



• வெள்ளரிக்காய் விழுதில் சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி சுத்தமாக்குகிறது. 



• தினமும் தூங்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி விட்டு படுக்க செல்லவும். ஏனெனில் சருமத்தில் அதிகளவில் தூசிகள் இருக்கும். இவ்வாறு செய்வதால் உங்கள் சருமம் சுத்தமாகவும், பிரஷ்ஷாகவும் இருக்கும்.

Thursday, February 11, 2016

மருத்துவ மகத்துவ மருதாணி!

mehndi marriage designs க்கான பட முடிவுமருதாணியை விரும்பாத மங்கையர் உண்டா? மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கின்றன என்று பார்க்க போட்டியே நடக்கும் அந்தக் காலத்தில். இப்போது அவ்வளவு எல்லாம் சிரமப்படத் தேவையே இல்லை. மெஹந்தி கோன், மெஹந்தி பேஸ்ட், மருதாணி பவுடர் என்று பல வடிவங்களில் மருதாணி கிடைக்கிறது. விரைவாக நிறமும் கிடைக்கிறது.

மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றன. மருதாணியின் மகத்துவத்தை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் வித்யா.கே.எம். ‘‘மருதாணியின் அறிவியல் பெயர் ‘லாசோனியா இன்னர்மிஸ்’. மருதாணி சிறிய புதர்ச்செடி போல நெருக்கமாக வளரும். இதன் இளம் இலைகள் வெளிர் பச்சையாகவும், முதிர் இலைகள் அடர் பச்சையாகவும் காணப்படும். இதன் இலைகள் கசப்புச்சுவை உடையவை. 

மருதாணியில் ஹென்னா டோனிக் அமிலமும், நிறமூட்டக்கூடிய காரணிகளும் அடங்கியிருக்கின்றன. மருதாணியை ஆயுர்வேத மருத்துவத்தில் காயங்களை, கொப்புளங்களை சரியாக்கவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், கூந்தல்  வளரவும் பயன்படுத்துகிறோம். 

மருதாணி உடல் சூட்டை தணித்து  குளிர்ச்சி தரும். சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு மருதாணி அருமருந்தாகும். மருதாணி பூக்களை 3 கிராம் எடுத்து அரைத்து அதை சுடுதண்ணீரில் கலந்து, இரவு சாப்பிட்ட பின், தொடர்ந்து 3 மாதங்களுக்கு குடித்துவர, தூக்கம் இல்லாமை, முடி கொட்டுதல் இரண்டும் சரியாகி விடும். 

நகங்களில் வரும் பூஞ்சைக் கிருமி தாக்குதல், நகச்சுற்று போன்ற பிரச்னைகளுக்கும் மருதாணியை அரைத்துப் பூசி வந்தால் சரியாகும். நகங்களின் இடுக்கில் சீழ்கட்டி இருந்தால் மருதாணியுடன், மஞ்சள் அரைத்துப் பூசலாம். தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதால் வரும் சேற்றுப்புண்கள், வேனல் கட்டிகள், கொப்புளங்களுக்கும் மருதாணி நல்ல மருந்து. சருமம் சார்ந்த நோய்களுக்கு மூலகாரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததே. ரத்தத்தை சுத்திகரிக்க 12 கிராம் மருதாணி இலைகளை எடுத்து, சுடுநீரில் கொதிக்க வைத்து, டிகாக்ஷன் செய்து, அதில் 8 டம்ளர் தண்ணீர் கலந்து, ஒரு டம்ளர் வீதம் இரவு உணவுக்குப் பின் குடிக்கலாம். தோல் அரிப்பு, கொப்புளங்களும் நீங்கும்.

முடி உதிர்வை தடுக்க மருதாணி இலைகளை அரைத்து வெட்டிவேர் கசாயத்துடன் சேர்த்து, ஆலிவ் ஆயில், முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்து, ஒரு இரும்பு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து இந்தக் கலவையை முன் நெற்றி, மயிர்க்கால்களில் நன்கு தேய்த்து குளிக்கலாம், மருதாணி, துளசி, செம்பருத்தி இலைகளை உலர வைத்து அரைத்த கலவையை, தேங்காய் எண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து வந்தால் மயிர்க்கால்கள் அடர்த்தியாகும்.

திருமணத்துக்கு ஓரிரு நாள் முன் மருதாணியை திருமணப் பெண்ணின் கை, கால்களில் விதவிதமாக வைத்து அழகுப்படுத்து வது சடங்காகவே உள்ளது. வட இந்திய மக்கள் திருமணப் பெண்ணுக்கு மெஹந்தி வைப்பதை கலகலப்பான விழாவாகவே நடத்துவார்கள். இது திருமணப் பெண்ணின் உடலை குளிர்வித்து ஆரோக்கியத்தோடு இருக்கச் செய்கிறது... அழகாகவும் காட்டுகிறது.  இயற்கையான மருதாணி இலையில் உள்ள சாயங்கள் எந்த பக்கவிளைவுகளும் அற்றவை. இளநரையை மாற்றக்கூடிய தன்மையும் மருதாணிக்கு உண்டு. 

மெஹந்தி கோன்கள், மருதாணி பவுடர், செயற்கை சாயங்கள் சேர்க்கப்பட்ட பிளாக் ஹென்னா... இவையெல்லாம் இப்போது அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கின்றன. பிளாக் ஹென்னா வில் சேர்க்கப்படும் செயற்கை சாயங்கள் சருமத்தின் மென்மைத் தன்மையை கெடுத்து சரும அரிப்பு, வறட்சி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியவை. மருதாணியின் இலைகளை பறித்து, அரைத்து இயற்கையாக பூசும் போது கிடைக்கும் பயன்கள் செயற்கை ஹென்னாவில் இருப்பதில்லை.சூட்டு உடம்புக்காரர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மருதாணி வைத்துக் கொள்ளலாம். இவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைத்திருந்தால் கூட ஒன்றும் செய்யாது. 

சைனஸ், ஆஸ்துமா, குளிர்ச்சி அலர்ஜி உள்ளவர்கள் மாதம் ஒரு முறை மட்டுமே மருதாணி வைக்க வேண்டும். அதுவும் அரை மணி நேரத்தில் மருதாணியை எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இருமல், தும்மல், சளி போன்ற பிரச்னைகள் ஏற்படும். அழகோடு ஆரோக்கியமும் அளிக்கும் மருதாணியின் அருமையை புரிந்து பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமே!

Monday, February 8, 2016

guava க்கான பட முடிவு
பழங்களில் மிகுந்த வாசமும், ருசியும் உள்ள பழம் கொய்யா. இப்பழம் விலை குறைவானது. அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய பழம். கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கலைப் போக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை கொதிக்க காய்ச்சி, அந்த நீரில் கொப்பளிக்கலாம். கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகிறது.


கொய்யா மரத்தின் இளம் கிளைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கஷாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகள் அல்சரை குணமாக்கும். கொய்யாப்பழத்தை கழுவிய பிறகு, பற்களால் கடித்து மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத, வைட்டமின் சி உயிர்ச்சத்து இதில் அதிகம் உள்ளது. அதனால், வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் இப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிடுவது நல்லது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தரும். தோல் வறட்சியை நீக்கும். முதுமை தோற்றத்தை குறைத்து இளமை தரும்.

மது போதைக்கு அடிமையானவர்கள், அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யாவை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை போய் விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடும் முன், இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிடலாம். நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.

இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும். கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து, வாந்தி, மயக்கம் ஏற்படும்.

கேரள அழகு ஆயுர்வேத சிகிச்சை முறை

 கேரள அழகு ஆயுர்வேத சிகிச்சை முறை
செயற்கையான அழகு சாதனங்களை கைவிட்டு விட்டு கேரள முறை ஆயுர்வேத இயற்கை வைத்தியத்தை இன்று பலரும் நாடி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் கூட இப்படியான சிகிச்சை முறைகளை ரகசியமாக எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் இப்படியான அழகு சாதன நிலையங்கள் அதிகரித்து வருகின்றன.

உடல் வனப்பாகவும் முகம் அழகாகவும் இருக்க சில ஆயுர்வேத இயற்கை மருத்துவ முறைகள் பற்றி பார்ப்போம்.

தாரா

ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது.

உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது.

கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல் போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.

நவரக்கிழி

பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்மை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகின்றன.

நஸ்யம்

இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன், பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.

உத்வர்த்தனம்

இது மசாஜ் முறையிலான சிகிச்சை. மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை
1. சருமத்தை சீர்செய்யவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும்.

2. அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

3. வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைக்கவும் பின்பு, அதை அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.