Pages

Saturday, March 15, 2014

கண்களை பாதுகாக்கும் கீரைகள்

கீரை
பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன.

இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை சேர்த்து கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.

அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

வைட்டமின் ஏ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. இது பார்வைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

Friday, March 14, 2014

சருமத்தை அழகாக்கும் அவோகேடா

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. இந்த பழத்தில் ஸ்டெரோலின் என்னும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது.

இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு அவோகேடோவை அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

• இந்த ஃபேஸ் பேக்கில் அவோகோடோவுடன், உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, சிறிது தேனையும் ஊற்றி, முகத்திற்கு தடவினால், முகம் நன்கு ஈரப்பசையுடன் பொலிவோடு மின்னும்.

சருமத்தை அழகாக்கும் அவோகேடா

•  அவோகேடோ ஸ்கரப் பொதுவாக ஸ்கரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பொலிவற்று காணப்படும் சருமத்தை பொலிவோடு வைக்க உதவும். இத்தகைய ஸ்கரப்பை வெண்ணெய் பழத்தை வைத்து கூட செய்யலாம். அதற்கு வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது உப்பு சேர்த்து, முகத்தில் தடவி, 2-4 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• இது சருமத்தை அழகாக்க செய்யப்படும் மற்றொரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கில் கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் வேக வைத்துள்ள அவோகேடோவின் கூழை சேர்த்து, சிறிது தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

•  அவோகேடோவை மசித்து, முகத்தில் பூசி, பின் சிறு கற்களை கொண்டு, ஸ்கரப் செய்யும் போது முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பொலிவு பெறும்.

• பொதுவாக மசாஜ் செய்வதால், நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் அவோகேடோ எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால், சருமம் நன்கு ஈரப்பசையுடன், இருக்கும். மேலும் இந்த எண்ணெயை உதட்டில் தடவினால், உதடு மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் மாறும்.

கைகளை பராமரிப்பது எப்படி?

பெண்களுக்கு இன்று இருக்கும் வேலைப் பளுவில் கை, கால்களுக்கென்று தனித்தனியாக நேரமெடுத்து கவனிக்க நிச்சயம் பொறுமை இருப்பதில்லை. கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள எப்போதும் கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம் கழுவும் கிளவுஸ்களை வைத்துக் கொள்ளுங்கள்.

நகம் வளர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடையாமல் காக்க ஹேண்ட் லோஷன் உபயோகிக்காமல் ஹேண்ட் அண்ட் நெய்ல் லோஷன் உபயோகிக்கலாம். நகங்கள் உடையாமல் இருக்கும். இவர்கள் கிளவுஸ் உபயோகிப்பதும் கூட நகங்களை பாதுகாக்கும். அடிக்கடி நகம் உடைகிறது என்ற பிரச்சணை உள்ளவர்கள் Nail Strengthening Polish என்று கிடைக்கும் (நெய்ல்பாலீஷ் போன்றே இருக்கும்) லிக்விட்டை தினமும் இரவு நெயில் பாலீஷ் போன்றே நகங்களுக்கு அப்ளை செய்யலாம்.

கைகளை பராமரிப்பது எப்படி?

கைகளுக்கு வேக்சிங் அல்லது எபிலேட்டர் கொண்டு முடிகளை நீக்கலாம். வேக்சிங்கிற்கு டிஸ்போசபிள் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்துங்கள். தொற்றுநோய்களை தடுக்கலாம். அப்படி நீக்கும்போது மறக்காமல் விரல்களில், மோதிரம் போடும் இடங்களில் உள்ள முடிகளையும் நீக்குங்கள். இப்போது வீட்டிலேயே எளிமையாக செய்து கொள்ளும் மெனிக்யூர் முறை பற்றி இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மெனிக்யூர் செட் அல்லது எக்ஸ்ட்ரா அட்டாச்மெண்ட் உள்ள நெயில் கட்டர்
ஹேண்ட் லோஷன்
ஸ்க்ரப்பர்
சின்ன சைஸ் பேபி பிரஷ்
ஒரு கப்பில் தண்ணீர்
சிறிது லிக்விட் சோப்

முதலில் கைகளுக்கு ஸ்க்ரப் போட்டு நன்றாக மசாஜ் செய்து கழுவுங்கள். ஈரத்தை துடைத்துவிட்டு, சிறு கப் தண்ணீரில் லிக்விட் சோப் சிறிது விட்டு நன்றாக கலந்து, அந்த நீரில் விரல் நுனிகள் அதாவது நகங்கள் முழுவதுமாக மூழ்கும் அளவு 5 நிமிடம் ஊறவிடுங்கள். இப்படி செய்வதால் கைகளில் ஓரங்களில், நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை முற்றிலும் நீக்க முடியும்.

பிறகு பிரஷ் கொண்டு நன்றாக நக இடுக்குகளிலும் ஓரங்களிலும் தேயுங்கள். கைகளை நேரடியாக டேப் வாட்டரில் சோப் கொண்டு கழுவுவதைவிட அழுக்கை நீக்க, இது சிறந்த பலன் தரும். அதே பிரஷைக் கொண்டு கை முழுவதையும் நன்றாக முக்கியமாக உள்ளங்கைகளில் தேய்த்து கழுவுங்கள்.

இதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்படும். மிகவும் தேர்ச்சி உள்ளவர்கள் மட்டும் கை தோல் அதிகம் கடினமான இடங்களில் Corn Blade உபயோகிக்கலாம். இதை உபயோகிக்க நல்ல பயிற்சி அவசியம்

தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்


கோவைக்காய்கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.

இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.

கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு &கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.

இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்

Thursday, March 13, 2014

கூந்தல் உதிர்வதை தடுக்கும் வழிகள்!!

இன்றைய காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பலர் பல முறைகளை பின்பற்றுகிறார்கள்.  ஆனால் அதற்கு ஒரே வழி இயற்கை முறையை கடைபிடிப்பது தான்.

இயற்கை பொருட்களில் தான் அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. ஆகவே கூந்தல் உதிராமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், செயற்கை முறையை கடைபிடிப்பதை தவிர்த்து, இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

 கூந்தல் உதிர்வதை தடுக்கும் வழிகள்!!


*  எண்ணெய் குளியல் ஏதாவது ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு கூந்தலை நன்கு அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் நன்கு வளர்வதோடு, உதிராமலும் இருக்கும்.

*   தினமும் தலைக்கு எண்ணெய் தடவும் போது, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் நன்கு வலுவடையும். அதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் லாவண்டர் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சிறிது சேர்த்து மசாஜ் செய்வது நல்லது.

* வெதுவெதுப்பான கிரீன் டீயை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். ஏனெனில் கிரீம் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், கூந்தல் உதிர்தலை தடுத்து, கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

சீத்தாப்பழம்

சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
* சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.
* சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் புசி வர பிளவை பழுத்து உடையும்.
* இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.
*  விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.
* சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
* சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
* சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
* சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.
* சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.
* சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.

கேரட் மருத்துவ பயன்கள்

கேரட்
கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது.

வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.  100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள்:    

*சக்தி 41 கலோரிகள்   
*கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்   
*சர்க்கரை 5 கிராம்    
*நார்சத்து 3 கிராம்    
*கொழுப்புச் சத்து 0.2 கிராம்    
*புரோட்டின் 1 கிராம்

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.

வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.