Pages

Saturday, July 25, 2015

அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?


அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்ற ஏற்படுத்தும். இன்னொருவருக்கோ மூச்சு முட்டி திணறல் ஏற்படும்.

வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு போன்றவை.

அதே அலர்ஜிப் பொருளால் உணவுப்பாதை பாதிப்படைந்து, இதுபோன்றகோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள். ஆக இந்த அறிகுறிகளைக் கொண்டு பொதுவாக அலர்ஜிநோய்கள், தும்மல் நோய், விஷக்கடி, அலர்ஜி, ஆஸ்துமா என்று மூன்று பெரும் பிரிவுகளாக வகைப் படுத்தப்படுகின்றன.

உடல் அங்கங்கு சிவந்து செம்மை படர்தல், ஆகாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், கரப்பான் எனப்படும் எக்சிமா என்னும் தோல் நோய், மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காகளில் சீழ்வடிதல், அரிப்பு, தற்காலிகமாகச் செவி கேளாமை போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும் பல்வேறு நோய்களாகும்.

தூக்கமின்மை, தலைவலி, படுக்கையில் சிறுநீர்கழித்தல், சிறுநீர்பை தொந்தரவுகள், நெஞ்சுவலி, படபடப்பு, கை, கால்கள் சில்லிட்டுப்போதல், எப்போதும் பரபரப்புடன் இருத்தல், பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அளவிற்கு அதிகமாக சுறுசுறுப்பு, வெட்டுவாதம் போன்றனவும் அரிதாகச் சிலருக்கு அலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.

பிறப்பு உறுப்புகளில் அதிகமான அரிப்பு, எரிச்சல், புண் போன்ற அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுதான் முதன் முதலில் சர்க்கரைநோய், பலவகைக் காளான், பால் வினைத் தொற்று நோய்கள் உடலில் மறைந்துஇருப்பது கண்டுபிடிக்கப்படுகின்றன.

No comments: