Pages

Friday, December 27, 2013

தூக்கம் கண்களை தழுவட்டும்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4H8EIi4QrJcKOGiWEQxXl15jigNdLXsZKXHGS6XaMJXq_i04hkfpyrKMJ3z4SlYpucazkia-fKZ092YTK_S1V3J_j97eblc1MQexHAK7Nb5o-yxRsNAifOFcL8LuabBCPre4QTrCBTM8/s1600/_72232782841.jpg



இன்றைய இயந்திரத் தனமான உலகில் பலவற்றை பணத்தால் வாங்கும் மனிதர்கள் தூக்கம் என்பதை துரத்திக் கொண்டே இருக்கின்றனர். ஒரு மனிதன் ஆரோக்கியத்தின் முதல் தகுதி சரியான தூக்கம் தான் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். அப்படி பழக்கமாக்கி கொண்டால் தூங்குவதற்குரிய நேரம் வந்தவுடன் உறக்கம் உங்களை கட்டியணைக்கும்.

தூங்க செல்வதற்கு ஒன்றரை மணி நேரதுக்கு முன்பே சாப்பிட்டு விடவும், சாப்பிட்டவுடன் துங்கினால், நள்ளிரவில் விழிப்பு வரும். உறங்க செல்வதற்கு முன்பு நான்கு மணி நேரத்துக்குள் டீ, காபி, மது என்ற எதையும் குடிக்க கூடாது. படுக்க செல்வதற்கு முன்பு புகை பிடிக்க கூடாது. தினமும் காலையில் எளிய உடற்பயிற்சிகள் செய்தல் நன்று. மதியம் தூங்கி பழகியவர்கள் 20 முதல் 30 நிமிடமே தூங்க வேண்டும். மதிய நேர தூக்கம் இரவு நேர தூக்கத்தை
பாதிக்காத வண்ணம்  பார்த்துக் கொள்ள வேண்டும்.

தூங்குவதற்கு முன்பு மனதை அமைதியாக்கி தயார் படுத்தி கொள்ளவும். உறவினர்களுடனும், நண்பர்களுடனும் பேசி ஜாலியாக இருக்கலாம். தூங்க செல்லும் முன் குளிர்ந்த நீரில் உடலை கழுவலாம். பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்துப் பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.



படுக்கை அறை காற்றோட்டமாகவும் சத்தமில்லாத அமைதியாகவும் வைத்து கொள்ள வேண்டும்.படுக்கும் அறையில் நனைந்த உடைகள் இருக்க கூடாது. அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தூங்கும் அறை இருட்டாகவும், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருக்க வேண்டும். படுக்கை அறையில் இதமான குளிர் இருப்பது அவசியம். சூடாக இருத்தல் கூடாது. படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பது அவசியம். தலையணை மற்றும் படுக்கைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

மல்லாந்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள் தலையணையை பயன் படுத்த வேண்டாம். தூக்கம் கண்களை தழுவினால் மட்டுமே படுக்கையில் படுக்க வேண்டும். உறக்கம் வர வில்லை என்றால் உடனே எழுந்து சென்று வேறு வேலைகளை பார்க்கலாம். நள்ளிரவில் விழிப்பு வந்தால் இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்க வேண்டிய வேலைகளை பற்றி சிந்திக்க வேண்டாம்.

மனதை அமைதியாக்கி இரவை ரசிக்க ஆரம்பித்தாலே எளிதில் தூக்கம் வரும். படுத்தபடியே பார்க்கும் விதத்தில் கடிகாரமோ, டிவியோ வைத்தல் கூடாது. ஒரு நாள் தூக்கம் சரியில்லை என்றால் கவலை வேண்டாம். அதை நமது உடல் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதையே தொடரும் பட்சத்தில் தான் பிரச்னை. படுக்கையில் அமர்ந்து படிப்பது, டிவி, கம்பியூட்டர்  பார்ப்பது, லேப்டாப் பயன்படுத்துவது கூடவே கூடாது.

No comments: