**எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
**பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.
**நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
**இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்
**பூண்டில் அல்லிசின் என்றும் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் இருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் தங்குவது தடைபட்டு உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும்
**சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
** தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
**கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
**கம்பு, சோளம், வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது.
No comments:
Post a Comment