Pages

Sunday, February 14, 2016

என்றும் இளமையாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை

என்றும் இளமையாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை


இன்றைய காலகட்டத்தில் அனைவரும் இளமையோடு இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான முயற்சியை எடுக்காமல் புலம்புகிறார்கள். நம்மை இளமையோடு வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. தினமும் கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் அழகு ராணியாக திகழலாம். 


• வைட்டமின் A, வைட்டமின் C அதிகளவு உள்ள காய்கறிகளை தினமும் அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இவை உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து காக்கிறது. மேலும் கருவளையம், தோல் சுருக்கம் வருவதையும் தடுத்து இளமையோடு வைத்திருக்க உதவுகிறது. 



• முட்டையின் மஞ்சள் கரு மற்றும் முளைகட்டிய பயிறு வகைகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ளுங்கள் இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 



• ஒரு பப்பாளி துண்டை எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் நன்றாக தேய்த்து கழுவுங்கள். இதனால் உங்கள் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும். தினமும் இதை செய்யலாம். 



• வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கலத்து முகம், கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இது சருமத்தை மென்மையாக்கும். • தேன் சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான சரும நோய்களையும் போக்க வல்லது. இதற்கு தேனை முகம், கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்த பின் கழுவி விடவும். இது உங்கள் ஒளிரும் பளபளப்பான சருமத்தை தரும். 



• வெண்ணெய் உடன் பால் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நன்கு காய்ந்த உடன் கழுவி விடவும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும். 



• வெள்ளரிக்காய் விழுதில் சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி சுத்தமாக்குகிறது. 



• தினமும் தூங்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி விட்டு படுக்க செல்லவும். ஏனெனில் சருமத்தில் அதிகளவில் தூசிகள் இருக்கும். இவ்வாறு செய்வதால் உங்கள் சருமம் சுத்தமாகவும், பிரஷ்ஷாகவும் இருக்கும்.

No comments: