Pages

Thursday, April 24, 2014

சுகப்பிரசவத்திற்கு துளசி சாப்பிடுங்க

துளசி
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது.

கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும்.

பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகளை உணவில் அதிகரிக்க வேண்டும். கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

மணத்தக்காளி மருத்து குணங்கள்

மணத்தக்காளி
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன.

நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து.

மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும்.

அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும். நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது.

இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும். 

கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும்.

இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.

உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.

Tuesday, April 22, 2014

ரத்த அழுத்தத்தை குறைக்கும் பீட்ரூட்

பீட்ரூட்... வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளுள் மிக முக்கியமான பீட்ரூட்டின் மகிமையை பற்றி நம் அம்மாக்களும், பாட்டிகளும் வாய் ஓயாமல் பேசுவதை நாம் கேட்டிருப்போம். வேரிலிருந்து கிடைக்கும் இந்த கருஞ்சிவப்பு வண்ண காயானது, பெரும்பாலான இந்திய வீடுகளில் ரத்தசோகைக்கு உகந்த, பிரசித்தி பெற்ற மாற்று மருந்தாகத் திகழ்கிறது.
பீட்ரூட்
ரோமானியர்கள் தங்கள் இல்லற நலத்தை பேண இதனை நம்பி இருப்பது தொடங்கி, இந்தியர்கள் இதனை ரத்த சோகை மற்றும் உடல் அயர்ச்சி போன்ற உடல் நலக்கோளாறுகளுக்கு உபயோகிப்பது வரையிலான பல்வேறு நலன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது

பீட்ரூட். பீட்ரூட்டை உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியதற்கான காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் :

நைட்ரேட்டுகளின் தலை சிறந்த மூலாதாரமாக விளங்கும் பீட்ரூட், வயிற்றுக்குள் சென்ற பின் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு என்றழைக்கப்படும் வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்விரண்டு கூறுகளும் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, ரத்த அழுத்தத்தை குறைக்க வும் உதவுகின்றன. தினமும் 500 கிராம் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவரின் ரத்த அழுத்தத்தை சுமார் 6 மணி நேரத்திலேயே குறைத்து விடலாம்.

கெட்ட கொழுப்பைக் குறைக்கும்  :

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் ஆகியவற்றை அபரிமிதமான அளவுகளில் கொண்டிருப்பதாக அறியப்படுவதாகும். பீட்டாஸையனின் என்ற கூறு,

இது எல்டிஎல் கொழுப்பின் ஆக்ஸிடேஷனுக்கு உதவுவ தோடு, ரத்த நாளங்களின் சுவர்களில் அது படியாமல் தடுக்கவும் செய்கிறது. இதனால் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகச் சிறந்தது  :

பீட்ரூட்டின் மற்றொரு வியத்தகு அம்சம், ஃபோலிக் ஆசிட்டின் அமோக விநியோகம் ஆகும். ஃபோலிக் ஆசிட், கருவிலிருக்கும் குழந்தையின் தண்டுவடம் ஒழுங்காக உருவாவதற்கு உதவுவதோடு, ஸ்பைனா பிஃபிடா (பிறவியிலேயே குழந்தையின் தண்டுவடம் முழுமையாக உருவாகாமல், பெரும்பாலும் அடிப்பகுதியில் இரண்டாக பிளவுபட்டது போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு நிலை) போன்ற குறைபாடுகளில் இருந்து அக் குழந்தையைப் பாதுகாக்க வல்லது.

அதனால் ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணி தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியம். மேலும் பீட்ரூட், தாயாகப் போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்கவல்லதாகும்.

எலும்புருக்கி நோயை எதிர்க்கும்  :

பீட்ரூட்டில் நிரம்பியுள்ள சிலிகா, உடல் தனக்குத் தேவையான கால்சியம் சத்தை சிறப்பாக உபயோகித்துக் கொள்ள உதவும் மிக அவசியமான ஒரு தாதுப்பொருளாகும். பொதுவாக எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. எனவே, தினந்தோறும் ஒரு டம்ளர் பீட்ரூட் சாற்றை பருகி வந்தால், எலும்புருக்கி மற்றும் எலும்புச் சிதைவு நோய்களை அண்ட விடாமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும்  :

சர்க்கரை நோயாளிகள் அனைவரும், தங்களின் இனிப்பு சாப்பிடும் வேட்கையை, சிறிது பீட்ரூட்டை உட்கொள்வதன் மூலம் தணித்துக் கொள்ளலாம். இது கொழுப்புச்சத்து அற்றதாக, குறைவான மாவுச்சத்துடன் கூடியதாக, நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக் ஸைக் கொண்டதாக இருப்பினும், இதில் சர்க்கரை சத்து இருப்பதனால், மருத்துவர்கள் இதனை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறார்கள்.

நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸ் என்றால், அது சர்க்கரைச் சத்தை மிக மெதுவாகவே ரத்தத்திற்குள் விடுவிக்கும் என்று அர்த்தம். பீட்ரூட்டின் இந்த அம்சமானது, ஒருவரின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைவாக வைத்திருக்க உதவுகிறது.

ரத்தசோகையை குணமாக்கும்  :

பீட்ரூட் கருஞ்சிவப்பு நிற த்தில் இருப்பதால், அது இழந்த ரத்தத்தை மீட்க உதவும்; அதனால் இது ரத்தசோகைக்கு மிகவும் நல்லது என்றொரு மூட நம்பிக்கை உலவி வருகிறது. இந்த மூட நம்பிக்கையில் ஒரு பாதி உண்மையே உள்ளது.

பீட்ரூட்டில் அபரிமிதமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவக்கூடியதான ஹீமோக்ளூட்டினின் என்ற திரவத்தின் உருவாக்கத்துக்கு உதவக்கூடியதாகும். ரத்த சோகையை குணமாக்க உதவுவது பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து தானேயொழிய அதன் நிறமல்ல.

உடல் சோர்விலிருந்து நிவாரணம் பெற உதவும்  :

பீட்ரூட் ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவக்கூடியது. அதன் நைட்ரேட் உட்பொருள், ஒருவரின் ரத்த நாளங்களை விரிவாக்கி, பிராணவாயு உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சீரான முறையில் சென்றடைய உதவி புரிந்து, அவரது ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது. பீட்ரூட்டில் இரும்புச்சத்து செறிந்திருப்பதால், அது ஒருவரின் சகிக்கும் தன்மையை மேம்படுத்துகிறது.

பாலியல் நலம் மற்றும் சகிக்கும் தன்மையை மேம்படுத்தும்  :

"இயற்கையான வயாக்ரா'' என்றும் அழைக்கப்படும் பீட்ரூட், பாலியல் நலனை மேம்படுத்தும் நோக்கிலான பழங்கால சம்பிரதாயங்கள் பலவற்றில் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. பீட்ரூட் நைட்ரேட்களின் செறிவான மூலாதாரமாக விளங்குவதால், இது நைட்ரிக் ஆக்ஸைடை உடலுக்குள் செலுத்தி, ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இதே செயல்பாட்டைத் தான் வயாக்ரா போன்ற மருந்துகள் நகலெடுத்துள்ளன. மனித உடலில் பாலியலைத் தூண்டும் ஹார்மோனின் சுரப்புக்கு மிக முக்கியமானதான போரான் என்ற வேதியியல் கூறு, பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளது என்பது மற்றொரு அறிவியல் உண்மையாகும். எனவே அடுத்த முறை, நீல நிற மாத்திரைகளை தூக்கி எறிந்து விட்டு, அதற்கு பதிலாக கொஞ்சம் பீட்ரூட் சாற்றைப் பருகுங்கள்.

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்  :

பீட்ரூட்டின் பீட்டாஸையனின் உட்பொருள் மற்றொரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் உள்ள ஹேவார்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் புற்று செல்லின் வளர்ச்சியை, பீட்டாஸையனின் சுமார் 12.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது புற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றின் சிகிச்சைக்கும் உதவுவதோடல்லாமல், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தோர் புற்றுநோயினால் மீண்டும் பாதிப்படையாத வண்ணம் நீண்ட நாட்கள் நலமோடு வாழ்வதற்கும் உதவி செய்கிறது.

மலச்சிக்கலை எதிர்க்கும்  :

பீட்ரூட், எளிதில் கரையும் தன்மையாலான நார்ச்சத்துடன் கூடிய உட்பொருளைக் கொண்டிருப்பதனால், இது மிகச்சிறந்த மலமிளக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. அதிலும் இது பெருங்குடலை சுத்தமாக்கி, வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி, மலங்கழிப்பை சீராக்கும்.

நைட்ரேட் உட்பொருள் அதிக அளவில் இருக்கக் கூடிய பீட்ரூட் சாற்றை பருகுபவரின் சகிக்கும் தன்மையானது சுமார் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் உடல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிராணவாயுவை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக அறியப்படும் பீட்ரூட், மூளையின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, மறதி நோயையும் குணமாக்கக் கூடியதாகும்.

நைட்ரேட், நைட்ரைட்டாக மாற்றப்படும் போது, அது நரம்புகளில் ஏற்படக்கூடிய அலைகளைத் தூண்டி, அவற்றை சீரான முறையில் பரப்புவதன் மூலம் மூளையை மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும்.
பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.

Sunday, April 20, 2014

அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

கையில் வேர்ப்பகுதி மட்டும் மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தயவர்களுக்குத்தான் தெரியும். அதை நீங்களும் அறிந்துகொள்ளலாமே...

* அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருள், உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்ப்பதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

* ஊட்டச்சத்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

* அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து இலேசாக வறுத்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

* அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்துக் கொண்டு, 20 கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மி.லி.யாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்திவிடலாம்.

* அதிமதுரச் சூரணத்தை தயாரித்து வைத்துக்கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மைப் பலவீனம் நீங்கும். உடல் பலமும் ஆரோக்கியமும் கூடும்.

* பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.

* அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு, இரவு படுக்கும்போது சிறிது பாலில் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் இருக்காது.

* சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள்உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

* அதிமதுரச் சூரணம், தூய சந்தனச் சூரணம் இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து பாலில் கலந்து, மூன்று வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் ரத்தம் வருவது நிற்கும். உடல் உள்உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்

நா‌ர்‌த்த‌ங்கா‌ய்
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும்.   கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நார்த்தங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

நார்த்தங்காயின் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.

எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம். நார்த்தங்காய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌சியி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம்.

கர்ப்பகால தோல் நோய்கள்!

கர்ப்பம்
கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதால் கர்ப்பிணிகளின் தோலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் முகத்தில் கருமை படர்வதோடு சில சமயம் பருக்களும் ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தில் இவற்றைப் போக்க ஏதாவது உபயோகித்தால் அதிக அளவில் சிக்கல் ஏற்பட்டு விடும் என்று அஞ்சி விட்டுவிடுவார்கள்.

பிரசவத்திற்குப் பின்னர் இதன் மீது கவனம் செலுத்தினால் கண்டிப்பாக தோல் நோய்களில் இருந்து உடலை பழைய நிலைக்கு மீட்கலாம். கருமை போக்கும் ஆலிவ் எண்ணெய் கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். மேலும், கழுத்துப் பகுதியும் கருமையாக மாறிவிடும்.

உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளிபடும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது. குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும். இருப்பினும் சிலருக்கு கருமை நிறம் தங்கிவிடும். இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும் பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதைதேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்.

ஆலிவ் எண்ணெய் முகத்தின் கருமையை போக்கி பளபளப்பாக்கும். இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பஞ்சை எண்ணெயில் தொட்டு முகம் முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் 25 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

தினசரி இதனை செய்து வர முகத்தின் கருமை முற்றிலும் மாறி முகம் பொலிவடையும். பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படும் தழும்புகளைப் போக்க சில எண்ணெய்கள் உள்ளன. ஜோஜோபா எண்ணெயை தடவி மசாஜ் செய்தால் வரிகள் மறையும். வரிகள் அழுத்தமாக இருந்தால் ஒரு மாதங்களுக்கு தொடர்ந்து ஜோஜோபா எண்ணெயை பூசி 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

இதனால் படிப்படியாக தழும்புகள் மறையும். ஆவகேடோ எண்ணெய் அவகேடோ எண்ணெய் கருமையை போக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது. கர்ப்பகால தழும்புகளை போக்கவும் இது சிறந்த எண்ணெய். ஆவகேடோ எண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனை சருமத்தில் கருமை உள்ள இடங்களிலும், வரி உள்ள இடங்களிலும் அப்ளை செய்யவும்.

மிருதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒரு மாதம் தொடர்ந்து இதுபோல் செய்து வரலாம். பிரசவ கால தழும்புகள் மறையும்.

Saturday, April 12, 2014

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்

ஸ்ட்ராபெரி
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறுவது உண்டு. ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.ஆனால் இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ட்ராபெரி பழத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.

இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

இதை சாப்பிட்டால் கேன்சர் வருவதைத் தடுக்கலாம். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.