Pages

Showing posts with label சருமத்தை அழகாக்க. Show all posts
Showing posts with label சருமத்தை அழகாக்க. Show all posts

Saturday, April 5, 2014

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

வயதானலும் அழகாக இருப்பது எப்படி
சிலர் நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிப்பார்கள்.  இதற்கு வெளித்தோற்றம் மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பதால், இந்த இளமைத் தோற்றம் கிடைக்கிறது. அந்த வகையில் நீங்கள் நாற்பது வயதை கடந்தவரா? நாற்பது வயதிலும் துடிப்பாகவும், இளமையாகவும் இருக்க விரும்புபவரா? அப்படியெனில் ஐம்பது வயதிலும் அழகாக தோற்றமளிப்பதற்கான சில வழிகள் இதோ...

• உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக தோலுக்கு நன்மை தரக் கூடிய ஸ்ட்ராபெர்ரி, நீர்ச்சத்து நிரம்பிய கீரை வகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மருத்துவ குணமிக்க, இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.

• தலைமுடியை சரியாக கவனிக்க வேண்டும். தலைமுடிக்கு டை அடிக்க விரும்பினால் அதன் வண்ணத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவும். சாதரணமாக 60-வயதை கடந்த பின்னர் டை அடிப்பது செயற்கையாகவே தெரியும்.

• தலைமுடியின் நீளத்தை கவனிக்கவும். குறைந்த நீளத்தையுடைய தலைமுடி அதிக நீளமுடைய தலைமுடியை விட நல்ல தோற்றத்தை கொடுக்கக் கூடியதாகும். பொதுவாகவே தோள்பட்டைக்கு மேலே முடி இருப்பது நன்கு பொருத்தமானதாக இருக்கும்.

• எடையை சரியாக பராமரித்து வர வேண்டும். சரியான உணவு முறைகளும், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதும், உடல் எடையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.

• இந்த வயதில் அதிகப்படியான மேக்-கப் தவிர்ப்பது நல்லது. வயதாகும் போது குறைந்த அளவு மேக்-கப் தான் அழகாகவும், இயற்கையானதாகவும் இருக்கும். நல்ல வெளுப்பாக இருந்தால் கண்ணிமைகளுக்கும், கண்ணின் வெளிப்பகுதிகளுக்கும் பிரௌன் அல்லது கிரே நிறத்தில் வண்ணம் கொடுக்கலாம். கருமை நிறத்தில் இருந்தால், கருப்பு நிற மையை பயன்படுத்த வேண்டாம்.

Friday, March 14, 2014

சருமத்தை அழகாக்கும் அவோகேடா

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் துணைப் புரிகிறது. இந்த பழத்தில் ஸ்டெரோலின் என்னும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது.

இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறைந்ததால் தான், முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே அழகான சருமத்தை பெறுவதற்கு அவோகேடோவை அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

• இந்த ஃபேஸ் பேக்கில் அவோகோடோவுடன், உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, சிறிது தேனையும் ஊற்றி, முகத்திற்கு தடவினால், முகம் நன்கு ஈரப்பசையுடன் பொலிவோடு மின்னும்.

சருமத்தை அழகாக்கும் அவோகேடா

•  அவோகேடோ ஸ்கரப் பொதுவாக ஸ்கரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, பொலிவற்று காணப்படும் சருமத்தை பொலிவோடு வைக்க உதவும். இத்தகைய ஸ்கரப்பை வெண்ணெய் பழத்தை வைத்து கூட செய்யலாம். அதற்கு வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது உப்பு சேர்த்து, முகத்தில் தடவி, 2-4 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• இது சருமத்தை அழகாக்க செய்யப்படும் மற்றொரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கில் கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் வேக வைத்துள்ள அவோகேடோவின் கூழை சேர்த்து, சிறிது தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

•  அவோகேடோவை மசித்து, முகத்தில் பூசி, பின் சிறு கற்களை கொண்டு, ஸ்கரப் செய்யும் போது முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பொலிவு பெறும்.

• பொதுவாக மசாஜ் செய்வதால், நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் அவோகேடோ எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால், சருமம் நன்கு ஈரப்பசையுடன், இருக்கும். மேலும் இந்த எண்ணெயை உதட்டில் தடவினால், உதடு மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் மாறும்.