அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத்
தருகிறது. வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது.
இந்த பழத்தில் ஸ்டெரோலின் என்னும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது.
இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான்,
முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு
அவோகேடோவை அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
• இந்த ஃபேஸ் பேக்கில் அவோகோடோவுடன், உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, சிறிது தேனையும் ஊற்றி, முகத்திற்கு
தடவினால், முகம் நன்கு ஈரப்பசையுடன் பொலிவோடு மின்னும்.
• அவோகேடோ ஸ்கரப் பொதுவாக ஸ்கரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பொலிவற்று காணப்படும் சருமத்தை பொலிவோடு
வைக்க உதவும். இத்தகைய ஸ்கரப்பை வெண்ணெய் பழத்தை வைத்து கூட செய்யலாம். அதற்கு வெண்ணெய் பழத்தை வேக வைத்து
மசித்து, சிறிது உப்பு சேர்த்து, முகத்தில் தடவி, 2-4 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
• இது சருமத்தை அழகாக்க செய்யப்படும் மற்றொரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கில் கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் வேக
வைத்துள்ள அவோகேடோவின் கூழை சேர்த்து, சிறிது தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின்னர்
குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
• அவோகேடோவை மசித்து, முகத்தில் பூசி, பின் சிறு கற்களை கொண்டு, ஸ்கரப் செய்யும் போது முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து,
சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பொலிவு பெறும்.
• பொதுவாக மசாஜ் செய்வதால், நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் அவோகேடோ எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால்,
சருமம் நன்கு ஈரப்பசையுடன், இருக்கும். மேலும் இந்த எண்ணெயை உதட்டில் தடவினால், உதடு மென்மையாகவும், பிங்க் நிறத்திலும்
மாறும்.
No comments:
Post a Comment