Pages

Showing posts with label கூந்தல் ஆரோக்கியம். Show all posts
Showing posts with label கூந்தல் ஆரோக்கியம். Show all posts

Friday, April 17, 2015

முடி உதிர்தல், இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணி

 

முடி உதிர்தல், இளநரைனு பொண்ணுங்க ரொம்பவே கஷ்டப்படுவாங்க. அதுக்கு சில வைத்தியம் சொல்றேன், கேளுங்க. கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும்.

முடி உதிர்தல், இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணிவழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும். கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்சனை சரியாகும். அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இது ரெண்டையும் சம அளவு எடுத்துக்கிட்டு, இதுகளைவிட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து பதமா காய்ச்சணும்.

இதை தினமும் தலைக்கு தேய்ச்சுட்டு வந்தா... நரை விழுறது சரியாகும். மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் ஒண்ணரை லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கி தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும், அதோட நரை விழுறதையும் தடுக்கும்.

கூந்தல் ஆரோக்கியத்தை காக்கும் சீகைக்காய்


 கூந்தல் ஆரோக்கியத்தை காக்கும் சீகைக்காய்

சீகைக்காய் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு பொருள். இதனைக் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தல் மென்மையாக, அழகாக, பொலிவோடு மற்றும் அடர்த்தியாக இருக்கும். சீகைக்காயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் டி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக உள்ளது.

இவை கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் இதில் உள்ள மைக்ரோ-நியூட்ரியன்ட்டுகள் கூந்தல் வளர்ச்சியை தூண்டி, முடியின் இயற்கை அழகைத் தக்க வைக்கும். சீகைக்காயில் pH-இன் அளவு குறைவாக இருப்பதால், இதனைப் பயன்படுத்தும் போது, அவை தலையில் ஈரப்பசையைத் தக்க வைத்து, கூந்தலை பொலிவோடு வெளிக்காட்டும்.

சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரித்தால், அவை பொடுகுத் தொல்லையை முற்றிலும் நீக்கிவிடும். அதுமட்டுமின்றி சீகைக்காய் நல்ல வலிமையான மற்றும் அடர்த்தியான முடி வளர உதவும். தலையில் பேன் தொல்லை இருந்தால், சீகைக்காய் பயன்படுத்தினால் உடனே நீங்கும். சீகைக்காயை ஷாம்பு போன்றும் பயன்படுத்தலாம்.

அதற்கு சீகைக்காயை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, முடியை அலச வேண்டும். முக்கியமாக அளவுக்கு அதிகமாக தேய்க்க வேண்டாம். இப்படி சீகைக்காயைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், முடி நன்கு பட்டுப்போன்று அழகாக இருக்கும்.

சீகைக்காய் பொடியில் தயிர் சேர்த்து கலந்து, அதனை தலையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு தேய்த்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்தால், முடிக்கு நல்ல வலிமை கிடைக்கும். விரைவில் உடையாது.