Pages

Friday, April 11, 2014

தாய்மையின் சிக்கல்கள்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது.

வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் இந்தக் கருத்தை வலுவூட்ட. ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை.

வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.
தாய்மை


உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.

வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.

அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம்

உலகெங்கும் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருவதாகவும், சரியான பழக்கவழக்கங்கள் மூலம் மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 1.40 கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், ஆனால் இந்த எண்ணிக்கை 2035-ம் ஆண்டுவாக்கில் 2.40 கோடியாக உயரும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது. மனிதகுலத்தைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்


புகை பிடித்தல், கிருமித்தொற்று, மது அருந்துதல், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாதிருத்தல், சூரிய ஒளி மற்றும் மருத்துவ ஸ்கேன்களால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பு, காற்று மாசு, மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள், தாய்மைப் பேறு தாமதமாவது, தாய்ப்பால் தராமலிருப்பது ஆகியவை தடுக்கப்படக் கூடிய புற்றுநோய்க் காரணிகள் என்று 2014-ம் ஆண்டுக்கான புற்றுநோய் அறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறும் அந்நிறுவனம், ஆனால் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில்,

பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கிறது. அரசாங்கங்களும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் புற்று நோய்க்கு பெருமளவில் தடை போட்டு விட முடியும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

Thursday, April 10, 2014

கர்ப்பிணிகள் தினமும் 2 கப் சூப் குடிங்க

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும். பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.

காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம்.

முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும். பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும். பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம்.
கர்ப்பிணிகள்

ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும். முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை. சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும்.

(சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்) உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம். ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும்.

இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும். வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

Tuesday, April 8, 2014

கருப்பைக் கட்டி வராமல் தடுக்கும் டயட்

பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் சத்தான உணவுகள் மற்றும் பழங்கள், காய்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் வரும் மாதவிடாய் பிரச்சனைகளை சிறிய மருத்துவ சிகிச்சை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சரி செய்து விட முடியும். 45 வயதுக்கு மேல் தான் கருப்பையில் கட்டி பிரச்சனை வருகிறது.

அதிகமான உதிரப்போக்கு, அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அடிவயிற்றில் வீக்கம் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கட்டி ஏற்படுகிறது. பரம்பரைக் காரணம் மற்றும் 10 வயதுக்குள்ளாகவே பூப்படையும் பெண்களையும் இது போன்ற பிரச்சனைகள் தாக்க வாய்ப்புள்ளது.
கருப்பைக் கட்டி


மதுப்பழக்கம், நோய்த் தொற்று அடிக்கடி ஏற்படுபவர்களுக்கும் கருப்பைக் கட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு உடலில் அதிகமாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனால் கருப்பையில் கட்டி உருவாகலாம். கருப்பைக் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்க்கவும்.

இறைச்சி வகைகளும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகள், காபியை தவிர்க்கவும். தண்ணீர் அதிகமாகக் குடிக்கவும். பழங்கள், காய்கறிகள் உணவில் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். பழங்களில் ஆப்பிள், கருப்பு திராட்சை, சாத்துக்குடி சேர்த்துக் கொள்ளவும்.

வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள், முளை கட்டிய முழு தானியங்கள், கிட்னி பீன்ஸ் பருப்பு, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்கவும். இவை ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக சுரப்பதை கட்டுப்படுத்தும். 

அகத்திக்கீரையின் அருமை

அகத்திக்கீரை
தாவரங்களில் கீரை வகைகள் மிகவும் சத்து மிக்கவை என்பது நாம் அறிந்ததே. அதிலும் அகத்திக்கீரை அதிக சத்துக்களையும், வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. சுவையான இக்கீரை, நம் நாடெங்கும், குறிப்பாகத் தமிழகத்தில் பயிரிடப்படுகிறது.

வெற்றிலைக் கொடிக்காலில் பற்றுத் தாவரமாகவும் இக்கீரையைப் பயிரிடுகிறார்கள். மலேசியாவில் பிறந்தது அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகை செடியாகும். அகத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் கொண்டது.

இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி என்றும், சிவப்புப் பூக்களைக் கொண்டது செவ்வகத்தி என்றும் அழைக்கப்படுகின்றன.

அடங்கியுள்ள சத்துக்கள்
ஈரப்பதம்-73 சதவீதம், புரதச்சத்து-83 சதவீதம், தாது உப்புகள்-3.1 சதவீதம், நார்ச் சத்து-2.2 சதவீதம், மாவுச்சத்து-12 சதவீதம், கொழுப்புச் சத்து-1.4 சதவீதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.

தாது உப்புகளில் சுண்ணாம்புச் சத்து,பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. வைட்டமின் ஏ, தயாமின், நிபோ பிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின்-சி போன்றவையும் அடங்கியுள்ளன. மேலும் அகத்தி மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

குணம்
அகத்திக்கீரை பொதுவாக நஞ்சை நீக்கும் குணமுள்ளதால், மருந்துண்μம் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

பயன்படுத்தும் விதம்
அகத்திக் கீரையை வதக்கி உண்ணலாம். குழம்பில் இட்டும் சாப்பிடலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம். பூக்களை கசாயமாக்கியும் அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.

அகத்தியின் மருத்துவப் பயன்கள்
அகத்திப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். இலைச்சாறை மூக்கில் உறிஞ்சினால் தலைநீர் இறங்கும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறோடு அதே அளவு தேன் கலந்து அருந்தினால் வயிற்று வலி நீங்கும். இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவந்தால் புண்கள் ஆறும்.

அகத்திக்கீரைப் பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவந்தால் நாள்பட்ட வயிற்று வலி மாறும். அகத்திக்கீரை பால் சுரப்பைக் கூட்டும். இக்கீரையை உணவில் சேர்த்துவந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்திப் பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசினால், தலைவலி மாறும்.

அகத்திப் பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, அதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், சளி தீரும். அகத்திக்கீரை பித்தநோயை நீக்கக்கூடியது என்பதோடு, உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.

Sunday, April 6, 2014

குழந்தை பிறந்த பின் அவசியமாகும் உடற்பயிற்சி - 200 Post

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும், வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது முதல் கடமை ஆகும். அதேபோல குழந்தை பிறந்த பின்னர் அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவதற்கும், தன்னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது மிக மிக முக்கியம்.

இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போதாது. மருத்துவருடைய ஆலோசனையின்படி உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். ஒரு தாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அவள் குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
உடற்பயிற்சி


அதிலும் குறிப்பாக பிரசவமான பெண்கள் உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல், வெளி ஆரோக்கியத்தையும் அதாவது உடற்பயிற்சி மூலம் உடல் அமைப்பையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தாம்பத்தியமும் தடுமாறாமல் செல்லும்.

என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்?

* சுகப்பிரசவம் எனில், சில வாரங்களிலேயே வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகள் சுருங்கப் பயிற்சிகள் செய்ய வேண்டும். தற்பொழுது அந்தப் பயிற்சிகளைச் செய்தால்தான் 50, 60 வயதுகளில்கூட பிறப்புறுப்பின் ‘தசைகள்’ வலுவாக இருக்கும்.

* உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.

* அறுவைசிகிச்சை பிரசவம் எனில் 2 மாதத்துக்கு அப்புறம்தான் உடல் நார்மலுக்கு வரும். அதற்குப் பின் பயிற்சிகள் செய்யலாம்.

மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும் நாட்டு வைத்தியம்

• ஆற்றுத் தும்பட்டியை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் குன்மகுடோரி மெழுகைக் கடைகளில் வாங்கிப் பட்டாணி அளவு சாப்பிட்டால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும்.

• இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.

• இத்திப் பிஞ்சை, சீரகம் சேர்த்து அவித்து சாப்பிட்டால் அதிக ரத்தப்போக்கு குறையும்.
நாட்டு வைத்தியம்


• இம்பூறல் வேர்ப்பட்டை 10 கிராமுடன் பெருங்காயம் ஒரு கிராம் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

• கல்யாண முருங்கை இலைச்சாற்றை தினமும் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

• பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.