Pages

Showing posts with label இளநரை. Show all posts
Showing posts with label இளநரை. Show all posts

Friday, April 17, 2015

முடி உதிர்தல், இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணி

 

முடி உதிர்தல், இளநரைனு பொண்ணுங்க ரொம்பவே கஷ்டப்படுவாங்க. அதுக்கு சில வைத்தியம் சொல்றேன், கேளுங்க. கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும்.

முடி உதிர்தல், இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணிவழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும். கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்சனை சரியாகும். அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இது ரெண்டையும் சம அளவு எடுத்துக்கிட்டு, இதுகளைவிட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து பதமா காய்ச்சணும்.

இதை தினமும் தலைக்கு தேய்ச்சுட்டு வந்தா... நரை விழுறது சரியாகும். மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் ஒண்ணரை லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கி தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும், அதோட நரை விழுறதையும் தடுக்கும்.

Wednesday, March 12, 2014

இளநரையா?

பலரையும் சங்கடப்பட வைக்கும் விஷயம், இளநரை. இளவயதிலேயே வயதான தோற்றத்தை இளநரை ஏற்படுத்திவிடும். இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இளவயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறையச் சேர்க்க வேண்டும்.

பசு வெண்ணைக்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கிறது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வர வேண்டும். வெண்ணையுடன் சிறிது கறிவேப்பிலைப் பொடியைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதே வெண்ணையை தலை, கால்களில் அழுத்தித் தேய்க்க வேண்டும். தலைமுடியின் வளர்ச்சிக்கும், கருமைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.


இளநரை


* நெல்லிக்காயை வெட்டி கொட்டை நீக்கி நிழலில் காயவைக்கவும். உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணையில் வறுக்க வேண்டும். காய் நன்றாகக் கருகும் வரை வறுத்தால், எண்ணை நன்றாகக் கருநிறமாகிவிடும். இந்த எண்ணை தலைக்கு நல்லது. இளநரையைத் தடுக்கும். பித்தம் சமமாகும். உலர்ந்த நெல்லிக்காயைத் தண்ணீரில் ஓர் இரவு ஊறப் போட்டு அந்தத் தண்ணீரை தலையில் தேய்க்கலாம். இது இள நரைக்கு நல்லது.

* சுத்தமான தேங்காய் எண்ணையில் உலர்ந்த நெல்லிக்காய்த் துண்டுகள், நசுக்கிய கடுக்காய் விதைகள், செம்பருத்திப் பூக்கள், கரிசலாங்கண்ணி, நீலிஅவரை, பிச்சி இலை, தான்றிக் காய், ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கக்கூடிய லோகபஸ்மம் இவற்றைச் சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணையை வடிகட்டி தலைக்குப் பயன் படுத்தலாம்.

* கடுக்காய் விதையை நசுக்கி தேங்காய் எண்ணையில் கலந்து, அதன் சத்து முழுவதும் எண்ணையில் இறங்கும்வரை காய்ச்சி, அந்த எண்ணையைத் தினசரி உபயோகிக்கலாம். இது 'ஹேர் டை' போல பயன்படும. கடுக்காய் காய்ச்சிய நீரை தலைமுடியை அலசப் பயன்படுத்தலாம்.

* மருதாணி இலையை நன்கு அரைத்து, அதை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சிஅந்த எண்ணையையும் பயன்படுத்தலாம். இது நரை முடிக்கான சாயமாகப் பயன்படும். சிலமணி நேரம் கழித்து அலசினால் முடி கருமையாகக் காட்சியளிக்கும்.

* செம் ப  ரு த் தி ப்பூக்களை நிழலிலும், வெயிலிலும் காயவைத்து தேங்காய் எண்ணையில் இட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதை, நரையை மறைக்கும் சாயமாகத் தடவிக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு வழி, அதிக அடர்த்தியான தேயிலை நீரால் தலைமுடியை அலசுவதுதான். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முடி கருஞ்சிவப்பாக மாறிவிடும்.