Pages

Friday, October 4, 2013

பார்லி - சாபுதானா சுண்டல்

தேவையானவை: 

பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில் 
எண்ணெய் விட்டு, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக் கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Thursday, October 3, 2013

தேவையற்ற கொழுப்பைக் குறைக்க..

நமது சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டி ஒரு மருத்துவரின் மருந்துப் பெட்டி போன்றது. அதில் இருக்கும் மசாலாப் பொருட்கள் சில உணவு வகைகளுக்கு ருசி, மணம் தருவதோடு மருந்தாகவும், உடலை இளைக்கச் செய்யவும் பயன்படுகிறது.


இஞ்சி: இது மிளகாய் போல உடல் சூட்டை அதிகமாக்கி உடலில் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

பூண்டு: இது இருதய நோய் தடுப்பிற்கு ஏற்றது. சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும், உடலை இளைக்கச் செய்வதற்கும் இது வழி செய்கிறது.

பெருஞ்சீரகம்: இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. பலர் இதைத் தேயிலையோடு சேர்த்தோ, தனியாகவோ டீ செய்து பருகி, பசியைக் குறைத்து உடல் இளைக்க உபயோகிக்கிறார்கள்.

மிளகாய்ப் பொடி: மிளகு, மிளகாய் வகைகளில் உள்ள காப்சேசின் எனும் மிளகாய்ப் பொடியிலும் இருப்பதால் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி, வியர்வை அதிகமாக வரக் காரணமாகி நமது உடல் சீக்கிரம் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையும் குறையும்.

சீலரி விதை: இது கடுகு போல இருக்கும். சிறுநீரை அதிகமாக வெளியேற்றி உடல் எடையைச் சீராக ஆக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் அசட்டுப் பசி வராமல் தடுக்கிறது.

பார்ஸ்லி: இது கொத்தமல்லியைப் போல் தோற்றம் உள்ள ஒரு கீரை வகை. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்கு சக்தியை கொடுக்கிறது. உடலில்
அதிகப்படி நீர் தாங்காமல் வெளியேற்றி எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

காராமணி இனிப்பு சுண்டல்


காராமணி இனிப்பு சுண்டல்:

தேவையான பொருட்கள்:

சிவப்பு காராமணி - 1 கப்
பாகு வெல்லம் (பொடித்தது) - 1 கப்
வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

சிவப்புக் காராமணியை வருது, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு,  வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு  காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து, எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்தால் காராமணி இனிப்பு சுண்டல் தயார்.