Pages

Showing posts with label கழுத்துவலி. Show all posts
Showing posts with label கழுத்துவலி. Show all posts

Saturday, March 19, 2016

மன குழப்பமா? வேண்டவே வேண்டாம்


இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் பல்வேறு துறைகளிலும் வேலை கிடைப்பது என்பது கடினமான விஷயமாக உள்ளது. இதனால் அதிக நேரம் பணியாற்ற வேண்டியுள்ளதை நினைத்து இளைஞர்கள் கவலை கொள்ளாமல், நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் வேலையில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். அலுவலக வேலைகளையும், டென்சனையும் அலுவலகத்திலேயே விட்டு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலேயும், வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கும் செல்ல வேண்டும். இதனால் அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.  ஆண்களுக்கு நிகராக பணியில் சாதிக்கும் நகர்ப்புற பெண்களையே இந்த மன அழுத்தம் அதிகம் பதிக்கிறது.எனவே கணவன், மனைவி இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பழகிக் கொண்டால் வாழ்க்கை ஸ்மூத்தாக செல்லும்.

மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பது அவசியம். படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, நெஞ்சுவலி, மூச்சு திணறல், தலை சுற்றல், மயக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகள் மன அழுத்தத்திற்கு உள்ளன. உடல் நிலை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றால் ஒருவர் அதிகம் பதிக்கபட்டால் அது மன அழுத்தம் எனலாம். நேரத்தை சரியாக பயன்படுத்தாதது, பணியிடத்தில் சக பணியாருடன் அனுசரித்துப் போகாதது, வேலை மற்றும் இல்லற வாழ்க்கை இரண்டையும் கையாளத் தெரியாதது. தாழ்வு மனப்பான்மை ஆகியவையே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம்.

படபடப்பு, தலைவலி, கழுத்துவலி, தலைசுற்றல், மயக்கம் அடிக்கடி ஏற்பட்டால் அது மன அழுத்தத்தின் அறிகுறி. மன அழுத்தத்தால் ஒருவர் அதிகம் பாதிக்கப்பட்டால், தானியங்கி நரம்பு மண்டலத்தில் உள்ள 'சிம்பாலிக் நரம்பு' மண்டலம் அதிகம் தூண்டப்படும். 'அட்ரீனல் கார்டி சோல் ஹார்மோன்' அதிகம் சுரக்கும். இந்நிலை தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பதிக்கும். தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மனதளவில் மகிழ்ச்சியாக இருத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளால் மன அழுத்த பாதிப்பை தவிர்க்கலாம். ஒரு மணிநேரம் தொடர்ந்து பணியாற்றினால் இரண்டு நிமிடம் கண்களை மூடி, மூச்சு காற்றில் கவனம் செலுத்தினால் உடலுக்கு நல்லது. உடலில் மொத்தமாக மன அழுத்தம் சேரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.