Pages

Showing posts with label ரத்தத்தைத் தூய்மையாக்க. Show all posts
Showing posts with label ரத்தத்தைத் தூய்மையாக்க. Show all posts

Saturday, July 26, 2014

அறுசுவை உணவே ஆரோக்கியம்

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு, காரம் உள்ளிட்ட ஆறு சுவைகளை கொண்ட உணவே ஆரோக்கியத்துக்கு ஏற்றது. உடலை இயக்குகிற தாதுக்களுடன் சேர்த்து ஆறு சுவிகளும் ஒன்று கூடி உடலை வளர்க்கின்றன. 

உடல் ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை உள்ளிட்ட ஏழு தாதுக்களால் ஆனது. ஏழாவது தாதுவான மூளை இயங்க வேண்டுமானால் பிற தாதுக்கள் ஆறும் உணவில் இருக்க வேண்டும்.

துவர்ப்பு உடல் நலத்துக்கு மிகவும் ஏற்றது. ரத்தப் போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். 

மாவடு, மாதுளை, அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவை.

இனிப்பு உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரக்கூடியது. அதிகமானால் உடல் எடை கூடும்; தளர்வடையும். பழங்கள், உருளைக்கிழங்கு, காரட், அரிசி, கோதுமை போன்றவைகளில் இனிப்பு உள்ளது.

உணவின் சுவையை அதிகரிக்கக் செய்யும் ஆற்றல் புளிப்பு சுவைக்கு உண்டு. பசியைத் தூண்டும், நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அதிகமானால் பற்களை பாதிக்கும்.

காரம் பசியைத் தூண்டும், உடல் இளைக்கும், உடலில் சேர்ந்துள்ள நீர் பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். 

காரத் தன்மை கொண்ட வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவை உடலுக்கு நன்மை தரக்கூடியது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். உடல் எரிச்சல், அரிப்பைத் தடுக்கும். பாகற்காய்,சுண்டைக்காய், கத்தரி, வெந்தயம் ஆகியன கசப்பு தன்மையுடையது. 

உவர்ப்பு அனைவரும் விரும்புகின்ற சுவை. உடலில் உமிழ்நீரை சுரக்கச் செய்து, மற்ற சுவைகளை சமன் செய்யும் தன்மை கொண்டது. கீரைத் தண்டு, வாளைத் தண்டு, முள்ளங்கி, பூசணி உள்ளிட்டவை உவர்ப்பு தன்மை உடையது.