தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழ சாறு ஒரு ஸ்பூன், கேரட் சாறு ஒரு ஸ்பூன், ஈஸ்டர் தூள் அரை ஸ்பூன், இவை எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விட முகம் பளபளப்பாக இருக்கும்.
தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து பூசி, நல்ல மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பளிச்சிடும்.
ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் / பாதாம்பருப்பு, எண்ணெய் ஒரு ஸ்பூன் என எல்லாவற்றையும் கலந்து, நன்றாக கலக்கி முகத்தில் பூசி மஸாஜ் செய்து வந்தால் கரும்புள்ளி நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.
இரவு படுக்க போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.