• ஆற்றுத் தும்பட்டியை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் குன்மகுடோரி மெழுகைக் கடைகளில் வாங்கிப்
பட்டாணி அளவு சாப்பிட்டால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும்.
• இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.
• இத்திப் பிஞ்சை, சீரகம் சேர்த்து அவித்து சாப்பிட்டால் அதிக ரத்தப்போக்கு குறையும்.
• இம்பூறல் வேர்ப்பட்டை 10 கிராமுடன் பெருங்காயம் ஒரு கிராம் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மாதவிலக்கு
கோளாறுகள் தீரும்.
• கல்யாண முருங்கை இலைச்சாற்றை தினமும் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல்
குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை
சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.
• பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும்.
வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.