Pages

Wednesday, March 19, 2014

தொப்பையை குறைக்கும் அன்னாச்சிப்பழம்

அன்னாச்சிப்பழம்
பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..

இன்று பெரும்பாடாய் மாறும் தொப்பை குறைக்க அன்னாச்சி பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்..

மேனியை மினு மினுக்க வைக்கும் வழிகள்

ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!

அதேப்போன்று அரை மூடி எலுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.

எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும். தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.

மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்

அழகு
இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.

இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.

* 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.

* சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அதோடு பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.

* கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அதனை செய்தால் உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும்.

மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூரியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக பொலிவோடு இருக்கும்.

Tuesday, March 18, 2014

பல்வலி நீங்க எளிய வைத்தியம்

பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே. பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும். அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.

அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.

தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.

Monday, March 17, 2014

துளசியின் மருத்துவ குணம்

துளசிதுளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள்துளசி, கற்பூர துளசி உள்பட 300-க்கும் மேற்பட்ட துளசி வகைகள் உள்ளன. 

துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். 'திருத்துழாய்' என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கபம் சம்பந்தமான நோய்கள் மட்டுமின்றி, ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு போன்ற குளிர் சம்பந்தமான நோய்களும் இந்த துளசியால் விடைபெற்று செல்லும். முக்கியமாக இளம்பிள்ளை வாதம் நோய் எட்டிப்பார்க்காமல் இருக்க துளசியானது அருமருந்தாக உள்ளது.

துளசியின் சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்துவருவதன் மூலமாக இதனை தடுக்க முடியும். குழந்தைகளின் வயிற்று வலி தீர, காது சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த, வெண்குஷ்ட நோய்க்கு, நீரிழிவு நோய், களைப்படைந்த மூளைக்கு சுறுசுறுப்பளிக்க, இருதய நோய்க்கு, ஆஸ்துமா மற்றும் மார்பு சம்பந்தமான நோய்க்கு, உடல் துர்நாற்றம் மறைய, நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக, தீராத தலைவலி தீர, வெயில் காலத்தில் வரும் கண் கட்டி குணமாக, உள்நாக்கு வளர்ச்சியை தடுக்க என அனைத்து நோய்களுக்கும் துளசியை பயன்படுத்தி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

துளசியின் முக்கிய குணம் குளிர்ச்சியால் ஏற்படும் கபத்தை நீக்குவதுதான். பெயரில் பலவாராக இருந்தாலும், குணத்தில் அனைத்து துளசிகளும் ஒரே செயலைத்தான் செய்கின்றன. கோவில்களில் செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரில் துளசியை போட்டு வைத்து, அந்த நீரை துளசியுடன் சேர்த்து பிரசாதமாக வழங்குவார்கள்.

Sunday, March 16, 2014

மூட்டு வலியால் முடக்கம்

மூட்டு வலி
பொதுவாக மூட்டுகள் மூன்று வழிகளில் பாதிக்கப்படுகின்றன. முதலாவது தேய்மானத்தால் வருவது. சர்க்கரை நோய் இளமையிலேயே முதுமையை கெடுக்கும். சாதாரணமாக 65-70 வயதுகளில் வரக்கூடிய தேய்மானம் 40-50 வயதில் வந்து விடும். இரண்டாவது வகை. நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்படுவது.

காசநோய் கிருமிகள் போன்ற கிருமிகளால் வரக்கூடியது. மூன்றாவது வகை மூட்டு பாதிப்பு தன்னைத்தானே தாக்கும் நோய்களில் ஒன்றால் வருவது. இந்த பாதிப்பு திடீரென வரலாம். விரைந்து சரியாகி விடும் அல்லது படிப்படியாக தீவிரமாகிப் பொருத்த தொல்லைகள் தரலாம். இரண்டு எலும்புகள் இணையும் பகுதி மூட்டு இரண்டையும் இணைப்பது மூட்டு உறை.

இரண்டு எலும்புகளின் நுனிப்பகுதிகளை ரப்பர் போன்ற குருத்தெலும்பு மூடி இருக்கும். இது மெத்தை போன்று மிருதுவானதாகவும் அதிர்ச்சியை தாங்கும் அமைப்பாகவும் உள்ளது. மூட்டுகளில் பசை போன்ற திரவம் உள்ளது. இதை சைனோவியல் திரவம் என்கிறார்கள். இது குருத்தெலும்பை மசகுத்தன்மை கொண்டாக வைத்துள்ளது.

மூட்டுகள் பாதிப்பு அடையும் போது எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேய்ந்து விடுகின்றன. தேய்ந்த எலும்புகள் உரசும் போது வலி உண்டாகிறது. ஆரோக்கியமான உணவு முறை நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. கொழுப்பு, உப்பு, இனிப்பு சத்துகள் அதிகமுள்ள உணவுப்பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகள், காய்கறிகள் பருப்பு வகைகள், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள் ஆகியவற்றை வேண்டிய அளவுகளில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சி மூட்டுகள் ஒரே நிலையில் இறுகி விடாமல் தடுக்கிறது. சரியாக இயங்க வைக்கிறது.

மூட்டு வலி
மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி மூட்டுகளுக்கு வலிமையை உண்டாக்கி வலியை குறைக்கும். வழக்கமான பணிகளை செய்ய உதவும். இதற்கு தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். முழங்கால்களை மடக்கி கைகளை நீட்டி உள்ளங்கைகள் தரையில் படுமாறு படுத்துக்கொள்ளவேண்டும். இதனால் முதுகுப் பகுதியில் அழுத்தம் குறையும்.

இளநீரில் உள்ள சத்துக்கள்

இளநீர்
* இளநீரின் அறிவியல் பெயர் கோகோஸ் நூசிபெரா. இளநீரானது 200 மில்லி முதல் ஒரு லிட்டர் வரை, இளநீரின் வடிவம், அளவிற்கேற்ப நீரைக் கொண்டிருக்கும். சர்க்கரை, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நொதிகள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்கள் பலவற்றை பாதுகாத்து வழங்கும் பெட்டகமே இளநீர் என்று சொல்லலாம்.

* புத்துணர்ச்சி பானமாக இளநீரை அருந்தலாம். இயற்கை வழங்கிய கோடையின் கொடையே இளநீர். உடலின் உஷ்ணம் தணித்து குளிர்ச்சியூட்டும்.

* இளநீரில் ஒற்றைச்சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுஉப்புக்கள் மிகுந்துள்ளது.

* சைடோகின்கள் எனும் தாவர ஹார்மோன்கள் இளநீரில் நிரம்பி உள்ளது. இது வயது மூப்பு, ரத்தக்கட்டு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படும். புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையும் வழங்கும்.

* இளநீரிலுள்ள அமினோ அமிலங்கள், நொதிகள்,   தாதுஉப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உடல் திரவ இழப்பை உடனே ஈடுகட்டும். அத்துடன் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்ட இளநீர் வழங்குவார்கள். இதற்காக அளிக்கப்படும் ஓ.ஆர்.எஸ். எனும் சிகிச்சை முறைக்கு இளநீரைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் (டபுள்யு.எச்.ஓ.) அங்கீகாரம் வழங்கி உள்ளது.

* நொதிகளை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் நொதிக்காரணிகள் இளநீரில் நிறையவே உள்ளன. பாஸ்பாடேஸ், கேட்டலேஸ், டிஹைட்ரனேஸ், டயஸ்டேஸ், பெராக்சிடேஸ், ஆர்.என்.ஏ. பாலிமரெசஸ் போன்ற நொதிகள் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களில் பங்கெடுக்கும்.

* பழ வகைகளுக்கு ஈடாக கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், மக்னீசியம், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புகள், அதிகமாகவே உள்ளது.

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோபிளே வின், நியாசின், தயமின், பைரிடாக்சின், போலேட்ஸ் ஆகியவை மிகுதியாக இருக்கிறது. உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்சியாக வைப்பதில் இவற்றின் பங்கு அதிகம்.

* பொட்டாசியம் இளநீரில் மிகுந்துள்ளது. 100 மில்லி இளநீரில் 250 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 150 மில்லிகிராம் சோடியம் உள்ளது. இவை உடலுக்குத் தேவையான மின்சக்தி வழங்கும் பொருளாக பயன்படும். பேதியின்போது ஆற்றல் இழப்பை தடுப்பதிலும் பங்கு வகிக்கும்.

* ‘வைட்டமின்’ சி, இளநீரில் குறைந்த அளவு (2.4 மில்லிகிராம்) உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பொருளாக செயலாற்றும்.