Pages

Saturday, February 6, 2016

கருப்பான சருமம் கொண்ட பெண்களுக்கான டிப்ஸ்

கருப்பான சருமம் கொண்ட பெண்களுக்கான டிப்ஸ்

கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் என்னென்ன?


பழ பேஷியல்: முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும்.



நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும்.



கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.



காய்கறி பேஷியல்: முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும்.



இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.



மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.



சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.



பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.



குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும்.



அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும்.



மசாஜுக்கு பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம். வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.

பொடுகு தொல்லைக்கு முடிவு கட்டும் தேங்காய் எண்ணெய்

பொடுகு தொல்லைக்கு முடிவு கட்டும் தேங்காய் எண்ணெய்

இன்றைய இளம் தலைமுறையினரை அதிகம் கவலை அடைய செய்வது பொடுகு தொல்லை. இந்த பிரச்சனை தீர பல வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையில் செய்யப்படும் முறைகளே நிரந்தர தீர்வை தரும். அவை என்னவென்று பார்க்கலாம்...  

* வால் மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். இவ்வாறு வாரம் 3 முறை செய்ய வேண்டும். 


* வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தது வந்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும். 



* தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். 



* வேப்பிலை கொழுந்துடன், துளசியை சமஅளவு சேர்த்து நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். 



* வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும். 



* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும். 



* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை வராது. 



* தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான சூடு நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும். 



* துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும். இதை வாரம் இருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்


கர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் எப்படி ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம் நன்றாக இருந்தால் தான் அக்கட்டிடம் வலிமையாக நீண்ட நாட்கள் இருக்குமோ, அதேபோல் குழந்தைக்கு உருவாகும் உறுப்புக்கள் அடிப்படையிலேயே ஆரோக்கியமாக இருந்தால்தான், குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும். 

அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் தான் குழந்தைக்கு சில முக்கிய உறுப்புக்களும், வடிவமும் கிடைக்கும். ஆகவே இக்காலத்தில் சற்று கவனமாக இருந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், குழந்தையின் இதயத்துடிப்பை நன்கு கேட்கலாம். இதயம் இக்காலத்தில் தான் உருவாகும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். 


இல்லாவிட்டால், குழந்தை இதய பிரச்சனையுடன் பிறக்கக்கூடும். மனித உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த மூளையும் முதல் மூன்று காலத்தில் தான் உருவாகும். மேலும் ஒவ்வொரு மூன்று மாத காலத்திலும் இம்மூளையானது வளர்ச்சியடையும். இருப்பினும், கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 



சில கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாத காலத்தில் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். எனவே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்துகளை தவறாமல் பிரசவம் நடைபெறும்வரை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் மலச்சிக்கல் இருந்தால், அதனாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி சில பெண்கள் முதல் மூன்று காலத்தில் வாந்தி, மயக்கம், கடுமையான சோர்வை உணர்வார்கள். ஆகவே அதற்கேற்ற உணவை தவறாமல் எடுத்து வருவது, சற்று ஆறுதலாக இருக்கும். 



குறிப்பு : முதல் மூன்று மாத காலத்தில் கர்ப்பிணிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களையும், பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இதற்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள்தான் காணரம். அதுமட்டுமின்றி, இக்காலத்தில் மார்பகங்களின் அளவு அதிகரிப்பதோடு, மென்மையாகவும் இருக்கும்.

கோல்டன் பேஷியல் செய்வது எப்படி


 golden facial க்கான பட முடிவு

இம்முறையில் ஃபேஷில் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சரும நிறம் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுக்கள், சுருக்கங்கள் நீக்கப்படம். சரியான பிரஷர் பாயிண்டுகளை ஒரு கைதேர்ந்த அழகு நிபுணரின் உதவியுடன் அழுத்தி மசாஜ் செய்வது அவசியம். இதில் முதலில் நேரோபேக் எனப்படும் ஷாதானியம், முட்டை, பன்னீர் முதலியவற்றின் கலவை முகத்தில் பத்து நிமிடங்களுக்கு தடவப்படுகிறது.

பிறகு அதன் மேல் பால் தெளித்து மெதுவாகத் தேய்த்து வேண்டாத தோல் பகுதிகள் நீக்கப்படுகின்றன. பிறகு தண்ணீரால் முகத்தைத் துடைத்து ‘கோல்ட்’ க்ரீம் மற்றும் பால் சேர்த்து தடவப்படுகிறது. சரியான பிரஷர் பாயிண்டுகளில் லிம்ஃப்பாடிக் மசாஜ் என்ற முறையில் மசாஜ் செய்யப்படும். பிறகு சாதாரண முறையில் நாற்பத்து ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீக்கப்படுகின்றன.

பிறகு ‘கோல்ட்ஜெல்’ தடவி, கால்வானிக் மெஷின் மூலம் பாஸிட்டிவில் (+ve) ஐந்து நிமிடமும் நெகடிவில் (-ve) ஐந்து நிமிடமும் வைத்து மசாஜ் செய்யப்படும். பிறகு முகத்தினை துடைத்து ‘கோல்ட் பாக்’ தடவி கண்களைச் சுற்றி ஷாவீட்(Shaweed) என்ற லோஷனை தடவ வேண்டும். கண்களின் மேல் குளிர்ச்சியான பஞ்சு வைக்க வேண்டும். பிறகு அதை துடைத்துவிட்டு ஷா பேஸ் (Sha ba‡e) என்ற க்ரீம் தடவப்படும். இதுவே கோல்டன் ஃபேஷியல். 

Monday, February 1, 2016

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை


பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன.

இவற்றைச் சரிசெய்ய, மூலிகைகளிலேயே மிக முக்கியமானதாக இருக்கிறது சோற்றுக் கற்றாழை என்ற குமரி. இது உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு என்ற சிறப்புகளைக்கொண்டது. பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும்.

இது இயற்கையின் நியதி. இந்த சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஒருவேளை சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்சனை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். இதற்காக, ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து சமநிலை செய்ய முயற்சி செய்தாலும், பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இதற்கு எல்லாம் விளைவுகள் இல்லாத எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை சாப்பிட்டுவர, இயற்கையாகவே ஹார்மோன்களின் செயல்பாடுகள் சமநிலையாகும். மேலும், மூளை தொடர்பான ஹார்மோன்களும் சிறப்பாகச் செயல்படும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள்.

கற்றாழையில் உள்ள சபோனின் (Saponin) என்ற கசப்புத்தன்மை, செல்கள் அதிகம் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியைக்கூட கட்டுக்குள் வைத்திருக்கும். கர்ப்பப்பையில் கட்டியிருப்பவர்கள், 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்துவர, கட்டிகள் கரைந்திருப்பதை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.

பிரசவ காலத்தில் வயிற்றில் வரும் சுருக்கங்கள்


பிரசவ காலத்தில் வயிற்றில் வரும் சுருக்கங்கள்

பெண்ணை தாயாக்கும் கார்ப்பம் உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு பலவித சங்கடங்களையும் கொடுக்கிறது. ஆனால் இந்த கர்ப்ப காலத்திலும் சங்கடம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் காலமும் உண்டு.

ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை வெளியே சொன்னால் ஒழிய மூன்று மாதங்கள் வரை வயிற்றுப்பகுதியில் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. நான்காவது மாதத்தில்தான் வயிறு பெரிதாவது தெரியும். வயிற்றின் தசைகளும், தோலும் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடைகின்றன. ஒவ்வொரு மாதமும் இது அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

குழந்தை பிறந்த பின், தோல் மறுபடியும் சுருங்கத் தொடங்கும். வயிறு விரிந்து, சுருங்குவதால் குழந்தை பெற்ற பெண்களுக்கு அடி வயிற்றுப்பகுதியில் நரம்புகள் போல் கோடுகள் நிரந்தரமாக விழுவதுண்டு. கொஞ்சம் கவனமாக இருந்தால் இந்த வெள்ளை தழும்புகளை வரவிடாமல் தவிர்க்கலாம். கோகோ பட்டர், ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அடி வயிறு முழுக்க தடவி, அரை மணி நேரத்திற்குப் பின் குளித்தால் வயிற்றில் அதுபோன்ற கோடுகள் விழாது.

அதே போல் சமையலுக்கு பயன்படும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தடவலாம். வயிற்றில் எண்ணெய் தடவும் இந்த முறை வயிறு விரிவடையத்தொடங்கும் நான்காவது மாதத்தில் இருந்தே ஆரம்பித்து விடுவது நல்ல பலனை தரும். வயிறு போன்றே இந்த காலக்கட்டத்தில் சில பெண்களுக்கு மார்பகம் கூட சராசரி அளவை விட பெரிதாகி பின்னர் சிறிதாகும். இதனால் மார்பக பகுதிகளிலும் கூட இந்த வெள்ளைக்கோடுகள் தென்படத் தொடங்கும்.

அதற்கும் இதே வழியைப் பின்பற்றலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண் உடல் ரீதியாக தொல்லை இன்றி சந்தோஷமாக இருக்கும் காலக்கட்டமும் இந்த நான்காவது மாதம்தான். சாப்பிட முடியாமல் தலைச்சுற்றி மயக்கம் வருவதெல்லாம் முதல் 3 மாதங்களோடு சரியாகிவிடும்.

நான்காவது மாதத்தில் இருந்து ஓரளவுக்கு நன்கு சாப்பிட முடியும். ஊட்டமான சாப்பாடு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் பூரிப்பு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறையாத தன்மை ஆக இந்த 3 காரணங்களும் ஒன்றாக சேர நான்காவது மாதத்தில் இருந்து 6-வது மாதம் இறுதி வரை பெண்களின் முகம் பளிச்சென்று பூரிப்போடு பிரகாசிக்கும்.

இளம் பெண்கள் கவனத்துக்கு

இன்றைய காலத்தில் சிறுமிகள் 11-14 வயதில் பருவம் அடைகின்றனர். இது 9-15 வயது வரையிலும் கூட மாறுபடுகின்றது. இதுவே சிறுமி பெண்ணாகும் காலமாக குறிக்கப்படுகின்றது. இக்கால கட்டத்தில் சிறுமியின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பருவம் எய்துவது அப்பெண்ணின் மனநிலை, சூழ்நிலை கொண்டு சற்று சீக்கிரமாகவே நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கான காரணங்கள்:-

* குழந்தையிலிருந்தே குண்டாயிருத்தல்
* அப்பா அருகில் இல்லாமல் வளரும் குழந்தை பருவம்
* குடும்பத்தில் உறவினர்களிடையே மோதல்
* பிறக்கும் பொழுதே மிகக் குறைந்த எடை
* அதிகம் சிகரெட் புகை சூழலில் வளர்ந்தவர்கள்
* தாய் பால் போதுமான காலம் பெறாத குழந்தை
* ஓடி ஆடி விளையாடாத குழந்தை ஆகியவை ஆகும்.

முறையான காலத்தில் பருவம் எய்துபவர்களுக்கு ஆய்வுகள் கூறும் காரணங்கள்:-

* பெரிய குடும்பம்
* குடும்பத்தினரிடையே சுமூகமான உறவுகள்
* வீட்டில் உள்ள மூத்த சகோதரிகள் ஆகியவை ஆகும்.

நம் நாட்டில் பெண் பருவமடைவதை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்று கொண்டாடுவதைப் போல் ஜப்பான் போன்ற வேறு சில நாடுகளிலும் பெண் பருவமடைவதை வீட்டு உறுப்பினர்கள் விழாவாகக் கொண்டாடுகின்றனர்.