Pages

Saturday, November 14, 2015

வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா?


வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா?

30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. இருபது வயதில் கவர்ச்சி உடையுடன் ஒரு பெண்ணைப் பார்த்தாலே ஆண்குறி விறைப்புத் தன்மையை அடைந்துவிடும். 


30-35 வயதில் பெண் தொட்டு தூண்டினால்தான் விறைப்புத் தன்மை ஏற்படும். 50 வயதுக்கு மேல் தொடுதலுக்கு மேலும் சில சமாசாரங்கள் தேவைப்படும். 50 வயதுக்கு மேல் தோலில் சுருக்கங்கள் உண்டாவதால் விறைப்புத்தன்மை பெரிய அளவில் இருக்காது. ஆனால், இது கலவிக்கு தடை இல்லை. செக்ஸை தூண்டும் ஹார்மோன்களின் அளவு குறையும். 


உற்பத்தியாகும் விந்தின் அளவு குறைவாக இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். பெண்குறியில் நீர் சுரக்காது. இதனால் கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். 


புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. போர் அடிக்கத் தொடங்கும். இதைப் போக்க இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும். 


30 வயதுக்கு மேல் ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.

No comments: