Pages

Showing posts with label உடலுக்கு குளிர்ச்சி. Show all posts
Showing posts with label உடலுக்கு குளிர்ச்சி. Show all posts

Friday, May 2, 2014

பூசணிக்காய் மருத்துவ பயன்கள்

பூசணிக்காய்
கோடைக்காலத்தில் வெப்பத்தினால் உடலில் அதிகம் உண்டாகும் வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் வழங்குவார்கள்.  உணவுகளுக்காகவும் மருத்துவக் குணங்களுக்காவுமே பூசணியைப் பயிர் செய்கின்றனர்.

இது படர் கொடியைச் சேர்ந்தது.  இக்காய்கறி பெண்களுக்கு ஏற்படும் வலிப்பு நோய், சிறுநீர் பிரியாமை முதலியவற்றைக் குணப்படுத்தி விடுகிறது. 1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம்.

உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.

மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் பெறப் பூசணிக்காயைச் சமைத்து உண்டால் போதும், மனத்திற்கு அமைதி ஏற்படும். நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும்.

இது முக்கியமான மருந்தாகும். இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், உடலின் வெப்பம் தணியவும், ஆணின் உயிரணுக்கள் அடர்த்தியுடன் வெளிப்படவும் இந்த மருந்தை அருந்த வேண்டும். பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.

மூலம், சிறுநீர் ஆகியவற்றில் வரும் இரத்தம், நுரையீரல்கள் மற்றும் மூக்கு வழியாக வரும் இரத்தம் முதலியவற்றை இறுகி உறையச் செய்ய முடியும். இதற்காகத் தோல் நீக்கிய பூசணிக்காய்த் துண்டுகளை மிக்ஸி மூலம் சாறாக மாற்றி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் போதும்.

இரண்டு மூன்று முறை இவ்வாறு அருந்தியதுமே இரத்தம் உறைந்து விடும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் பூசணிக்காயை உணவில் சேர்ப்பது நலம். பூசணிக் கொடியின் இளந்தளிர் இலைகளுக்கும் இதே மருத்துவக் குணங்கள் உள்ளன.

பழுத்த பூசணியின் சதையைச் சாறாக்கிக் சர்பத் சேர்த்து அருந்தினால் உடல் வெப்பம் தணியும்; குளிர்ச்சி உண்டாகும். சூடான தோசை வார்க்கும் தட்டில் பூசணியைப் பிழிய வேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அழுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சாற்றுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும்.

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும். இந்தச் சாறு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகே வேறு வகையான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். பூசணியின் விதைகள் குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன.

தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும். பூசணிக்காயின் விதைகளை அகற்றிவிட்டுச் சதையை மட்டும் வேக வைக்க வேண்டும். புண்களின்மீது இந்தச் சதையை நன்கு பிசைந்து வைத்துக் கட்ட வேண்டும்.

புண்களினால் ஏற்படும் கெட்ட நாற்றம் நீங்கி, புண்கள் குணமாகும். வெளியில் பச்சை நிறத் தோலுடன் காட்சி அளிக்கும் பூசணிக்கு கல்யாணப் பூசணிக்காய் என்று பெயர். இதில் சதை அதிகம் இருக்கும். இதுவும் காக்கை வலிப்பு, நரம்புக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள் முதலியவற்றைக் குணமாக்குகிறது.

எனவே, பூசணிக்காயை உங்கள் உணவில் ஒதுக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.  இதன் மருத்துவப் பயனையும் சத்துணவையும் அறிந்தால் உணவாகப் பயன்படுத்தி உடல் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

Sunday, March 16, 2014

இளநீரில் உள்ள சத்துக்கள்

இளநீர்
* இளநீரின் அறிவியல் பெயர் கோகோஸ் நூசிபெரா. இளநீரானது 200 மில்லி முதல் ஒரு லிட்டர் வரை, இளநீரின் வடிவம், அளவிற்கேற்ப நீரைக் கொண்டிருக்கும். சர்க்கரை, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நொதிகள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்கள் பலவற்றை பாதுகாத்து வழங்கும் பெட்டகமே இளநீர் என்று சொல்லலாம்.

* புத்துணர்ச்சி பானமாக இளநீரை அருந்தலாம். இயற்கை வழங்கிய கோடையின் கொடையே இளநீர். உடலின் உஷ்ணம் தணித்து குளிர்ச்சியூட்டும்.

* இளநீரில் ஒற்றைச்சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுஉப்புக்கள் மிகுந்துள்ளது.

* சைடோகின்கள் எனும் தாவர ஹார்மோன்கள் இளநீரில் நிரம்பி உள்ளது. இது வயது மூப்பு, ரத்தக்கட்டு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படும். புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையும் வழங்கும்.

* இளநீரிலுள்ள அமினோ அமிலங்கள், நொதிகள்,   தாதுஉப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உடல் திரவ இழப்பை உடனே ஈடுகட்டும். அத்துடன் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்ட இளநீர் வழங்குவார்கள். இதற்காக அளிக்கப்படும் ஓ.ஆர்.எஸ். எனும் சிகிச்சை முறைக்கு இளநீரைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் (டபுள்யு.எச்.ஓ.) அங்கீகாரம் வழங்கி உள்ளது.

* நொதிகளை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் நொதிக்காரணிகள் இளநீரில் நிறையவே உள்ளன. பாஸ்பாடேஸ், கேட்டலேஸ், டிஹைட்ரனேஸ், டயஸ்டேஸ், பெராக்சிடேஸ், ஆர்.என்.ஏ. பாலிமரெசஸ் போன்ற நொதிகள் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களில் பங்கெடுக்கும்.

* பழ வகைகளுக்கு ஈடாக கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், மக்னீசியம், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புகள், அதிகமாகவே உள்ளது.

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோபிளே வின், நியாசின், தயமின், பைரிடாக்சின், போலேட்ஸ் ஆகியவை மிகுதியாக இருக்கிறது. உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்சியாக வைப்பதில் இவற்றின் பங்கு அதிகம்.

* பொட்டாசியம் இளநீரில் மிகுந்துள்ளது. 100 மில்லி இளநீரில் 250 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 150 மில்லிகிராம் சோடியம் உள்ளது. இவை உடலுக்குத் தேவையான மின்சக்தி வழங்கும் பொருளாக பயன்படும். பேதியின்போது ஆற்றல் இழப்பை தடுப்பதிலும் பங்கு வகிக்கும்.

* ‘வைட்டமின்’ சி, இளநீரில் குறைந்த அளவு (2.4 மில்லிகிராம்) உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பொருளாக செயலாற்றும்.