சீகைக்காய் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு பொருள். இதனைக் கொண்டு கூந்தலைப் பராமரித்தால்,
கூந்தல் மென்மையாக, அழகாக, பொலிவோடு மற்றும் அடர்த்தியாக இருக்கும்.
சீகைக்காயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் டி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக உள்ளது.
இவை கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் இதில் உள்ள மைக்ரோ-நியூட்ரியன்ட்டுகள் கூந்தல் வளர்ச்சியை தூண்டி, முடியின் இயற்கை அழகைத் தக்க வைக்கும். சீகைக்காயில் pH-இன் அளவு குறைவாக இருப்பதால், இதனைப் பயன்படுத்தும் போது, அவை தலையில் ஈரப்பசையைத் தக்க வைத்து, கூந்தலை பொலிவோடு வெளிக்காட்டும்.
சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரித்தால், அவை பொடுகுத் தொல்லையை முற்றிலும் நீக்கிவிடும். அதுமட்டுமின்றி சீகைக்காய் நல்ல வலிமையான மற்றும் அடர்த்தியான முடி வளர உதவும். தலையில் பேன் தொல்லை இருந்தால், சீகைக்காய் பயன்படுத்தினால் உடனே நீங்கும். சீகைக்காயை ஷாம்பு போன்றும் பயன்படுத்தலாம்.
அதற்கு சீகைக்காயை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, முடியை அலச வேண்டும். முக்கியமாக அளவுக்கு அதிகமாக தேய்க்க வேண்டாம். இப்படி சீகைக்காயைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், முடி நன்கு பட்டுப்போன்று அழகாக இருக்கும்.
சீகைக்காய் பொடியில் தயிர் சேர்த்து கலந்து, அதனை தலையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு தேய்த்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்தால், முடிக்கு நல்ல வலிமை கிடைக்கும். விரைவில் உடையாது.

No comments:
Post a Comment