Pages

Sunday, April 20, 2014

அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்

கையில் வேர்ப்பகுதி மட்டும் மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தயவர்களுக்குத்தான் தெரியும். அதை நீங்களும் அறிந்துகொள்ளலாமே...

* அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருள், உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தீர்ப்பதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

* ஊட்டச்சத்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

* அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து இலேசாக வறுத்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

* அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்துக் கொண்டு, 20 கிராம் பொடியை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மி.லி.யாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்திவிடலாம்.

* அதிமதுரச் சூரணத்தை தயாரித்து வைத்துக்கொண்டு 1 அல்லது 2 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மைப் பலவீனம் நீங்கும். உடல் பலமும் ஆரோக்கியமும் கூடும்.

* பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.

* அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு, இரவு படுக்கும்போது சிறிது பாலில் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் இருக்காது.

* சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள்உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

* அதிமதுரச் சூரணம், தூய சந்தனச் சூரணம் இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து பாலில் கலந்து, மூன்று வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் ரத்தம் வருவது நிற்கும். உடல் உள்உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

No comments: