Pages

Saturday, November 14, 2015

தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா

தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா


யோக முத்ரா என்னும் ஆசனத்தை தினமும் செய்து வந்தால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. இதனால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவது தடுக்கப்படும். 


யோக முத்ரா நிலையானது ஒருவரின் இறுக்கமான தசையை தளர்த்தி, உடலை ரிலாக்ஸ் செய்யும். சிறுநீரக மண்டலம் எவ்வித தங்குதடையின்றியும் நடைபெற யோக முத்ரா உதவும். மேலும் சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். யோக முத்ரா நிலையின் போது இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் நன்றாக அழுந்துவதால், நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். உடலின் தண்டுவடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் வலிமைப் பெறும். 



இதனால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். யோக முத்ரா நிலையை தினமும் தவறாமல் செய்து வந்தால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த யோகா முத்ரா ஆசனத்தை செய்து வந்தால், முதுகு வலி பறந்தோடிவிடும். 



இந்த யோகா நிலையின் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.



யோக முத்ரா செய்யும் முறை :



முதலில் பத்மாசனம் போல் அமர்ந்து, பின் கைகளை பின்னே மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொடவும். இப்படி 30 வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழவும். 



இப்படி தினமும் 3 முதல் 45 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தில் ஆரம்ப காலத்தில், கைகளை பின்புறம் கட்டியவாறு குனித்து இந்த ஆசனத்தை செய்யலாம்.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பிராணமாசனம்

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பிராணமாசனம்

செய்முறை: 


விரிப்பில் முழங்காலை மடக்கி கால்கள் மேல் உட்காரவும், கணுக்கால் தசைகளை கைகளால் பிடிக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் குனிந்து தலையைத் தரையில் பதிக்கவும். புட்டங்களை உயர்த்தவும், அதேசமயம் தாவான்கட்டை மார்பை அழுத்தட்டும். இதுபோல் 5 முதல் 7 முறை செய்து பார்க்கவும். 



பலன்கள்:

1. தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

2. ஆஸ்துமா நோய் குணமடைய வழிசெய்கிறது.

3. மார்பு, நுரையீரல் பலம் பெறுகிறது.

வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா?


வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா?

30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. இருபது வயதில் கவர்ச்சி உடையுடன் ஒரு பெண்ணைப் பார்த்தாலே ஆண்குறி விறைப்புத் தன்மையை அடைந்துவிடும். 


30-35 வயதில் பெண் தொட்டு தூண்டினால்தான் விறைப்புத் தன்மை ஏற்படும். 50 வயதுக்கு மேல் தொடுதலுக்கு மேலும் சில சமாசாரங்கள் தேவைப்படும். 50 வயதுக்கு மேல் தோலில் சுருக்கங்கள் உண்டாவதால் விறைப்புத்தன்மை பெரிய அளவில் இருக்காது. ஆனால், இது கலவிக்கு தடை இல்லை. செக்ஸை தூண்டும் ஹார்மோன்களின் அளவு குறையும். 


உற்பத்தியாகும் விந்தின் அளவு குறைவாக இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். பெண்குறியில் நீர் சுரக்காது. இதனால் கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். 


புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. போர் அடிக்கத் தொடங்கும். இதைப் போக்க இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும். 


30 வயதுக்கு மேல் ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.