Pages

Showing posts with label கழுத்தில் வரும் சுருக்கத்தை போக்க வழிகள். Show all posts
Showing posts with label கழுத்தில் வரும் சுருக்கத்தை போக்க வழிகள். Show all posts

Sunday, February 14, 2016

கழுத்தில் வரும் சுருக்கத்தை போக்க வழிகள்

கழுத்தில் வரும் சுருக்கத்தை போக்க வழிகள்

பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு மட்டும் கொடுப்பதில்லை. சில பெண்களுக்கு முகம் 20 வயது போல் தோற்றமளித்தால், கழுத்து 35 வயது போல் காட்சியளிக்கும். நிறைய ஆபரணங்களைப் போட்டு கழுத்து கறுத்து போயிருக்கும். 


இல்லாவிட்டால் வியர்வையால் சுருங்கி காட்சியளிக்கும். முகத்தின் பளபளப்புக்காக பிளிச்சிங், பேஷியல் என்று செய்துகொள்பவர்கள் கழுத்தை மட்டும் கண்டுகொள்ளாமலே விட்டுவிடக்கூடாது. கழுத்து பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இப்பகுதி சட்டென்று தளர்ந்து போய்விடும். 



இதனால் தான் முகம் இளவயது போல் தோற்றமளித்தாலும், கழுத்து முதுமையை காட்டுகிறது. கழுத்துக்கென்றே வகைவகையான ஸ்பெஷல் பிளீச்ங் இருக்கிறது. சிலரின் கழுத்து வறண்டு போயிருக்கும். அதற்கு முதலில் தயிரை கழுத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவேண்டும். பின்னர், மிதமான சுடுதண்ணீரால் சற்று அழுத்தித் தேய்த்துக் கழுவினால், கழுத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். வெயில் தொடர்ந்து கழுத்தில் விழுந்தால் கழுத்துப்பகுதி கறுத்துவிடும். 



தலைமுடியில் இருக்கும் எண்ணெய் பசைகூட கழுத்தில்பட்டு கறுத்து விடும். இதற்கு வெள்ளரிச்சாறு சிறந்த நிவாரணம். வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கழுத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போல் காட்சியளிப்பவர்கள் குளிப்பதற்கு முன்னால், எலுமிச்சை சாறில் கஸ்தூரி மஞ்சளை அரைத்துக் குழைத்துக் கழுத்தில் நன்றாக பூசி, பத்து நிமிடம் ஊற விட வேண்டும். 



பின்பு மிதமான சுடுநீரில் கழுத்தைக்கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும். கழுத்து மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் பளபளப்பாக தோன்றும். சில பெண்களுக்கு கழுத்தில் வரிவரியாக காணப்படும். இவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவுடன், இரண்டு சொட்டு கிளிசரின், ஒரு சொட்டு பன்னீர் சேர்த்து கழுத்தில் பூச வேண்டும். 



இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்திலுள்ள வரிகள் மறைந்து, சங்கு கழுத்து போல் காட்சிதரும். சிலர் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் கழுத்து மட்டும் நிறம் கம்மியாகி கருத்துப்போயிருக்கும். கழுத்து நிறைய செயின் போடுவதால் கழுத்தில் முடிச்சு முடிச்சாக காணப்படும். 



அதே போல் கவரிங் செயின் போடும் பெண்களுக்கும் கழுத்து கறுப்பாகிவிடும். இவர்கள் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து தொடர்ந்து கழுத்தில் தேய்த்து வரவேண்டும். முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும். இதனால் கறுத்து போன கழுத்து பளிச்சென்று மாறிவிடும்.