Pages

Friday, December 27, 2013

இலக்கை நிர்ணயுங்கள்.... எடையைக் குறையுங்கள்!


http://kungumamthozhi.files.wordpress.com/2013/12/morning-exercise-3.jpg


வாழ்வதற்காக சாப்பிடுவது என்பது போய் சாப்பிடுவதற்காக வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கிடைத்ததை எல்லாம் உள்ளே தள்ளுவது அடிக்கடி விருந்து, பார்ட்டி என கலந்து கொண்டு கணக்கில்லாமல் சாப்பிடுவது அசைவ வகைகளை அளவில்லாமல் கலந்து கட்டி அடிப்பது என முறையற்றுச் சாப்பிடுபவர்கள் கட்டாயம் பல சிக்கல்களில் சிக்கித் திணறுவதைக் காண முடிகிறது. இப்படி அளவில்லாமல் சாப்பிடுவதால் உடல் பருமன் அதனை ஒட்டி இதயக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் என உடல் ரீதியான பிரச்சனைகள் எழுவதைத் தடுக்க முடிவதில்லை.


இத்தகைய சிக்கல்களிலிருந்து தப்ப உணவு முறையில் ஒழுக்க நெறியைக் கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். இது திட்டமிட  எண்ணும் சிலர் பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு தினங்கள் முதல் டயட்டை மேற்கொண்டு உடல் இளைக்கப் போவதாக சபதம் எடுத்துக் கொள்ளுவது உண்டு. ஆனால் சபதம் எடுத்துக் கொள்ளும் பலரும் அதைப் பின் பற்றுவதில்லை என்பது தான் விசயமே. எனவே உடல் நலனைப் பேண விரும்புவோர் திடமனதுடன் முறையான உணவுக் கட்டுப் பாட்டைக் கடைபிடித்து இலக்கை எட்டுவதே சிறந்தது.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்...


உடல் எ
டை கூடிக் கொண்டே போவதற்கான காரணங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இதில் முதல் வகை பலரும் குடும்ப மரபணுப்படி உடல் எடை கூடுவதை நியாயப்படுத்துவது. இத்தகைய காரணங்களைத் தவிர்த்து. முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டைக் கையாண்டு உடல் பருமனைக் குறைக்கலாம்.

குற்ற உணர்ச்சிகள் ஏதுமின்றி செயல் பாட்டில் இறங்குங்கள். புதிதாக மாறுதலாக சமையலுக்கான புத்தகங்களை வாங்கி, டயட் உணவுக்கு மாறுங்கள். புதிதாக அளவு பெரிதான ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்து உங்களது பழைய ஆடைகளைத் தேடிப்பிடித்து, அந்த அளவுக்கு உங்கள் எடையைக் குறைக்க உழையுங்கள். கல்யா
வீடு உள்ளிட்ட விருந்துகளில் கலந்து கொள்கையில் சுவை மிகுந்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடத் தூண்டும் மனதைக் கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.

அதிகமாகச் சாப்பிடும் எண்ணம் ஏற்படும் போதெல்லாம் உடல் இளைக்க நீங்கள் எவ்வளவு பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள் நீங்களே நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். உடல் எடை குறைக்கும் முயற்சியில் வெற்றி காண ஆரம்பித்து உடல் எடை குறைய ஆரம்பித்ததும் உங்களுக்கு நீங்களே 'சபாஷ்' சொல்லி ஊக்குவித்துக் கொள்ளுங்கள். எடைக் குறைப்பில் தீவிரமாய் இறங்க இச்செயல் இன்னும் உதவும்.

உங்களது டயட் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனை கூற முற்படுவார்கள். அவற்றை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டாலும் உங்களது மருத்துவர் அல்லது உணவியல் நிபுணர்கள் கூறுவதையே கடை பிடியுங்கள். காரணம் ஒருவருக்கு ஒத்துப்போகும் உணவு முறை அடுத்தவருக்கும் ஒத்துப் போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிகமாய் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே என்பதற்காக விளம்பரங்களில் வரும் மாத்திரை மருந்துகளை வாங்கி குறுக்கு வழியிலான எதை குறைப்பில் ஈடுபடாத்தீர்கள். அது பெரும்பாலும் ஆபத்தில் கொண்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments: