Pages

Wednesday, August 6, 2014

செம்பருத்தியின் மருத்துவ குணம்!

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.


உடல் உஷ்ணம் குறைய...

உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.


வெட்டை நோய் குணமாக...

ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.

இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.



இருதயம் பலம் பெற...

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.


பேன் தொல்லை ஒழிய...

சில பெண்களுக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.


குழந்தையின் வளர்ச்சிக்கு...

சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

Thursday, July 31, 2014

சூப் குடிக்கிறவரா நீங்க?

கண்ட இடங்களிலும் சூப் குடிக்கிறவரா நீங்க? 

ஒரு காலத்தில் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே கிடைத்து வந்த சூப், இன்று தெரு உணவாக மாறியிருக்கிறது. டீக்கடைகளுக்கு நிகராக, தெருவுக்கு இரண்டு சூப் கடைகளைப் பார்க்க முடிகிறது. காபி, டீயையும், குளிர்பானங்களையும்விட சூப் குடிப்பது ஆரோக்கியமானது என்கிற எண்ணம் படித்த, படிக்காத எல்லா மக்களிடமும் பரவியிருக்கிறது. காய்கறி சூப், தக்காளி சூப், காளான் சூப், கீரை சூப் என விதம் விதமான பெயர்ப் பலகையுடன் வரவேற்கிற சூப் கடைகளில், ஆவி பறக்க கிடைக்கிற சூப் வகைகளுக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு. சூப் உடன் கூடவே கொறிக்கக் கொடுக்கிற கார்ன்ஃப்ளேக்ஸ் கூடுதலாக கவனம் ஈர்க்கும் விஷயம்.  

சூப் ஆரோக்கியமான உணவு என்பதில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து ஆலோசகர்கள் என யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது எங்கே, எப்படி, எதைக் கொண்டு தயாராகிறது என்பதுதான் கேள்வியே. நட்சத்திர ஓட்டல்களில் விருந்துக்கு முன்னால் பரிமாறப்படுகிற சூப் வகைகள் பசியைத் தூண்டக் கூடியவை. அதை மட்டுமே நினைவில் கொண்டு, சூப் என்றால் பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றுக்கு உபாதை செய்யாதது என்கிற நினைப்பில் கண்ட இடங்களிலும் சூப் குடிக்கிற நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் ஒரு நிமிடம்...

‘‘சாலையோரக் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட் வாசல்களிலும் விற்கப்படுகிற சூப்களில் சுவைக்காகவும் கெட்டியாக்கவும் சேர்க்கப்படுகிற பல பொருட்களும் ஆரோக்கியக் கேட்டை வரவழைப்பவை. சூப் குடிப்பது ஆரோக்கியமானது என்பது மாறி, அனாவசிய நோய்களை நாமே தேடிச் செல்ல வைக்கிறது’’ என்கிறார் குடல் நோய் மருத்துவ நிபுணர் ராஜேந்திரன். அடுத்து அவர் சொல்கிற தகவல்கள் சூப் பிரியர்களை நிச்சயம் அதிர வைக்கும். ‘‘சூப் வகைகளை கெட்டியாக்கப் பயன்படுத்தப்படுகிற ஜவ்வரிசிக் கஞ்சி, சோள மாவு இந்த இரண்டுமே அளவு கூடும் போது, குடலை பாதிக்கலாம். சுவைக்காக சேர்க்கப்படுகிற மோனோசோடியம் குளூட்டமேட் (எம்.எஸ்.ஜி) வயிற்று உபாதை, தலைவலி, வாய் எரிச்சல், அலர்ஜி போன்ற பல பிரச்னைகளை உருவாக்கலாம்.

இவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில் ஆபத்தானது அதில் சேர்க்கப்படுகிற கொழுப்பு பவுடர். விலங்குகளிடமிருந்து பெறப்படுகிற கொழுப்பானது பதப்படுத்தப்பட்டு, பவுடராக்கப்பட்டு, பலவித பேக்கரி தயாரிப்புகளுக்கும், சூப் தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த கொழுப்பு பவுடரானது சூப்புக்கு கெட்டித் தன்மையைக் கொடுப்பதுடன், சுவையையும் மேம்படுத்தும். சுவைக்கு அடிமையாகி, மீண்டும் மீண்டும் சூப் குடிக்கிறவர்களுக்கு, அந்தக் கொழுப்பானது கொஞ்ச நாட்களிலேயே தன் வேலையைக் காட்டத் தொடங்கும். கொழுப்பு கூடுவதால் உண்டாகிற பிரச்னைகளைப் பற்றி இங்கே புதிதாகப் பேசத் தேவையிருக்காது.

இந்த கொழுப்பு பவுடரும் குடலைத் தாக்கக் கூடியது. இத்தனை கேடுகளை உள்ளடக்கிய சூப்பை அடிக்கடி குடிப்பவர்களுக்கு ‘ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ எனப்படுகிற நெஞ்செரிச்சல், காஸ்ட்ரோ என்ட்ரைடிஸ் எனப்படுகிற சிறுகுடல் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம். சூப் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிற தண்ணீர், காய்கறிகளின் தரம் என எல்லாமே கேள்விக்குரியவை என்பதால் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாராகிற சூப்பை குடிப்பவர்களுக்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அளவுக்குத் தீவிரமான குடல் பாதிப்புகூட உண்டாகலாம்’’ என எச்சரிக்கிறார் டாக்டர் ராஜேந்திரன்.

இன்ஸ்டன்ட் சூப்பில் எக்கச்சக்க உப்பு!

இன்ஸ்டன்ட் சூப் பவுடர் வகைகளும் விதிவிலக்கல்ல. சுவையூட்டவும், நிறம் சேர்க்கவும், கெட்டியாக்கவும் பயன்படுத்தப்படுகிற பலவித கெமிக்கல்களை தாண்டி, அவற்றில் சேர்க்கப்படுகிற அளவுக்கதிக உப்பே ஆபத்துக்கு அடிப்படையாகிறது என்கின்றன மருத்துவத் தகவல்கள். ஒருநாளைக்கு ஒருவருக்குத் தேவைப்படுகிற சராசரி உப்பின் அளவைவிட, இந்த இன்ஸ்டன்ட் சூப் பவுடர்களில் 5 மடங்கு அதிக உப்பு சேர்க்கப்படுகிறது. உடல் பருமன், ரத்த அழுத்தம், வயிற்றுப் புற்றுநோய், ஆஸ்டியோபொரோசிஸ், சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு என பலவித பயங்கரங்களுக்கு அஸ்திவாரம் அமைக்கும் அளவுக்கு ஆபத்தானது இந்த அதிகப்படியான உப்பு. 


ஸ்ட்ராபெர்ரி பழம் தினமும் உண்டால் பலன்கள் ஏராளம்

ஸ்ட்ராபெர்ரி பழம் தினமும் உண்டால் பலன்கள் ஏராளம் 


தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது என, கூறுவதை கேட்டிருப்போம். ஏனென்றால் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம், ஆப்பிளையே மிஞ்சும் என அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  தெரியவந்த தகவல்தான் இது. வெறும் தகவல் மட்டுமல்ல, உறுதி செய்யப்பட்ட விஷயமும்கூட. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற  பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

கோடை காலத்தில் வெயிலை விட பழங்களின் விலை கடுமையாக உயர ஆரம்பிக்கும். ஏனெனில், தோல் வறட்சியை போக்கவும், இழந்த நீர்ச்சத்தை  ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்த பழங்களே நமக்கு பெரிதும்  உதவுகின்றன. பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது.
 
அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை தேடி எடுத்து கொள்ளும் விழிப்புணர்வு இல்லாததால்தான், பலரும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். நாம் சிறப்பான சத்துக்கள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட்கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் காத்துக்கொள்ளலாம்.நமக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கருதப்படும் இந்த பழங்கள், தற்போது இந்தியாவில் சிறு நகரங்களில் கூட கிடைப்பதாக உள்ளது. 

இதில் நிறைந்துள்ள சத்துகள் போன்றே விலையும் சற்று அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. கோடைக்காலத்தில் பெருமளவு இவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மருத்துவ குணத்திற்காக பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. சுகந்த மணத்தையும், கருஞ்சிவப்பு நிறத்துடன் கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. இந்த பழங்களில், வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன்  வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல்  அழிவை தடுக்கும் தன்மை இப்பழத்தில் உள்ளது. இந்த தன்மை நிறைந்த பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.

வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை பருகி பல் எனாமல் தேய்ந்து, பற்களில் கறை ஏற்படும். இதை தவிர்க்க ஸ்ட்ராபெர்ரி  பழச்சாறை குடித்தால் போதும். இதில், 5 பழங்களில் 250 மி.லி., அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும்  நமக்கு கிடைக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருள் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு ஊட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.ஸ்ட்ராபெர்ரி பழம் உண்ணும் பழமாக மட்டுமல்ல, அழகை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

செயற்கை கிரீம்களை பயன்படுத்தி சருமத்துக்கும், தோலுக்கும் தீங்கும் விளைவிக்கும் அவற்றை பயன்படுத்துவதை விட, இயற்கையாக கிடைக்கும் இதுபோன்ற பழங்களை பயன்படுத்தினாலே போதும். ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்தை இலேசாக வெளுக்க செய்யும் தன்மை கொண்டது. முகத்தில் உள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச்செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பில் இருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தை பாதுகாக்கும் இப்பழத்தை கொண்டு மசாஜ் செய்தால் முகத்தில் நல்ல மாற்றம் காணலாம்.

இன்று ஆண், பெண் அனைவருக்கும் பெரிய குறையாக இருப்பது உடலின் நிறம்தான். இதற்கும் ஸ்ட்ராபெர்ரியில் தீர்வு உண்டு. சருமத்துக்கு  இளமையை கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் அழகைப் பெறலாம். அதிலும், பழ  வகைகளில் அதிக அளவு முகத்தை பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி. சிவப்பு நிறத்தில் ஜொலிக்க  விரும்புபவர்கள், நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை ஒரு துணியில் கட்டி, பிழிந்து சாறு எடுக்க வேண்டும். 

இந்த சாற்றை, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்துக்கு 3 முறை இதுபோன்று செய்தால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தை கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதா கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். அதேபோல், 3 ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன், 7 ஸ்பூன் பாலை கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில்  குளிப்பதற்கு முன்பு முகத்தில் மாஸ்க் போல போடவும்.

நன்றாக காய்ந்ததும், முகத்தை கழுவவும். இதன் பிறகு எந்த கிரீமும் பூச வேண்டிய  அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும். ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி ஜூசுடன் அதே அளவு கேரட் ஜூஸ் கலந்து முகத்தில் நன்றாக பூசி, துணியால் துடைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.  சரும அழுக்கை நீக்கி, முகத்தில் துளியும் அழுக்கு சேராமல் பாதுகாக்கும். வீட்டிலேயே செய்யும் மிக எளிதான, பலன் தரக்கூடிய கிளன்சிங் முறை.  

தொப்பையை விரட்டுவோம்

தொப்பையை விரட்டுவோம்


உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பது ஆண்களுக்கு கம்பீரத்தையும், பெண்களுக்கு அழகையும் தரும். உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பதில்  அக்கறை கொள்ளவேண்டும். எடை அதிகரித்தால் மூட்டுவலி, இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களும் கூடவே வந்து விடும்

இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. உடல் மெலிந்து இருப்பவர்கள் உணவில் எள்ளை அதிகம்  சேர்த்துக்கொண்டால் எடை கூடும். அதுபோல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளு பயன்படுத்துவது நல்லது. கொள்ளு பருப்பை  ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்டநீர் வெளியேறும். ஊளைச்சதையை குறைக்கும் குணம் கொள்ளுக்கு உண்டு.கொள்ளு பருப்பை வேக வைத்து உண்ணலாம். வறுத்தும் சாப்பிடலாம்.

 குடித்தால் ஜலதோஷம் கட்டுப்படும். அரிசியும் கொள்ளுபருப்பும் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். கொள்ளை  ஆட்டி பால் எடுத்து சூப் வைத்தால் சுவையாக இருக்கும். பொடி செய்து ரசம் வைக்கும் போதும் பயன்படுத்தலாம்சோம்பை அவித்து தண்ணீர்  குடித்தால் எடை குறையும். கேரட்டை துருவி தேன் விட்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.கடுக்காய், தான்றிக்காய்,  நெல்லிக்காய் பொடியை தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் போட்டு தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

தினமும் 5 கப் காய்கறி அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும். கீரை வகைகள் அல்லது கொடியில் காய்க்கும் பீன்ஸ், அவரை, பூசணி, புடலங்காய்  போன்றவற்றை அதிகம் சேர்க்கவும். ஆனால் மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை கூட்டும். பப்பாளி, முள்ளங்கி உடல் எடையை  குறைக்கும். வாழைத்தண்டு, அருகம்பூல் சாறு நல்ல பலன்தரும். தினமும் காலை இஞ்சி சாறுடன், தேன்கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால்  தொப்பை குறையும்.

Saturday, July 26, 2014

அறுசுவை உணவே ஆரோக்கியம்

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு, காரம் உள்ளிட்ட ஆறு சுவைகளை கொண்ட உணவே ஆரோக்கியத்துக்கு ஏற்றது. உடலை இயக்குகிற தாதுக்களுடன் சேர்த்து ஆறு சுவிகளும் ஒன்று கூடி உடலை வளர்க்கின்றன. 

உடல் ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை உள்ளிட்ட ஏழு தாதுக்களால் ஆனது. ஏழாவது தாதுவான மூளை இயங்க வேண்டுமானால் பிற தாதுக்கள் ஆறும் உணவில் இருக்க வேண்டும்.

துவர்ப்பு உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றது. ரத்தப் போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். 

மாவடு, மாதுளை, அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவை.

இனிப்பு உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரக்கூடியது. அதிகமானால் உடல் எடை கூடும்; தளர்வடையும். பழங்கள், உருளைக்கிழங்கு, காரட், அரிசி, கோதுமை போன்றவைகளில் இனிப்பு உள்ளது.

உணவின் சுவையை அதிகரிக்கக் செய்யும் ஆற்றல் புளிப்பு சுவைக்கு உண்டு. பசியைத் தூண்டும், நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அதிகமானால் பற்களை பாதிக்கும்.

காரம் பசியைத் தூண்டும், உடல் இளைக்கும், உடலில் சேர்ந்துள்ள நீர் பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். 

காரத் தன்மை கொண்ட வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். உடல் எரிச்சல், அரிப்பைத் தடுக்கும். பாகற்காய்,சுண்டைக்காய், கத்தரி, வெந்தயம் ஆகியன கசப்பு தன்மையுடையது. 

உவர்ப்பு அனைவரும் விரும்புகின்ற சுவை. உடலில் உமிழ்நீரை சுரக்கச் செய்து, மற்ற சுவைகளை சமன் செய்யும் தன்மை கொண்டது. கீரைத் தண்டு, வாளைத் தண்டு, முள்ளங்கி, பூசணி உள்ளிட்டவை உவர்ப்பு தன்மை உடையது.

முந்திரி பழம் சாப்பிட்டால் நல்லது


முந்திரி பழம் சாப்பிட்டால் நல்லது.

முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு, முந்திரி பழத்தை சாப்பிடுவது குறைவு. ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனு பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும் பொது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.

இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேக வைத்தோ, உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரி பழம்.

முக்கியமாக விட்டமின் 'சி' ஆரஞ்சு பழத்தை விட, முந்திரி பழத்தில் ஐந்து மடங்கு அதிகம் உள்ளது. விட்டமின் 'சி' மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. 

ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு நோயை குணமாக்குகிறது. பற்கள், நகங்களை உருதிப்பதுகின்றது. ஸ்கர்வி என்ற விட்டமின் 'சி' குறைபாடு நோயை குணமாக்குகின்றது.

Thursday, July 24, 2014

குழந்தைக்கு மலச்சிக்கலா?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனை  ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன்உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால் தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

தினமும் இரவில் விளக்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தயின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.

நாட்டுமருந்து கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும் போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துகொள்ளவும். குழந்தையை குளிப்பட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில  குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வட்டிக்கட்டி ஊற்றினால் வாந்தி சற்றென்று நின்று விடும். குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.

குழந்தை தினமும் இரண்டு மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்ல உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு ககிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம்.